அது கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறைய சில மணி நேரம் இருந்த போது அதாவது மாலை நான்கு மணிக்கு பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைக்கிறது.பம்பலப்பிட்டி பிரதேசத்தின் பிரபலமான ஆண்கள் பாடசாலையிள் அறையொன்றில் அப்பாடசாலையின் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் சடலம் காணப்படுவதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டது.
முறைப்பாட்டை அடுத்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் அஜித் மெத்தாநந்த தலைமையிலான பொலிஸ் குழு ஸ்தலம் விரைந்து உடன் விசாரணைகளை ஆரம்பித்தது.ஆம் அந்த பெண் சடலம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள பொலிஸாருக்கு அவ்வளவு நேரம் தேவைப்படவில்லை.
கடந்த 14 வருடங்களாக குறித்த பாடசாலையில் சிற்றூழியராக சேவை செய்யும் 45வயதுடைய அகலவத்தகே சந்திரிகா சுமதிபால என்ற பெண்ணே சடலமாக கிடப்பதை பொலிஸார் உறுதி செய்து கொண்டனர்.பாடசாலையின் ஆரம்பப் பிரிவு உள்ள பகுதியை அண்மித்த களஞ்சிய அறையிலேயே சந்திரிகாவின் சடலம் கிடந்தது.
சந்திரிகா அணிந்திருந்த கீழாடை இடுப்புப் பகுதிக்கு மேல் உயர்த்தப்பட்டிருந்ததுடன் கீழுள்ளாடை அந்த சடலம் அருகே கிடந்தது. உடலில் சீராய்வு மற்றும் கீறல் காயங்கள் வேறு. இவற்றை வைத்துப்பார்த்த பொலிஸார் யாரோ சந்திரிகாவை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்திருக்கலாம் என அனுமானித்து விசாரணைகளை முடுக்கி விட்டனர்.
ஆம் சந்திரிகா இரு பெண் பிள்ளைகளின் தாய். கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர்.
அந்த பாடசாலையிலேயே தொடர்ச்சியாக சேவையாற்றி வந்த அவர் அங்கிருந்து விலக உத்தேசித்திருந்தவர். எனினும் தனது இடத்துக்கு பொருத்தமான ஒருவரை பாடசாலை நிர்வாகம் தெரிந்தெடுக்கும் வரை தனது சேவையை தொடர்ந்தவர்.
இவ்வாறான பின்னணியில்தான் கடந்த சனிக்கிழமை (18) சந்திரிகா கிருலப்பனையில் இருந்து பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலைக்கு தனது கடமைகளுக்காக வந்துள்ளார்.
அதாவது புதுவருட கொண்டாட்டங்களுக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலை மீண்டும் திங்கட்கிழமை 20ஆம் திகதி ஆரம்பிப்பதையொட்டி பாடசாலை சூழலை சுத்தம் செய்யவே அவர் இவ்வாறு சனியன்றும் பாடசாலை வரவேண்டியேற்பட்டது. சனி நண்பகல் முதல் எந்த தகவலும் இல்லாது போன சந்திரிகாவின் உயிரற்ற உடலை மறுநாள் ஞாயிறன்று மாலை முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸாரால் மீட்க முடிந்தது.
சடலமாக மீட்கப்பட்ட சந்திரிகா தொடர்பில் போதுமான தகவல்களை திரட்டிக் கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸார் மறுநாள் திங்களன்று இடம்பெற்ற நீதிவான் நீதிமன்ற சோதனைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தான் விஷேட பொலிஸ் குழு அமைத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல்தெனிய கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் எல்.என்.ஜி. ஜயரட்ன ஆகியோரின் வழிநடத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் பெரேராவின் நேரடி கட்டுப்பாட்டில் அப் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அஜித் மெத்தாநந்த தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவில் 9 பொலிஸார் உள்வாங்கப்பட்டனர். உப பொலிஸ் பரிசோதகர் விஜேசேன சார்ஜன்களான அழகக்கோன் (30353) விஜேரட்ன (7358) ஆகியோருடன் கான்ஸ்டபிள்களான அஜித் (58420) குமார (60021) தரங்க (66499) பிரியங்கர (76782) சரத் (76938) சில்வா (81778) வீரசிங்க (89081) ஆகியோரும் சாரதி அமிலவும் இணைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் தான் திங்களன்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் தீர்ப்பு வழங்கப்படாது திறந்த தீர்ப்பொன்று வழங்கப்பட்டது.இதனால் சந்திரிகாவின் மரணம் கொலையா ? இல்லையா ?
என்பதை உறுதி செய்ய முடியாமல் போனது. சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக சந்திரிகாவின் உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வு மற்றும் டீ.என்.ஏ. பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டன.
அதனை தொடர்ந்து சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் கொலையா, இல்லையா என்ற மர்மம் இன்று வரை துலங்காத நிலையில் குறித்த விஷேட பொலிஸ் குழுவானது சடலம் மீட்கப்பட்ட விடயத்தை வைத்து விசாரணையினை புதிய கோணத்தில் நகர்த்தியது.
பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் சில தடயங்களை சேகரித்த அந்த விஷேட குழு சம்பவம் தொடர்பில் சுமார் 11 பேரிடம் வாக்கு மூலங்களைப் பெற்று பதிவு செய்து கொண்டது.
அதில் பிரதேச வாசிகள் காவலாளி பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் அடங்குவர்.இந்நிலையில் தான் உப பொலிஸ் பரிசோதகர் அஜித் மெத்தாநந்தவுக்கு சரத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் தகவலளிக்கும் அவர் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
”சேர் நான் சரத் பேசுகிறேன். அந்த பெண்ணின் சடலம் இருந்த பாடசாலை வளாகத்திற்குள் சனியன்று சற்று வயதான ஒருவர் சென்றுள்ளார். பலரும் இதனை கண்டுள்ளனர் சேர். விசாரித்தால் தகவல் அறியலாம்எனக்கூறி தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த தகவலை வைத்தே உபபொலிஸ் பரிசோதகர் அஜித் தலைமையிலான விசேட பொலிஸ் குழு துப்பு துலக்க ஆரம்பித்தது. இது தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் போது தான் செபஸ்டியன் லோரன்ஸ் என்ற நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கின்றது.
செபஸ்டியன் லோரன்ஸ் சந்திரிகாவின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்தவர் இருவருக்கு மிடையில் உறவு இருந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.இதனை தொடர்ந்து விசாரணைகள் வேகமடைந்தன.
செபஸ்டியன் லோரன்ஸை விசாரணைகளுக்காக கிருலப்பனையில் வைத்து கைது செய்த பொலிஸார் அவரை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதன் போது சந்திரிகா சனியன்று பாடசாலையில் வேலை செய்த போது பாடசாலைக்குள் நுழைந்த நபர் செபஸ்டியன் தான் என்பது உறுதியானது.“சேர் …. நானும் சந்திரிகாவும் தொடர்பினை பேணி வந்தோம் .
வழமை போன்றே அன்றும் தொலைபேசியில் உரையாடிய நான் அவர் வேலை செய்யும் பாடசாலையில் எவரும் இல்லாததால் அங்கு சென்றேன் நான் பாடசாலையின் பின்வாயில் வழியாக உள் நுழைந்தேன். நாம் சந்தித்தோம். அவ்வளவு தான். மாறாக நான் அவரை கொல்லவில்லை. எனக்கு அவ்வளவுதான் தெரியும். நான் அதன்பின்னர் பாடசாலையில் இருந்து சென்று விட்டேன் என செபஸ்டியன் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்து தான் கொலை செய்யவில்லை என குறிப்பிட்டார்.
எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்திரிகா உயிரிழந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படும் சனியன்று நண்பகல் 12.00 இற்கும் 12.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் செபஸ்டியன் அந்த பாடசாலைக்குள் இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சடலம் மீட்கப்படும் போது இருந்த முறையும் வாக்கு மூலத்தில் செபஸ்டியன் குறிப்பிட்ட சில விடயங்களிலும் ஒற்றுமையை பொலிஸார் அவதானித்தனர்.இந்நிலையில் பாடசாலையின் காவலாளியை விசாரித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவர் ஏதேனும் தகவலை மறைக்கின்றாரா ?
