Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 11, 2015

avathani Media Network

ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் திகதியன்று வெலிப்பன பொலிஸ் பகுதியில் பொலி;ஸ் அனுமதியின்றி கோயில் ஒன்றுக்குள் பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது தேர்தல் சட்டத்தை மீறும்செயலாகும் என்று சுட்டிக்காட்டிய போது ஞானசார தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மத்துகம நீதிவானின் உத்தரவின் பேரில் ஞானசார தேரர் விசாரணை செய்யப்படவுள்ளார்.
Read More
avathani Media Network

தேர்தல் பிரசாரத்துக்கு மதுபானம்! – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுபானம் வழங்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். 
ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மதுபானத்தை விநியோகம் செய்து அரசியல் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்ககுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இதற்கு மேலதிகமாக இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு கலால் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுளேன். குறித்த மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளுக்காக மதுபான விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மதுபானம் விநியோகம் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

தேர்தல் முடிவடையும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம்!- ஆணையாளர் தேசப்பிரிய

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சில வேட்பாளர்களுக்கு விசாரணைகளுக்காக அழைப்பு விடுத்திருந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேர்தல்களுக்கு முன்னதாக விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

எனினும், தேர்தல் முடிவடையும் வரையில் வேட்பாளர்களை அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில வேட்பாளர்கள் தம்மிடம் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்ததனை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உறுதி செய்யவில்லை.
Read More
avathani Media Network

றகர் வீரர் கொலை; தடுமாறும் இலங்கை செஞ்சிலுவை சங்கம்!

பிரபல்யமான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீன், கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான வாகனம் தொடர்பில் அச்சங்கம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆரோக்கிய பணிகளுக்கு போக்குவரத்து வசதிக்கு உதவி வழங்கும்படி கேட்டு சிரிலிய பவுண்டேசனின் செயலாளரான குமாரி திஸாநாயக்க எமது தலைவருக்கு ஓர் உத்தியோகப்பூர்வ வேண்டுகோளை கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 22 ஜூன் 2011 அன்று இந்த வேண்டுகோள் தொடர்பில் மேல் நடவடிக்கை பற்றி ஆலோசனை வழங்கும்படி அப்போது சமூக நலன்புரி அமைச்சர் பீலிக்ஸ் பெரோராவுக்கு எமது தலைவர் உத்தியோபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பினார்.
27 ஜூன் 2011 அன்று முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தனது சம்மதத்தை ஆதரவையும் தெரிவித்தார். மேலும் அவர், சிரிலிய சவியா பவுண்டேசனுக்கு உதவி வழங்குவது இலங்கையில் மிகவும் பாதிப்படைந்த நிலையிலுள்ள மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த அரும் வாய்பை;பை எனவும் கூறியிருந்தார்.
இதன்படி. WP-KA 0642 இலக்க டிபெண்டர் வாகனம் சிரியல சவியா பவுண்டேசனின் தலைவியான முதல் பெண் சிராந்தி ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
20 ஜனவரி 2015 அன்று இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் போக்குவரத்து முகாமையாளர் இந்த வாகனத்தை சிரிலிய பவுண்டேசனிடமிருந்து மீளப்பெற்றுக்கொண்டார்.
ஓகஸ்ட் 2011 இலிருந்து இந்த வாகனம் இவ்வருடம் மீளப்பெறும் வரையிலும் எவ்வாறு பராமரிக்கப்பட்டது, என்னென்ன செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட என்பது பற்றி இலங்கை செஞ்சிலுவை சங்கம் அறியாது என்று இத்தால் தெரிவிக்கின்றோம்.
இந்த வாகனத்தின் நிறம் மாற்றம் பற்றி தகவல் வழங்கும்படி குற்றச்செயல் விசாரணை பிரிவு எமது தலைவரிடமும் பணிப்பாளர் நாயகத்திடமும் அறிக்கை தருமாறு கேட்டதற்கு இணங்க தெரிந்த தகவல்கள் அனைத்தையும் வழங்கியது. இந்த வாகனம் இப்போதுகுற்றச்செயல் விசாரணைப்பிரிவிடம் உள்ளது.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் இவ்விடயம் குறித்து துல்லியமான தகவல்களை தொடர்ந்து வழங்கும்.
Read More