Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 12, 2015

Unknown

ஹைராத் வித்தியாலயத்தின் அபிவிருத்தியில் NFGG கவனம் செலுத்தியுள்ளது

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)


புதிய காத்தான்குடி கைராத் வித்தியாலயத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதிநிதிகள் விஜயம் ஒன்றை கடந்த (09.03.2015) அன்று மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின்போது NFGGயின் காத்தான்குடி பிரதேச தலைமைத்துவசபை உறுப்பினர்களான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், MACM.ஜவாஹிர், MHA.நஸீர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர் அனீஸா பிர்தௌஸ் ஆகியோருடன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Read More
Unknown

புதிய தலைமுறை அலுவலகம் மீது குண்டு வீச்சு

சென்னையிலிருந்து ஒளிபரப்பாகிவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது இன்று அதிகாலையில் வெடி குண்டு வீசப்பட்டது.
அதிகாலை மூன்று மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் டிபன் பாக்ஸ் போன்ற பாத்திரத்தில் பொருத்தப்பட்ட குண்டுகளை அலுவலகத்தின் மீது வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. பொருட்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த அலுவலகத்தின் முன்பாக பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன.
Read More
Unknown

கட்டாரில் “ இறைத் தரிசனம் " என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி) 


  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  (12-03-2015) வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
Read More
Unknown

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா நாளை



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா 13-03-2015 நாளை வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
Read More