Featured Home (TOP)

Recent Comments

Monday, December 21, 2015

avathani Media Network

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு விழிப்புணர்வு கடிதம் .

எதிர்வரும் டிசம்பர் 28ம் திகதி  தென்னிந்தியாவிலிருந்து சுன்னத்துல்வால்
ஜமாஆத் எழுச்சி  மாநாடு கல்முனை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக
அறியக்கிடைக்கிறது.
 இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளராக தென்னிந்தியாவிலிருந்து
#அப்துல்லாஹ்_ஜமாலி கலந்து கொள்ளவுள்ளார்.

2015.11.08 சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஆத்தினால்  சிங்கல  மொழி மூலமான குர்ஆன்
வெளியீட்டு நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொள்ள இருந்த தென்னிந்திய
ஏகத்துவ பிரச்சாரகர் P.J ஜெய்னுல் ஆப்தீன் இலங்கைக்கு வர இருந்த
தருவாயில் உங்கள் அமைப்பால் 2015.11.05 ஒரு ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது
அந்த ஊடக அறிக்கையில் உங்கள் அமைப்பால் முன்வைக்கப்பட்ட காரணம் ஒன்றை
உங்களுக்கு நினைவு படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.

"P.J கூறும் சில கருத்துக்கள்  மற்றும் கொள்கைகள் இஸ்லாமிய அடிப்படை
கொள்கைக்கு மாற்றமாக இருப்பதாலும் இந்த விடயத்தில் சகலரும்  மிக
அவதானமாவும் எச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல்
உலமா வேண்டிக்கொள்கிரது"

உங்கள் அமைப்பின் இந்த ஊடக அறிக்கையை பயன்படுத்தி பாதுகாப்பு செயலாளர்
ஊடாக P.J யின் வருகை ரத்து செய்யப்பட்டது.
( பாராட்டுக்கள் )

எதிர்வரும் டிசம்பர் 28ம் திகதி நடைபெறவுள்ள சுன்னதுல்வால் ஜமாஆத்
மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வரவுள்ள #அப்துல்லாஹ்_ஜமாலி இஸ்லாமிய
அடிப்படை கொள்கையை சரியானவரா ?

அப்துல்லாஹ் ஜமாலியின் கப்று வணக்க கொள்கை சம்பந்தமாக உங்களது ACJU
நிலைப்பாடு என்ன ?

அப்துல்லாஹ் ஜமாலியின் இலங்கை வருகை இலங்கை முஸ்லிம்ளின் ஒற்றுமையை
சீர்குலைக்காதா ?


அப்துல்லாஹ் ஜமாலியின் இலங்கை வருகை சம்பந்தமாக ஜம்இய்யதுல் உலமா
நிர்வாகம் கவனம் செலுத்தி அவருக்கு எதிராக ஒரு ஊடக அறிக்கை விடுமா ?

அப்துல்லாஹ் ஜமாலியின் வருகை
விடயத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் மெளனம் கலையுமா ?

இன்ஷா அல்லாஹ் இந்த கடிதத்துக்கு பின்னரேனும்  ஜம்இய்யத்துல் உலமா
அப்துல்லாஹ் ஜமாலின் இலங்கை விஜயத்தில் கவனம் செலுத்தி இலங்கை
முஸ்லிம்களின் ஒற்றுமையையும் பாதுகாக்கும் என நம்புகிறேன் .

வஸ்ஸலாம்
ஜஸாக்குமுல்லாஹு ஹைர்

ஏ.எம். பர்சாத்
C13/4
தக்வா வீதி
காத்தான்குடி-0 3
Read More
avathani Media Network

ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரித்து உபயோகித்தல் தொடர்பான செயலமர்வும், விளிப்புணர்வுக் கருத்தரங்கும்.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்பிணித்தாய்மாருக்கும், குழந்தைகளுக்கும்  ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரித்து உபயோகித்தல் தொடர்பான செயலமர்வும், விளிப்புணர்வுக் கருத்தரங்கும் நேற்று  நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.றகுமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பறூஸா நக்பர்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள கற்பிணித் தாய்மார்களும், கைக்குழந்தைகளைப் பராமரிக்கின்ற தாய்மார்களும் அறிவுரைகளை வழங்கினார்.

நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி.பறூஸா நக்பர் கருத்துத் தெரிவிக்கையில்:- 
' நாம் கடைகளில் விற்கப்படும் மரக்கறி வகைகளைப் பயன்படுத்துவதை விட நாம் நமது வீட்டுத் தோட்டங்களில் உற்பத்தி செய்து பெறப்படும் மரக்கறி வகைகளும், உணவுகளும் மிகச் சிறப்பானதாகும். இதன் மூலம் நச்சுக் கலவையற்ற தூய்மையான உணவுகளைப் பெறுவதோடு, அதிக செலவில்லாது சிக்கனமான, மனநிறைவான, ஆரோக்கியமான வாழ்கையைத் தெரிவு செய்து கொள்ள முடியும்' எனத் தெரிவித்தார்.

சிரேஷ்ட மருத்துவமாது திருமதி.பேகம் பீவி, மற்றும் பொது மருத்துவ மாதுக்களான எம்.எஸ்.மாஹிறா, ஏ.ஜெமீலா, திருமதி.பஸீஹா றியாஸ் போன்றோர்களினால் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உண்மையான சத்துணவுகள் பலவும் காண்பிக்கப்பட்டதோடு, அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பான விளக்கவுரைகளும் வழங்கப்பட்டன.







