Featured Home (TOP)

Recent Comments

Monday, July 20, 2015

Unknown

அடுத்த ஆட்சியில் தீர்வைப் பெறுவதற்கு கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்

தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அவர் மூலமாக நாம் முழுமையான அரசியல் தீர்வைப் பெறவேண்டும். 
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் மிக்க கட்சியாக 22 உறுப்பினர்ளைப் பெறவேண்டும். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும். 
இதுவே தெளிவான இலக்கு. ஒவ்வொரு தமிழ் மகனும் இந்தத் தெளிவைப் பெற வேண்டும். புத்திஜீவிகள் தெளிவுபடுத்தவும் வேண்டும்.
இவ்வாறு மாவடிமுன்மாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பா. அரியநேந்திரன் கூறினார்.
Read More

Sunday, July 19, 2015

Unknown

காத்தான்குடி கடற்கரை திடலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை தொடர்பான சில அவதானங்களும் திருத்தங்களும்

(எம்.எச்.எம்.அன்வர்)

அல்லாஹ்வின் அருளால் நேற்றைய தினம் இஸ்லாமிக் சென்றர் காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மிகச் சிறப்பாக இடம்பெற்றது இருப்பினும் சரியாக 6.15 க்கு இடம்பெறவிருந்த இந்த தொழுகை சற்று தாமதித்து அதாவது 10 நிமிடங்கள் கழித்தே ஆரம்பிக்கப்பட்டிருந்தும் பலருக்கு தொழுகை கிடைக்காமல் போனதையும் அவதானிக்க முடிந்தது

ஆயிரக்கணக்கான ஆண் பெண்கள் கலந்துகொண்ட இந்த ஈதுல் பித்ர் தொழுகைக்கு மௌலவி எம் எம் மன்சூர் மதனி அவர்களால் தொழுகை நடாத்தப்பட்டு குத்பாவும் இடம்பெற்றது இந்த குத்பாவில் புனித மக்காவில் சீயாக்களின் ஊடுருவல் அண்மையில் இடம்பெற்ற விதம் தொடர்பாகவும் அதனை சவுதி அரேபியா உள்ளிட்ட கூட்டுப்படைகள் முறியடித்த விதம் இதனால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட்ட அந்த செயல் பாராட்டத்தக்கது தொடர்பாக தெரிவித்ததுடன் ஒற்றுமைப்பட்ட முஸ்லிம் சமூகமாக மாறவேண்டிய தேவை இன்று உள்ளதாகவும் ஆனால் இன்று முஸ்லிம்கள்தான்  பாரியளவு பிரிந்து உலகத்தில் செயற்படுவதாகவும் குத்பாவின்போது தெரிவித்தார்

சில அவதானங்களும் திருத்தங்களும்

01; 6.15 மணியை சரியாக எதிர்பார்த்து தொழுகைக்கு வந்திருந்த நபர்கள் வாகன நெரிசலால் இடையில் தாமதாமாகியும் வருவதை காணமுடிந்தது இதற்கு தொண்டர்கள் ஆங்காங்கு போடப்பட்டபோதிலும் மோட்டார் சைக்கில்களும் ஆட்டோக்களும் இடையிடையே நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு தடையாக இவை அமைந்திருந்தன இறுதி நேரத்தில் ஓடோடி வந்து தொழுகையில் கலந்துகொண்டனர் இதை பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் 'விரைவாக செல்லுங்கள் ஆரம்பித்தவிட்டது' என தெரிவித்தனர் எதிர்காலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக  மாற்றீடு ஏற்பாடு ஒனிறினை செய்து இலகுவாக செல்லக்கூடியதாக பாதையை ஒழுங்குபடுத்த வேண்டும்

02. பெண்களுக்கான பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்ட போதிலும் பெண்களும் ஆண்களும் சந்திக்கின்ற சூழலும் இங்கு காணப்பட்டிருந்தது இதற்கான மாற்று ஏற்பாடு ஒன்றினை இஸ்லாமிக் சென்றர் எதிர்காலத்தில்  செய்தால்  சிறப்பாக இருக்கும்

03. மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் சுபஹ் தொழுகைக்கு சமூகமளித்து அதனைத் தொடர்ந்தே பெருநாள் தொழுகை இடம்பெறுகின்றது அந்த நடைமுறையினையும் எமது பிரதேசத்தில் அமுல்ப்படுத்தினால் சுபஹ் தொழுகையுடன் பெருநாள் தொழுகையும் உரிய நேரத்தில் கிடைக்கும்

04. மௌலவி அவர்கள் குத்பா ஓதிக்கொண்டிருந்த Nபுhது  ஒலி பெருக்கி இரைச்சலுடன் காணப்பட்டதால் சரியாக கேட்கமுடியாமல் போனதையும் அவதானிக்க முடிந்நது சற்று நேரத்தில் அது சீராக்கப்பட்டதையும் காணமுடிந்தது

