Featured Home (TOP)

Recent Comments

Monday, January 18, 2016

avathani Media Network

"கிழக்கு மாகாண ஆட்டோ சாரதிகளுக்கு அநீதியிழைக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது"

"எந்தவொரு அரச நிர்வாக கட்டமைப்பும் பொது மக்களிடமிருந்து வரிகளை அறவிடும் போது அதற்கு பகரமாக பெறுமதியான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். அந்த வகையில்மேலதிக எந்த சேவைகளையும் வழங்காமலும், வேறு எந்த நியாயங்களுமின்றியும் கிழக்கு மாகாண ஆட்டோ சாரதிகளிடமிருந்து மேலதிக வரியினை அறவிடுவதற்கு கிழக்கு மாகாணசபை தீர்மானித்திருப்பதானது எற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதனை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது" என நல்லாட்சிக்கான தேசியமுன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.


காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகளோடு நடாத்தப்பட்ட விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காத்தான்குடியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் அலுவலகத்தில் நேற்று(17.01.2016 )நடைபெற்ற இந்த சந்திப்பில் NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மானோடு அதன் காத்தான்குடி பிராந்திய சபையின் உறுப்பினரும்முன்னாள் நகர சபை உறுப்பினருமான AGM ஹாரூன் அவர்களும் கலந்து கொண்டார்.


கிழக்கு மாகாண முச்சக்கர வண்டி ஓட்டுனர்களிடமிருந்து மேலதிக வருடாந்த பதிவுக் கட்டணமாக 800 ரூபாவினை இவ்வருடமுதல் அறவிடுவதற்கு கிழக்கு மாகாண சபைதீர்மானித்திருந்தது.
இது தொடர்பான அறிவித்தல்கள் கிழக்கு மாகாண சபையினால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன.
2015 டிசம்பா 31 க்கு முன்னதாக முச்சக்கர வண்டி சாரதிகள் இக்கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை நிர்வாகம்  தொடச்சியாக வலியுறுத்தி வந்தது.
ஏற்கனவே உள்ளூராட்சி  மன்றங்களுக்கு தாம் வருடாந்தம் வரி செலுத்தி உத்தியோகபூர்வ அனுமதியினைப் பெற்று வருகின்ற போதிலும் அதற்குரிய முறையான சேவைகளைஉள்ளூராட்சி மன்றங்கள் இது வரை திருப்திகரமாக செய்யாத நிலையில் கிழக்கு மாகாண சபை இவ்வாறு மேலதிக வரியை தம்மீது திணிப்பது பெரும் அநியாயம் என காத்தான்குடிமுச்சக்கர வண்டி சாரதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


அத்தோடு 800 ரூபாவிலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வரி எதிர் வரும் காலங்களில் இன்னும் பல மடங்குகளாக அதிகரிக்கப்படும் என தாம் அஞ்சுவதாகவும், தாம் ஏற்கனவே பலபொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியில் இத்தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் தம்மால் சுமக்க முடியாத சுமையாக இவ்வரிச்சுமைகள் அமைகின்றன எனவும் அவர்கள்கூறுகின்றனர். அத்தோடு இலங்கையில் இயங்குகின்ற மாகாண சபைகளில் வேறு எந்த சபைகளினாலும் இவ்வாறான மேலதிக வரி முச்சக்கர வண்டி சாரிரதிகள் மீது திணிக்கப்படவில்லையெனவும் கிழக்கு மாகாண சபையினால் மாத்திரமே இந்த வரி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள் இது தம்மீது இழைக்கப்படும் பாரிய அநியாயமாகும் எனவும்வலியுறுத்தி வருகின்றனர். 


தாம் எதிர்நோக்கும் நாளாந்தப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்தப் புதிய வரி அறவீட்டினை மீள் பரிசீலிக்குமாறு கிழக்கு மாகாண சபை உயர் அதிகாரம் கொண்டோர் தொடக்கம்சகல மட்டத்தினருடமும்  முச்சக்கரவண்டி சாரதிகள் கடந்த ஆண்டு முதல் பல்வேறு மனுக்களை சமர்ப்பித்து வந்தனர். அவை எவற்றுக்கும் பதிலளிக்காது டிசம்பா 31 ஆம் திகதிக்குமுன்பாக குறித்த மேலதிக வரிகளை செலுத்தியேயாக வேண்டும் என கிழக்கு மாகாண சபையினால் கொடுக்கப்படும் அழுத்தம் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் தமது பிரச்சினைகளைவெளிக்கொணர்ந்து நியாயம் கேட்குமுகமாக ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை கடந்த டிசம்பர் 28ஆம் திகதி காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கம் நடாத்தியது. இதன்போதுஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்ளடங்கலாக கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண சபை பிரதிநிதகள், மாவட்ட பாராளுமன்னறப் பிரதிநிதிகள் என சகலருக்கும் தமக்கு நியாயம் பெற்றுத்தருமாறி கோரி தமது மனுக்களை அவர கள் கையளித்திருந்தனர். ஊடகங்களிலும் இந்த விடயம் பரவலாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.


குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து ஆட்டோ சாரதிகளின் கோரிக்கையின் நியாயத் தன்மையினைப் புரிந்து கொண்ட NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,  காத்தான்குடி ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு உரையாடியதோடு தம்மாலான முழு ஒத்துழைப்பையும் இவ்விடயத்தில் வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.


இந்தப் பின்னணியிலேயே ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு நேற்து நடை பெற்றது.
அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது.
 "கிழக்கு மாகாணத்தைச் சேந்த 3 மாவட்டங்களலும் மொத்தமாக 26000த்திற்கும் அதிகமானோர் ஆட்டோ ஓட்டுனர்களாக தொழில் செய்கின்றனர். அதனடிப்படையில் பார்க்கும் போது இந்தமேலதிக வரி அறவீட்டின் மூலமாக கிழக்கு மாகாண சபை நிர்வாகம் இரண்டு கோடி ரூபாய் வரையான தொகையினை மேலதிக வருமானமாக பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது.
எந்த வொரு அரச நிர்வாக கட்டமைப்பும் பொது மக்களிடமிருந்து வரியினை அறவிடும்போது அது ஏன் அறவிடப்படுகிறது, அதற்குப் பகரமாக மக்களுக்கு கிடைக்கும் சேவைகளும்நன்மைகளும் என்ன என்ற விடயங்களைத் தெளிவு படுத்தியாக வேண்டும். அந்த வகையில் இந்த மேலதிக வரி அறவீட்டின் மூலமாக பெருந்தொகை மேலதிக வருமானம் என்கின்றபாரிய பிரயோசனத்தை அடைந்து கொள்ள முயற்சிக்கின்ற கிழக்கு மாகாண சபை , இது ஏன் அறவிடப்படுகிறது அதன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எவைஎன்ற ஏற்றுக் கொள்ளும் படியான எந்த விளக்கங்களையும் தரவில்லை.


உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளால் வருடாந்தம் செலுத்தப்படுகின்ற வரிகளுக்கான முழுமையான சேவைகள் கூட இதுவரை ஆட்டோ சாரதிகளுக்கு கிடைக்காதநிலையில் கிழக்கு மாகாண சபை மாத்திரம் இவ்வாறான ஒரு மேலதிக வரியினை திணிப்பதானது பெரும் அநியாயமாகும் இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 


அரச நிர்வாக கட்டமைப்பு தமது வருமானத்தை அதிகரிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தி செயற்படக்கூடாது மக்களிடமிருந்து அறவிடப்படும் ஒவ்வொரு ரூபா வரிப்பணத்திற்கும் என்னநடக்கிறது என்று பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளதோடு கிடைக்கும் ஒவ்வொரு வருமானத்தையும் மக்களுக்கு சேவைகளாக வழங்க வேண்டும். இந்த மேலதிக வரி தொடர்பில் ஆட்டோசாரதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி உரிய மேலிடங்களுக்கு எடுத்துச் சொல்லி இது தொடர்பில் பொருத்தமான தீர்வினைக் காண்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்." எனவும் அப்துர் ரஹ்மான் தெரிவத்தார்.


இந்த விடயம் தொடர்பாக தாம் அனுப்பிய ஏராளனமான மனுக்கள் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் எவ்வித பதில்களையும் தமக்கு இதுவரை  தராத நிலையில் தமது விடயத்தில்அக்கறை கொண்டு எமது பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்பதற்கு முன்வந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு நன்றிகளை தெரிவித்த காத்தான்குடி ஆட்டோ சங்கப்பிரதிநிதிகள் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் AGM ஹாறூன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.







