Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 14, 2015

Unknown

மட்டு -மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிருவாகத் தெரிவுக் கூட்டத்தில் - ஓட்டமாவடி பிரதேச சம்மேளன நிருவாகிகள் எவரும் பங்கேற்கவில்லை.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் புனரமைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இம் மாவட்ட சம்மேளனம் அமையப்பெறும். கிராம மட்டங்களில் அமைக்கப்படும் இளைஞர் கழகங்களில் இருந்து பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சம்மேளனம் செயற்திறன் மிக்க இளைஞர்களை கொண்டு நிறுவப்பட்டு மாவட்ட சம்மேளன நிருவாக தெரிவிற்காக தலைவர், உபதலைவர், உபசெயலாளர்,பொருளாளர்,அமைப்பாளர்,உப அமைப்பாளர் என்ற அடிப்படையில் பிரதான ஆறு அங்கத்தவர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
Read More

Sunday, April 12, 2015

Unknown

மஹிந்தவின் 2ஆவது அரசியல் பிரவேசம் மே 01 இல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இரண்டாவது அரசியல் பிரவேசம் சர்வதேச தொழிலாளர் தினமான மே 01ம் திகதி இடம்பெறுமென அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளதாக சிங்களப் பத்திரிகை  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக் ஷவை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் கட்சிகளும் அமைப்புக்களும் மே 01ஆம் திகதி மே தினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துகின்றனர். இவற்றில் மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாசு விமல் கம்மன்பில உட்பட இந்த அரசியல் முன்னணி தனது மே தினக் கூட்டத்தை கிருலப்பனை விளையாட்டுத்திடலில் நடாத்தவுள்ளது. 

Source - Virakesarry
Read More
Unknown

உணவகங்களில் திடீர் சோதனை: 15 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சோமசிறி தெரிவித்தார்.

ஏப்ரல் 06ஆம் திகதி முதல் மே மாதம் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உணவு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையிட்டு இந்த திடீர் சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை 80 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 15 நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
Read More
Unknown

அல்-அதாலா பௌண்டேஷன் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் பெறுவதற்கான உதவி



ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி



காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11.04.2015) PMGGயின் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்கிய அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் HM. ஜாபீர் நளீமி, அல்-கிம்மா நிறுவனத்தைச் சேர்ந்த MU. பசீர்  மௌலவி, NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி உட்பட அல்-அதாலா பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி, வித்யாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கான நிதியுதவியினை ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனம் வழங்கியது.
இதன்போது மேற்படி குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 20 பயனாளிகளுக்கு அதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை எதிர்காலத்தில் அல்-அதாலா பௌண்டேஷன், மேலும் பல பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வின்போது தெரிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.








Read More