என தேடினர்.அனுராதபுரம் கஹட்டஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த காவலாளியான சரத் நிஸந்த பண்டித்தரத்னாவை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.பொலிஸார்: உண்மையை சொல்லுங்கள் நடந்தது என்ன ?காவலாளி சரத் சேர்.. எனக்கு எதுவும் தெரியாது.
பொலிஸ்: ஒருவர் பாடசாலையில் நுழையும் வரை எங்கே இருந்தீர்கள் ?காவலாளி சரத் சேர்….. உண்மையில் அவர் வந்தாரா என்பது கூட எனக்கு தெரியாது.இப்படி தனக்கு எதுவுமே தெரியாது என கூறி காவலாளி தன் மீதான கேள்வி கணைகளை அவர் சமாளிக்க முனைந்தாலும் அவர் ஏதோ ஒன்றை மறைப்பதாக பொலிஸார் சந்தேகித்தனர்.செவ்வாயன்று அதாவது சடலம் மீட்கப்பட்ட இரு நாட்களுக்குள் பிரதான சந்தேக நபரான செபஸ்டியனுக்கு உடந்தையாக செயற்பட்டார் என காவலாளியையும் கைது செய்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவ்விருவரும் 22 ஆம் திகதி புதன்கிழமை புதுக்கடை 03 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அறிவியல் ரீதியிலான தகவல்களும் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக செபஸ்டியனின் தொடர்பான விடயங்களை கண்டறியவும் குறித்த நாளன்று அவ்விருவரும் சந்திப்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் சந்திரிகாவினதும் செபஸ்டியனினதும் தொலைபேசி விபரப்பட்டியலும் பொலிஸாரால் பரீட்சிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதான சந்தேக நபரான செபஸ்டியனின் இரத்த மாதிரி பெறப்பட்டு டீ. என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சம்பவ தினம் செபஸ்டியன் அணிந்திருந்த ஆடையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்த பம்பலப்பிட்டி பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்களன்று மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை தீர்ப்பொன்றை இன்னும் வெளிப்படுத்தாத நிலையில் பொலிஸார் அந்த அறிக்கைகளுக்காக காத்துள்ளனர்.அரச இரசாயன பகுப்பாய்வு டீ.என்.ஏ. பரிசோதனைகளின் பின்னரே சந்திரிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளரா ?
என்பதனை அறியக்கூடியதாக இருக்கும்.அதன் பின்னரே கொலைக்கான காரணமும் ஏனைய விடயங்களையும் வெளிப்படுத்த முடியுமாக இருக்கும்.
அதன்படி கடந்த 19 ஆம் திகதி பம்பலப்பிட்டி பாடசாலையொன்றுக்குள் மீட்கப்பட்ட சடலம் குறித்த மர்மங்கள் தொடர்ந்தும் மர்மங்களாக இருக்காது அது வரை கேசரி அவதானத்துடன்…….
கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. மாலை நான்கு மணிக்கு பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைக்கிறது.
பம்பலப்பிட்டி பிரதேசத்தின் பிரபலமான ஆண்கள் பாடசாலையின் அறையொன்றில் பெண்ணின் சடலம் காணப்படுவதாக கூறப்பட்டது. பாடசாலையின் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் சடலமே அது.
முறைப்பாட்டை அடுத்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் அஜித் மெத்தாநந்த தலைமையிலான பொலிஸ் குழு ஸ்தலம் விரைந்து உடன் விசாரணைகளை ஆரம்பித்தது.
அங்கு சென்ற பொலிசார் துரிதமாகவே முதற்கட்ட தகவல்களை சேகரித்து கொண்டனர். கடந்த 14 வருடங்களாக பாடசாலையில் சிற்றூழியராக சேவை செய்யும் 45வயதுடைய அகலவத்தகே சந்திரிகா சுமதிபால என்ற பெண்ணே சடலமாக கிடப்பதை பொலிஸார் உறுதி செய்து கொண்டனர்.
பாடசாலையின் ஆரம்பப் பிரிவு உள்ள பகுதியை அண்மித்த களஞ்சிய அறையிலேயே சந்திரிகாவின் சடலம் கிடந்தது. சந்திரிகா அணிந்திருந்த கீழாடை இடுப்புப் பகுதிக்கு மேல் உயர்த்தப்பட்டிருந்ததுடன் கீழுள்ளாடை அந்த சடலம் அருகே கிடந்தது.
உடலில் சீராய்வு மற்றும் கீறல் காயங்கள் வேறு. இவற்றை வைத்துப்பார்த்த பொலிஸார் யாரோ சந்திரிகாவை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்திருக்கலாம் என அனுமானித்து விசாரணைகளை முடுக்கி விட்டனர்.
சந்திரிகா இரு பெண் பிள்ளைகளின் தாய். கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர். அந்த பாடசாலையிலேயே தொடர்ச்சியாக சேவையாற்றி வந்த அவர் அங்கிருந்து விலக உத்தேசித்திருந்தவர்.
எனினும் தனது இடத்துக்கு பொருத்தமான ஒருவரை பாடசாலை நிர்வாகம் தெரிந்தெடுக்கும் வரை தனது சேவையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில்தான் கடந்த சனிக்கிழமை (18) சந்திரிகா கிருலப்பனையில் இருந்து பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலைக்கு தனது கடமைகளுக்காக வந்துள்ளார்.
அதாவது புதுவருட கொண்டாட்டங்களுக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலை மீண்டும் திங்கட்கிழமை 20ஆம் திகதி ஆரம்பிப்பதையொட்டி பாடசாலை சூழலை சுத்தம் செய்யவே அவர் இவ்வாறு சனியன்றும் பாடசாலை வரவேண்டியேற்பட்டது.
சனி நண்பகல் முதல் எந்த தகவலும் இல்லாது போனநிலையில், சந்திரிகாவின் உயிரற்ற உடலை மறுநாள் ஞாயிறன்று மாலை பொலிஸாரால் மீட்க முடிந்தது.
சடலமாக மீட்கப்பட்ட சந்திரிகா தொடர்பில் போதுமான தகவல்களை திரட்டிக் கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸார் மறுநாள் திங்களன்று இடம்பெற்ற நீதிவான் நீதிமன்ற சோதனைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தான் விஷேட பொலிஸ் குழு அமைத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். திங்களன்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் தீர்ப்பு வழங்கப்படாது திறந்த தீர்ப்பொன்று வழங்கப்பட்டது.
இதனால் சந்திரிகாவின் மரணம் கொலையா? இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியாமல் போனது. சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக சந்திரிகாவின் உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வு மற்றும் டீ.என்.ஏ. பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டன. அதனை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கொலையா, இல்லையா என்ற மர்மம் இன்று வரை துலங்காத நிலையில் குறித்த விஷேட பொலிஸ் குழுவானது சடலம் மீட்கப்பட்ட விடயத்தை வைத்து விசாரணையினை புதிய கோணத்தில் நகர்த்தியது.
பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் சில தடயங்களை சேகரித்த அந்த விஷேட குழு சம்பவம் தொடர்பில் சுமார் 11 பேரிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டது. அதில் பிரதேசவாசிகள் காவலாளி பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் அடங்குவர்.
இந்நிலையில் தான் உப பொலிஸ் பரிசோதகர் அஜித் மெத்தாநந்தவுக்கு சரத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் தகவலளிக்கும் ஒருவர் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
”சேர் நான் சரத் பேசுகிறேன். அந்த பெண்ணின் சடலம் இருந்த பாடசாலை வளாகத்திற்குள் சனியன்று சற்று வயதான ஒருவர் சென்றுள்ளார். பலரும் இதனை கண்டுள்ளனர் சேர். விசாரித்தால் தகவல் அறியலாம்” என்ற தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த தகவலை வைத்தே உபபொலிஸ் பரிசோதகர் அஜித் தலைமையிலான விசேட பொலிஸ் குழு துப்பு துலக்க ஆரம்பித்தது. இது தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் போது தான் செபஸ்டியன் லோரன்ஸ் என்ற நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கின்றது.