இருப்பினும் இஸ்லாமிக் சென்றர் நிறுவனம் பல சிரமங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்கின்ற இந்த செயற்பாட்டிற்கு அல்லாஹ் அனைத்து சகோதரர்களுக்கும் நிறைவான கூலி கொடுப்பதுடன் நபி(ஸல்) அவர்களில் சுன்னத்தான திடலில் தொழும் நடைமுறையில் சில மாற்றங்களை எதிர்காலத்தில் செய்தால்  கலந்து கொள்ளும் எமது சகோதர சகோதரிகளுக்கு இலகுவாகவும் மிகச் சிறப்பாகவும் அமையும் என்பதுடன் பொதுமக்களின் பூரண ஒத்தழைப்பும் தேவை என்பது எல்லோரது எதிர்பாரப்பாகும்

எம்.எச்.எம்.அன்வர்
(ஊடகவியலாளர்)

Read More
Unknown

ஊருக்கு எம்பி வேண்டும் ... உதாசீனம் செய்யாதீர்கள்

ஊருக்கு எம்பி வேண்டும்.... உதாசீனம் செய்யாதீர்கள்...! என்ற தலைப்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக இன்று காத்தான்குடியில் வெளியான துண்டுப் பிரசுரம் இது.




Read More
Unknown

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூட்டு ஸக்காத் வேலைத்திட்டம்

(எம்.எச்.எம்.அன்வர்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூட்டு ஸக்காத் வேலைத்திட்டம் இம்முறையும் மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஐPத் காத்தான்குடியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்

2002 தொடக்கம் 2014 வரை மிக சிறப்பாக இடம்பெறும் இச்செயற்பாடானது இம்முறை இதை மேலும் வடிவமைத்து சென்ற காலங்களை விட கூடுதலான தொகையை ஸக்காத் வழங்குபவர்களிடம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேகரித்து வழங்கவுள்ளதாகவும் தெரிவித்த பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் இதற்கான பூரண ஒத்தழைப்பினையும் ஆதரவினையும் பெரிதும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்

இம்முறை ஸக்காத்தினை வசூலிக்க வெளிநாட்டு சகோதரர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா கட்டார்  டுபாய் லண்டன் போன்ற நாடுகளுக்கு இவர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளதோடு  அவர்களிடம்; எமது ஊர் சகோதரர்கள் ஸக்காத் பங்களிப்பான 2.5 வீதத்தினை கொடுத்து உதவி புரியுமாறும் இந்த திட்டம் மேலும் வளர்ச்சியடைந்து வறுமையான குடும்பங்களுக்கான கடன் பழு, வீடு கட்ட, தொழில் வாய்ப்பினை  ஏற்படுத்திக்கொள்ளவும் இஸ்லாத்தினை ஏற்ற மக்களுக்கு உதவவும் இது பயன்படுவதோடு அல்லாஹ் கூறிய ஸக்காத்தினை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு அவர்கள் சேமித்து வைத்திருந்த தங்கமும் வெள்ளியும் அவர்களுக்கு பழுக்க காய்ச்சி மறுமையில் ஒத்தடமாக வழங்கப்படும் என கூறியுள்ளான் என அல் குர்ஆன் கூறுகிறது எனத்தெரிவித்தார்

அத்துடன் சம்மேளனம் தற்போது வறிய மக்களின்  முக்கிய பிரச்சினையாக காணப்படும் வீடு இல்லாத பிரச்சினைக்கு வீட்டுத்திட்டங்களை செய்து வருவதாகவும் இது அவர்களுக்கான நிரந்தர இருப்பிடமாக அமையும் எனவும் தெரிவித்தார்

இதற்கான தங்களால் வழங்கப்படும் ஸக்காத் நிதியினை வழங்குமாறு வேண்டி நிற்பதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவிக்கிறது

இதன் அடிப்படையில் கட்டார் நாட்டுக்கான வசூலிப்பு நடவடிக்கைகளுக்கு எம் ஐ அப்துல் முபீன் அவர்களும் டுபாய் நாட்டுக்கு பொறுப்பாக மௌலவி எம் ஐ காலிதீன் அவர்களும் சவுதி அரேபியாவுக்கு பொறுப்பாக எம் சி எம் நபீல் அவர்களும் லண்டன் நாட்டுக்கு பொறுப்பாக ஏ சி எம் முபஸ்ஸிர் அவர்களும் சம்மேளனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதோடு அவர்களிடம் கணிசமான ஸக்காத் தொகையினை வழங்கமாறும் இதன்போது தெரிவித்தனர்






Read More