Featured Home (TOP)

Recent Comments

Sunday, April 12, 2015

Unknown

அல்-அதாலா பௌண்டேஷன் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் பெறுவதற்கான உதவி



ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி



காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11.04.2015) PMGGயின் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்கிய அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் HM. ஜாபீர் நளீமி, அல்-கிம்மா நிறுவனத்தைச் சேர்ந்த MU. பசீர்  மௌலவி, NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி உட்பட அல்-அதாலா பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி, வித்யாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கான நிதியுதவியினை ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனம் வழங்கியது.
இதன்போது மேற்படி குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 20 பயனாளிகளுக்கு அதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை எதிர்காலத்தில் அல்-அதாலா பௌண்டேஷன், மேலும் பல பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வின்போது தெரிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.








Read More

Saturday, April 11, 2015

Unknown

அக்குறனை ஜாமிஅஹ் றஹ்மானிய்யஹ் அறபுக் கல்லூரியின் 2015-2016 புதிய மாணவர்கள் அனுமதி பற்றிய விபரம்



அக்குறனை ஜாமிஅஹ் றஹ்மானிய்யஹ் அறபுக் கல்லூரியின் 2015-2016 புதிய மாணவர்கள் அனுமதி பற்றிய விபரம் இத்துடன் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.



Read More
Unknown

அமைச்சா் அமிரலியினால் 25 சமுா்த்தி பயனாளிகளுக்கு கடனுதவி

(-எம்.எச்.எம்.அன்வர்-)

எந்த உத்தியோகத்தருக்கும் கிடைக்காத வறிய மக்களுடன் வேலை செய்யும் பாக்கியம் திவிநெகும என கூறப்படும் சமுர்த்தி  உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ளது அதை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் இவ்வாறு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாலவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார் 

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திரிய சவிய  கடன் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலாளர் எஸ்எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார் 
Read More
Unknown

யாழ். ஊடகவியாளர்கள் மீது பொலிசார் மேற்கொள்ளும் அடாவடி அச்சுறுத்தல்களுக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் வன்மையான கண்டனம்

(ஊடக அறிக்கை - கிழக்கு ஊடக சங்கம்)

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் த. வினோஜித், ஹிரு தொலைக்காட்சி செய்தியாளர் த. பிரதீபன் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் ஸ்ரீ மயூதரன் ஆகியோர் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிசார் சிவில் உடையணிந்தவர்களாக மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து வழி மறித்து கத்தியால் குத்திக் கொலை செய்ய எத்தனித்த சம்பவம் தொடர்பில் கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பான கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Read More