Featured Home (TOP)

Recent Comments

Sunday, December 13, 2015

avathani Media Network

பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் தொழுகை பயிற்சி முகாம்

அல்குர்ஆன் பாடசாலை என்பது வெறுமனே அல்குர்ஆனை ஓதப்பயிற்றுவிப்பதோடு தமது பணியை சுருக்கிக் கொள்ளாமல் சிறார்கள் தமது அன்றாட வாழ்வை ஒழுங்கு படுத்தவும் இஸ்லாமிய வாழ்க்கையை பேணி நடக்கவும் வழிகாட்ட வேண்டும். அந்த வகையில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காக கொண்டு தொழுகை பயிற்சி முகாம் ; (Training Camp On Salath) ஒன்றை 10-12-2015 வியாழக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04.30 மணிவரை காத்தான்குடி கடற்கரை வளாகத்தில் நடாத்தியது.
        பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ;nஷய்க் யு.சு.ஆ அஸ்ஹர் நளீமியின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தொழுகை பயிற்சி முகாமில் வுழு, தயம்மும் செய்யும் ஒழுங்குகள்,  அதான், இகாமத் சொல்லும் முறைகள், தொழும் ஒழுங்கு, அதில் ஓதும் அவ்றாதுகள், தொழுகை முடிந்த பின் மொழியும் திக்ர்கள் என பல்வேறு விடயங்கள் காணொளிகள், பயிற்சிகள், விளையாட்டுக்கள், கார்டூன்களினூடாக ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பயிற்றுவிக்கப்பட்டது.
         பிஸ்மியில் கல்வி பயிலும் 7 வயதை அடைந்த மாணவர்களில் 105 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதோடு தாம் இன்று முதல் எம் மீது கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதாக உறுதிமொழி வழங்கினர். அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் ஆ.டீ.ஆ பிர்தௌஸ் நளீமி இம்முகாமின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தியதோடு இவ்வேளைத்திட்டம் முழு நாடு தழுவிய ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறார்களுக்காக அழகிய முறையிலும், எளிய நடையிலும் படவிளக்க வழிகாட்டலுடன் வடிவமைக்கப்பட்ட 'வாருங்கள் தொழுவோம்' என்ற புத்தகமும் பிஸ்மி குழுமத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

















Read More
avathani Media Network

எலிக்காய்ச்சலால் 3,890 பேர் பாதிப்பு

எலிக்காய்ச்சல் கடந்த மாதத்தில் மாத்திரம் 622 பேர்க்கு பீடிக்கப்பட்டுள்ளதாகவும் வருவடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 3,890 பேர்க்கு எலிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளரான, டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
இந்த நோய் குறித்து அடையாளம் காணப்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒருவகை பக்றீரியா மூலமாக இந்தக் காய்ச்சல் பரவுவதுடன் நோயால் பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் மூலமாக இந்தப் பக்றீரியா வெளிச்சூழலுடன் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

இடியுடன் கூடிய கன மழை : மின்சாரம் மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய கன மழையின் தாக்கத்தினால், வீடுகளில் செயற்பட்ட மின்சாரம் மற்றும் தொழிநுட்ப உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.
குறித்த இடியுடன் கூடிய கன மழையினால் தாழ்நிலை பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வீதிகள், பாடசாலைகள் வெள்ள நீரில் மூழ்;கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். ஊடக அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் மட்டும் ஊடகவியலாளர்கள் 44 பேர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களை படுகொலைச்செய்த யுகம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அந்த யுகத்தில் படுகொலைச்செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடுவழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Read More