Featured Home (TOP)

Recent Comments

Monday, August 10, 2015

avathani Media Network

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருதொகை மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒருதொகை மருந்து மாத்திரைகளை கொண்டுவந்த நபரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்து மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More
avathani Media Network

துரிதமாக வேலைகள் நடை பெற்றுவரும் காத்தான்குடி ஊர்வீதியின் அபிவிருத்தி

(அபூநிதா)

பல வருடங்களாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த காத்தான்குடி ஊர்வீதியின் அபிவிருத்தி வேலைகள்  தற்போது மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

மிகவும் நெருக்கமாக போக்குவரத்திற்கு கஸ்டமாக காணப்பட்ட இவ்வீதி அகலமாக்கப்பட்ட நிலையில் வடிகாண்களும் சேர்ந்ததாக தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பழைய கல்முனை வீதி என்று அழைக்கப்படும் தற்போதைய ஊர்வீதி பல வருடங்களுக்கு முன்னால் காத்தான்குடியின் பிரதான வீதியாகவும் இருந்து வந்திருக்கிறது. 

இந்த வீதியின் ஊடாக ஆரையம்பதி, மன்முனை, மற்றும் கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களுக்கு பஸ்சேவை இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டு வரும் இந்த வீதியின் ஊடாக இனிவருங்காலங்களில் மக்கள் சிரமமின்றி பயணம் செய்யக்கூடியதாக இருக்கும் 








  

Read More

Sunday, August 9, 2015

avathani Media Network

நூறாணியா வீதி, அலியார் பேக்கரி சந்தியில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டம்

(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று நூறாணியா வீதி, அலியார் பேக்கரி சந்தியில் இடம்பெற்றது.
இப்பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் MHA.நஸீர் அவர்களின் தலைமையில் NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் சகோ, பைசர் அமான் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விஷேட உரையாற்றினார். அத்துடன் NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA, சட்டத்தரணி அஸ்ஹர், குருநாகலில் இருந்து .... முஹம்மத் றியாஸ்,  உள்ளிட்ட பலரும் உரையாற்றினார்கள்.
NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக், அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன் மற்றும் SLMCயின் மத்தியகுழு உறுப்பினர்களான மர்சூக் அஹமது லெப்பை, இல்மி அஹமது லெப்பை உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் அதிகளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏறாவூரில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று ஓடாவியார் வீதி, றிபாய் பள்ளிவாயலின் அருகாமையில் இடம்பெற்றது.





















Read More
avathani Media Network

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவு செய்யப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.

16வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது.

இதன்பொருட்டு, கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுகளில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read More