Read More

Sunday, January 17, 2016

avathani Media Network

2016ம் ஆண்டிற்கான தரம் 1 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
புதிய காத்தான்குடி, றிஸ்வி நகர், மட்/மம/ அல் இக்பால் வித்தியலத்தின் 2016ம்
ஆண்டிற்கான தரம் 1 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, கணணி இயந்திரம்
மற்றும் LED தொலைக்காட்சி பெட்டி கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ்
VM. ஹனீபா அவர்களின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (14.01.2016)
அன்று நடைபெற்றது,

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும், கௌரவ அதிதிகளாக அல்ஹாஜ் MM. அப்துல் கபூர் (மதனி, BA) (ISA - இஸ்லாம்), அல்ஹாஜ் M. அலாவுதீன் ஆசிரியர்
(ISA - ஆரம்ப கல்வி), உளவள ஆலோசகர் முஹைதீன் ஷாலிஹ், மஸ்ஜிதுஸ் ஸலாஹ்
பள்ளிவாயல் தலைவர் ஜனாப் I. ஜனாப்தீன், மற்றும் மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல்
இமாம் மௌலவி M. மர்சூக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர்
ஷிப்லி பாறூக், இன்றைய இந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது உண்மையில் ஒரு
குழந்தை தனது வாழ்க்கையினை மாற்றி முன்னேரப்போகின்ற ஆரம்ப படியின் முதல் நாளாக
இன்றைய நாள் இருக்கின்றது.

அந்த வகையில் இன்று இப்பாடசாலையில் 30 மாணவர்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது இப்பிரதேசத்தின் கல்வி ஒரு பாரிய வளர்ச்சியினை முன்நோக்கி செல்கின்றது என்பதனை காட்டுகின்றது, ஏனெனில் 3, 4 வருடங்களுக்கு முன்னர் இப் பாடசாலையின் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆகத்தான் காணப்பட்டது, ஆனால் இன்று 118 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் என்றால் அது மிகப்பாரிய அளவிலான வளர்ச்சியாகும்.

இப் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் VM. ஹனீபா அவர்கள் இப் பாடசாலை கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற என்னத்துடன் தன்னால் முடியுமா முழு முயற்சியினை மேற்கொண்டு அதற்குரிய நபர்களை அனுகி இப் பாடசாலையின், மாணவர்களின் வளர்ச்சிக்கும், மற்றும் இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும் அயராது பாடுபடுகின்றார்.
அந்தவகையில் கடந்த வருடம் 2015 கிழக்கு மாகாணசபை நிதி ஒதிக்கீட்டில் இருந்து
பாடசாலைக்கு கணணி இயந்திரம் அதேபோல் மாணவர்களுக்கு பல கல்விசார் விடயங்களை
காண்பிப்பதற்கு LED தொலைக்காட்சி பெட்டி ஒன்றினையும் பெற்று தருமாறு
வேண்டியிருந்தார், அதன் அடிப்படையில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு எனது மாகாணசபை நிதி ஒதிக்கீட்டில் இருந்து 115,000.00 ரூபாயினை ஒதிக்கீடு செய்து
கணணி இயந்திரம் மற்றும் LED தொலைக்காட்சி பெட்டி என்பனவற்றினை இன்று
கையளித்திருக்கின்றேன். இன்று பாடசாலை அதிபர் அவர்கள் பாடசாலைக்கு ஒரு போட்டோ
கொப்பி இயந்திரம் ஒன்றினை பெற்றுதருமாறு மீண்டும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார், இன்ஷாஅல்லாஹ் 2016ம் ஆண்டின் கிழக்கு மாகாணசபை நிதி ஒதிக்கீட்டில் இருந்து ஒரு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றினை பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்கின்றேன்.

மேலும் பொதுவாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலையினை யாரும் கண்டு கொல்லாமையினால் இப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி பின்னடைந்து செல்கின்றது.
கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும்
மாணவர்கள் மிக திறமையானவர்கள் அதனை வளர்ப்பதற்கு வளப்பற்றாக்குறையாக
காணப்படுகின்றது இதனால் அவர்களது கல்வி பின்னடைந்து செல்வதே தவிர அவர்கள்
திறமையற்றவர்கள் என கருத முடியாது, அவர்கள் மிக திறமையானவர்கள், இங்கு
நடைபெற்ற நிகழ்சிகளை அவதானித்த பொழுது ஒவ்வொரு மாணவர்களும் தனது திறமைகளை
சிறந்த முறையில் வெளிக்காட்டினார்கள். எனவே இப்பிரதேச மாணவர்கள் கல்வியில் கட்டாயம் வளர்ச்சியடைய வேண்டும் இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் நகர்ப்புறத்தினை விட்டு இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எதிர் காலத்தில் இப் பாடசாலையின் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முடியுமான அணைத்து தேவைகளையும் செய்துதருவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்கின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் தனது உரையில் அவர் குறிப்பிடுகையில் ஒவ்வொரு தாய்மார்களும் தமது
பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் மிகக்கூடிய அக்கறை செலுத்த வேண்டும். நான் ஆற்றுக்கு அப்பால் உள்ள படுவான்கரை பிரதேசங்களுக்கு செல்கின்றபோது
அவதானிக்ககூடிய ஒரு விடயம் என்னவென்றால் மாணவர்கள் தமது கல்வியினை தொடர்வதற்கு குறைந்த பட்சம் வெள்ளை ஆடை அணிவதற்கு கூட கஷ்டப்படுகின்றார்கள், அவ்வாறான நிலையில் அப்பெற்றோர்கள் தமது பிள்ளைகள் ஒரு வைத்தியராக, பொறியியலாளராக,
கல்விமான்களாக ஆகவேண்டும் என்ற வைராக்கியதுடன் பாடுபடுகின்றார்கள்.