செபஸ்டியன் லோரன்ஸ் சந்திரிகாவின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்தவர். இருவருக்கு மிடையில் உறவு இருந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து விசாரணைகள் வேகமடைந்தன. செபஸ்டியன் லோரன்ஸை விசாரணைகளுக்காக கிருலப்பனையில் வைத்து கைது செய்த பொலிஸார் அவரை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதன் போது சந்திரிகா சனியன்று பாடசாலையில் வேலை செய்த போது பாடசாலைக்குள் நுழைந்த நபர் செபஸ்டியன் தான் என்பது உறுதியானது.
“சேர் …. நானும் சந்திரிகாவும் தொடர்பினை பேணி வந்தோம் .வழமை போன்றே அன்றும் தொலைபேசியில் உரையாடிய நான், அவர் வேலை செய்யும் பாடசாலையில் எவரும் இல்லாததால் அங்கு சென்றேன். நான் பாடசாலையின் பின்வாயில் வழியாக உள் நுழைந்தேன். நாம் சந்தித்தோம்.
அவ்வளவு தான். மாறாக நான் அவரை கொல்லவில்லை. எனக்கு அவ்வளவுதான் தெரியும். நான் அதன்பின்னர் பாடசாலையில் இருந்து சென்று விட்டேன்” என செபஸ்டியன் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்து தான் கொலை செய்யவில்லை என கூறினார்.
எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்திரிகா உயிரிழந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படும் சனியன்று நண்பகல் 12.00 இற்கும் 12.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் செபஸ்டியன் அந்த பாடசாலைக்குள் இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சடலம் மீட்கப்படும் போது இருந்த முறையும் வாக்கு மூலத்தில் செபஸ்டியன் குறிப்பிட்ட சில விடயங்களிலும் ஒற்றுமையை பொலிஸார் அவதானித்தனர். பாடசாலையின் காவலாளியை விசாரித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவர் ஏதேனும் தகவலை மறைக்கின்றாரா? என தேடினர்.
அனுராதபுரம் கஹட்டஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த காவலாளியான சரத் நிஸந்த பண்டித்தரத்னாவை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.
பொலிஸார்: உண்மையை சொல்லுங்கள் நடந்தது என்ன?
காவலாளி சரத்: சேர்.. எனக்கு எதுவும் தெரியாது.
பொலிஸ்: ஒருவர் பாடசாலையில் நுழையும் வரை எங்கே இருந்தீர்கள்?
காவலாளி சரத்: சேர்… உண்மையில் அவர் வந்தாரா என்பது கூட எனக்கு தெரியாது.
இப்படி தனக்கு எதுவுமே தெரியாது என கூறி காவலாளி தன் மீதான கேள்வி கணைகளை அவர் சமாளிக்க முனைந்தாலும் அவர் ஏதோ ஒன்றை மறைப்பதாக பொலிஸார் சந்தேகித்தனர்.
செவ்வாயன்று அதாவது சடலம் மீட்கப்பட்ட இரு நாட்களுக்குள் பிரதான சந்தேக நபரான செபஸ்டியனுக்கு உடந்தையாக செயற்பட்டார் என காவலாளியையும் கைது செய்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவ்விருவரும் 22 ஆம் திகதி புதன்கிழமை புதுக்கடை 03 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அறிவியல் ரீதியிலான தகவல்களும் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக செபஸ்டியனின் தொடர்பான விடயங்களை கண்டறியவும் குறித்த நாளன்று அவ்விருவரும் சந்திப்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் சந்திரிகாவினதும் செபஸ்டியனினதும் தொலைபேசி விபரப்பட்டியலும் பொலிஸாரால் பரீட்சிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதான சந்தேக நபரான செபஸ்டியனின் இரத்த மாதிரி பெறப்பட்டு டீ. என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சம்பவ தினம் செபஸ்டியன் அணிந்திருந்த ஆடையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்த பம்பலப்பிட்டி பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்களன்று மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை தீர்ப்பொன்றை இன்னும் வெளிப்படுத்தாத நிலையில் பொலிஸார் அந்த அறிக்கைகளுக்காக காத்துள்ளனர்.
அரச இரசாயன பகுப்பாய்வு டீ.என்.ஏ. பரிசோதனைகளின் பின்னரே சந்திரிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளரா ? என்பதனை அறியக்கூடியதாக இருக்கும்.