Read More
avathani Media Network

காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் கல்வி முகாம் – 2015

காத்தான்குடிபிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவ மாணவிகளின் கற்றல்நடவடிக்கைகளை உற்சாகப்படுத்துவதோடு அவர்களை ஆன்மீகஇஅறிவு மற்றும் திறன் சார்ந்துவளர்த்தெடுப்பதற்கான பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் பிரயோக ரீதியில் வழங்கும் நோக்கில் வதிவிட கல்வி  முகாம் ஒன்று கடந்த 2015.12.11 முதல் 2015.12.16 வரை பிஸ்மி தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இக்கல்வி முகாமில் உள்ளார்ந்த உறவும் மற்றவர்களை புரிந்து கொள்ளலும்இ இலக்குகளை வரையறுத்தல்இ தொடர்பாடல் மற்றும் அளிக்கை திறன்கள்இ விளைதிறன் மிக்க சுய கற்றல் உத்திகள்இ சுய முகாமைத்துவம் மற்றும் நேர முகாமைத்துவம்இ சுய ஒழுக்கம் இ உணர்ச்சிகளை கையாளல்
வினைத்திறன் மிக்க கற்றல் உத்திகள் ஆகிய தலைப்புகளில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அத்தோடு ஆன்மிக விருத்திக்கான  விசேட இரவுநேர தர்பிய்யா நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. மேலும் மாணவர்களுக்கான விசேட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவ மாணவியர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.  












Read More
avathani Media Network

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம்

(ஏ.எல்.டீன்பைரூஸ்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்தும் என முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார் 


அவர்மேலும் தெரிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பாராளமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவாலை எதிர் கொண்டிருந்தது அந்த அனைத்து சவால்களையும் முறியடித்து கட்சிக்கு அதிகப்படியான ஆசனங்களை வெண்றெடுக்கும் பொருட்டு அதிகலவிலான வாக்குகளை


 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குமாறும் அவ்வாறு வாக்களிக்கப்பட்டு  அவ்வூருக்கு கட்சியினுடாக பாராளமன்ற ஆசனம் கிடைக்காத பட்சத்தில் தேசியப்பட்டியல் மூலம் பாராளமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என கட்சியின் தேசியத்தலைவர் அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல ஊர்களுக்குச் சென்று வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். 


அதற்கமைவாக மக்கள் கட்சித்தலைமையின் வேண்டுகோலை ஏற்று கனிசமான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கியது மாத்திரமின்றி முஸ்லிம் காங்கிரஸின் பரம எதிரிகள் சிலரையும் அத்தேர்தலில் தேற்கடித்து அவர்களது அரசியல் அதிகாரங்களை பறித்து அவர்களை தேசிய அரசியலிலிருந்து ஓரம்கட்டச் செய்தனர் அதனால் அவ்வூர்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியினுடாகவும் பாராளமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காமல் செய்யப்பட்டது ஆனால் கட்சி எதிர்பார்த்த இரண்டு தேசியப்பட்டியல் பிரதிநித்துவத்தையும் பெற்றுக் கொண்டது.


அவ்வாறு தங்களது ஊருக்கு பாராளமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத ஊர்களின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் தெண்டர்கள் அத்தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றினை தங்களது ஊருக்கு வழங்குமாறு கோரி தலைவரின் வீட்டுக்கு படையெடுத்தனர் ஆனால் வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு அமைவாக இன்றுவரைக்கும் எந்தவொரு ஊருக்கும் குறித்த தேசியப்பட்டியல் பாராளமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை மாறாக எந்தவொரு ஊரையும் திருப்திப்படுத்தாத வகையில் பல மாதங்களாகியும் இன்று தேயப்பட்டியல் பாராளமன்ற பிரதிநிதித்துவம் ஒரு மூலையில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு ஊரும் பலனடையவில்லை.  


தலைவரின் வாக்குறுதியை முழுமையாக நம்பி வாக்களித்த மக்கள் அரசனை நம்பி புறுசனை கைவிட்ட கதையாக இன்று சில ஊர்கள் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழந்து அனாதரவக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் நாடலாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது இத்தேர்தலில் தேசியப்பட்டியல் விவகாரம் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எண்பதோடு உள்ளுராட்சி மன்ற வேட்ப்பாளர்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும் 

என்பதுடன் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்த சில உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் கோள்விக்குறியாகலாம் 
அது மாத்திமின்றி தேசியப்பட்டியல் விவகாரம் எதிரணிகளின் பிராச்சாரத்திற்கான பேசும் பொருளாக அமையும் அத்தோடு அது சில சமயங்களில் எதிரணிக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் அதனால் அடிமட்டத்திலுள்ள என்னைப்போன்ற உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் அரசியலிலிருந்து ஓரம் கட்டப்படுவார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது  



அது மாத்திரமின்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கடந்த கால தேசியப்பட்டியல் வாக்குறுதியைப்போன்று இம்முறை தேசியப்பட்டியல் வாக்குறுதியை கருதி விட முடியாது தப்பித்துக் கொள்ளவும் முடியாது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைலரும் நன்கு அறிவார் அத்தோடு தேசியப்பட்டியல் விவகாரம் புலிவாலை பிடித்த கதையாக இன்றைய ச10ழ்நிலையில் கொடுத்தாலும் பிரச்சினை கொடுக்காவிட்டாலும் 



பிரச்சினை எது எவ்வாறு இருந்தாலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னால் உறுப்பினர்கள் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதும் மக்களால் ஓதுக்கப்படுவதும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் தேசியப்பட்பட்டியல் சம்மந்தமான இறுதி முடிவிலே தங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்   
Read More