மட்டக்களப்பில் பணிபுரியும் எத்தனையோ உயர் அதிகாரிகளில் அனேகமானவர்கள்
ஆற்றுக்கு அப்பால் உள்ள படுவான்கரை பிரதேசங்களில் உள்ளவர்களாகவே
இருக்கின்றார்கள். அதற்கு காரணம் அங்குள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகள்
கல்வியில் உயர் நிலை அடைய வேண்டும் என்ற சிந்தனையுடனும், தியாகத்துடன்
பாடுபடுகின்றார்கள். கடந்த 2015 ஆண்டு உயர்தர பரீட்சையில் மருத்துவபீடத்திற்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவியின் பெற்றோர்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்கள், அவர்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக மிகவும் கஷ்டப்பட்டு தனது வாழ்க்கையினை நடாத்துகின்றனர், அவ்வாறு கஷ்டப்பட்டு தனது
பிள்ளைகளின் கல்விற்காக பாடுபடுகின்ற எத்தனையோ பெற்றோர்களை நாம் காணலாம், எனவே இங்குள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் தியாக சிந்தனையுடனும், அர்பணிப்புடனும்,
தியாகத்துடனும் பாடுபட்டு தனது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினை வழங்கி அவர்களை
சிறந்ததோர் கல்விமான்களாக வளர்த்தெடுத்து உங்களுக்கும், இந்த பிரதேசத்திற்கும், இந்த நாட்டிற்கும் நற்பெயரையும் கௌரவத்தினையும் பெற்று
தரக்கூடிய நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என தனது உரையில் கேட்டுகொண்டார்.











Read More
avathani Media Network

வலம்புரி கவிதா வட்டத்தின் 24வது பெளர்ணமி கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 24வது பெளர்ணமி கவியரங்கு கவிஞர் புரட்சிக்கமால் எம்.எம். சாலிஹ் அரங்கு வலம்புரி கவிதா வட்டத்தின் 24து பெளர்ணமி கவியரங்கு கவிஞர் புரட்சிக்கமால் எம்.எம். சாலிஹ் அரங்காக எதிர்வரும் 23.01.2016 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு-12 குணசிங்கபுர அல்-ஹிக்மா கல்லூரியில் கவிஞர் முல்லை வீரக்குட்டி அவர்களின் தலைமையில் நடைபெறும். இவ்வரங்கில் ‘’பல்கலைவேந்தர்’ கலைவாதி கலீல் அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு, கவிஞர் புரட்சிக்கமால் எம்.எம். சாலிஹ் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார் இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் என்.நஜ்முல் ஹுசைன் தலைவர் 0714929642இளநெஞ்சன் முர்ஷிதீன் செயலாளார் 0777388149 ஆகியோருடனதொடர்புக் கொள்ளலாம். கவிதைகள் 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்கவேண்டும்
Read More
avathani Media Network

முஹாசபா வின் 4ஆவது பிரசுரம் அந் நிஸா சகோதரிகளால் வெளியீடு...

முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது "தூய தேசத்தை நோக்கிய பயணத்தின்" 04 ஆவது வெளியீடான " பாத்திமாக்களே உங்களுக்குத்தான் " பிரசுரம் இன்று(17.01.2016) ஞாயிறன்று முஹாசபா அந் நிஸா மகளீர் குழு சகோதரிகளால்   விநியோகம் செய்யப்பட்டது..
முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது செயற்திட்டங்களில் ஒன்றான " தூய தேசத்தை நோக்கிய பயணத்தின்" 04 வெளியீடு இதுவாகும்.
தற்காலத்தில் சமூக பணிகள் மற்றும் மார்க்கப் பிரச்சார பணிகளில் துனிச்சலோடு இச் சகோதரிகள் செயற்பட்டுவருவது பாராட்டத்தக்கதுடன் பிற சகோதரிகளுக்கு இவர்கள் முன்னுதாரனமாகும் என முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் பணிப்பாளர் ஊடகவியளாளர் ஜுனைட்.எம்.பஹ்த் தெறிவித்தார்.






Read More