Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 17, 2015

Unknown

தெமட்டகொடையில் மீட்கப்பட்ட கால்கள் யாருடையது? : தகவல்களை மறைக்கும் பெண்ணுக்கு விளக்கமறியல்


தெமட்­ட­கொடை - சிறி­தம்ம மாவத்­தையில் உள்ள வடிகான் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மனிதக் கால்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலி­ஸா­ரினால் விரி­வு ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அந்த கால்கள் காணப்­பட்ட இடத்தில் இருந்த தட­யங்­களை வைத்து பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்ட நிலையில் சம்­பவம் தொடர்பில் தக­வல்­களை மறைக்கும் குற்றச்சாட்­டுக்­காக அவரை நேற்று நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது.

கடந்த சனிக்­கி­ழமை தெமட்­ட­கொடை - சிறி­தம்ம மாவத்­தையில் உள்ள வடிகான் ஒன்­றி­லி­ருந்து இரு கால்கள் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டன. 119 அவ­சர தொலை­பேசி அழைப்­பூ­டாக தெமட்­ட­கொடை பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வி­ரண்டு கால்­களும் மீட்­கப்­பட்­டன. மீட்­கப்­பட்ட இவ்­விரு கால்­களும் ஆணொ­ரு­வ­ரு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் நிலையில் முழங்­கா­லுக்கு கீழ் அவ்­விரு கால்­களும் வெட்­டப்­பட்­டி­ருந்­தன.
இந்நிலையில் புதுக்­கடை நீதி வான் நீதி­மன்ற நீதி­பதி ஸ்தலத்தை வந்து பார்­வை­யிட்­டதை தொடர்ந்து அவ்­விரு கால்­களும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. வேறு ஒரு பிர­தே­சத்தில் வெட்­டப்­பட்ட நிலையில் அவ்­விரு கால் களும் அந்த வடி­கானில் போடப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்கும் பொலிஸார் அங்­கி­ருந்து தட­யங்கள் சில­வற்றைக் கைப்­பற்­றி­யுள்­ளனர்.
அந்த வடி­கானின் அருகில் இருந்து திறப்புக் கோர்வை ஒன்று தெமட்­ட­கொடை பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்ட நிலையில் அதனை மோப்ப நாயிற்கு முகரச் செய்து சந்­தேக நபர்­களை தேடி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.
இந்நிலையில் குறித்த திறப்புக் கோர்­வையை மோப்பம் பிடித்த பொலிஸ் மோப்ப நாய் அங்­கி­ருந்து 50 மீற்றர் தூரத்தில் இருந்த பெட்­டிக்­கடை ஒன்­றினுள் சென்­றது. இத­னை­ய­டுத்து அந்த பெட்­டிக்­க­டையை நடத்தி வந்த பெண்ணை விசா­ரணை செய்த பொலிஸார் அவரை கைது செய்து மன்றில் ஆஜ­ர்படுத்தி விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர்.
குறித்த கடைக்கு காலை வேளை யில் தேநீர் அருந்த வந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரிடம் இரவு வேளையில் அந்த வடிகான் பிர­தே­சத்தில் சத்தம் ஒன்று கேட்­ட­தா­கவும் அங்கு சந்­தே­கத்­துக்கு இட­மான ஏதேனும் இருக்­கலாம் எனவும் குறித்த பெண்ணே முதலில் கூறி­யி­ருப்­பது பொலி­ஸாரின் புலன் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் அப் பெண் ஏதோ ஒரு ரக­சி­யத்தை மறைக்கிறார் என்­ப­தா­லேயே அவரை கைது செய்து மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தாகவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
இந்நிலையில் அப்பெண் குறித்த சம்­ப­வத்­துடன் நேர­டி­யாக தொடர்புபட்­டுள்­ளாரா இல்­லையா என்­ப­தைவிட அச்­சம்­பவம் குறித்து அவர் ரக­சியம் ஒன்­றினை அறிந்­தி­ருப்­ப­தா­கவும் அதனை மறைத்து வருவதாலேயே கைது செய்ததாகவும் பொலி ஸார் மேலும் குறிப்பிட்டனர்.
Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :