மண்முனை பற்று பிரதேச எல்லைக்குள் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுடைய வாழ்வுரிமைகளைப் பறிக்கின்ற ஓர் திட்டமிடப்பட்ட செயல் கன கச்சிதமாக செயற்படுத்தப் பட்டு வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் குறிப்பிட எண்ணிக்கையான முஸ்லிம் மக்களை வாக்காளர் இடாப்புக்களில் இருந்து நீக்குவதனூடாக மண்முனை பற்று பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களை
பேரினவாதம் பேசுகின்றவர்கள் சிறுபான்மையினரை நசுகுகின்றார்கள், அவர்களுடைய உரிமைகளை மறுக்கின்றார்கள் என்று சொல்லுகின்ற, நாட்டில் உள்ள முதலாவது சிறுபான்மையின புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும் இன்னுமோர் சிறுபான்மையினருடைய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
திட்டமிடப்பட்டு பறிக்கின்ற பொழுது அவற்றை கண்டும் காணமல் இருப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்.
1990 களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே சிதறி வாழ்ந்த முஸ்லிம்களுடைய 34 க்கும் மேற்பட்ட சிறிய சிறிய கிராமங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன அதே வேளையில் அந்த மக்கள் 199௦களில் இடம்பெயர்ந்து காத்தான்குடி போன்ற கிராமங்களின் கரையோரத்தில் குடியேறினார்.
2004 சுனாமி அனர்த்தத்தின் பின்னரான காலத்தில் அந்த மக்கள் மீண்டும் அவர்களது பூர்விக இடங்களுக்கு காலத்தின் கட்டாயத்தினால் சிறிய சிறிய குடில்கள் அமைக்கப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ச்சியாக பல இன்னல்களை சமாளித்துக் கொண்டு குடியிருக்கின்ற அந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளான மலசல கூட வசதிகள், குடிநீர் வசதிகள், மின் இணைப்பு போன்ற வசதிகளை பெறுவதில் பிரதேச செயலகம், பிரதேச சபைகளுடைய அங்கிகாரம் பெற முயற்சிக்கும் பொழுது அவற்றிக்கு பல இழுத்தடிப்புக்கள் செய்து, மக்களை அலைக்கழித்து, காணி உறுதிகளை சரி பார்க்க வேண்டும், அதனுடைய பதிவு விபரங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றெல்லாம் அம் மக்கள் மீது பல சுமைகளையேற்றி இறுதியில் அதற்கான அனுமதிகளை கொடுக்காமல் மறுக்கின்றனர். குடியேற்றத்திற்கு அடிப்படை தேவையான நீர், மலசல கூட, மின்சார வசதிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ளாமல் தடுத்துவிட்டு இந்த அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் மக்கள் குடியேற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மண்முனைப்பற்று அரச நிருவாகம் 06 மாதங்களுக்கு மேல் இரவு பகலாக தொடர்ச்சியாக குடியிருந்தால் மாத்திரம்தான் வாக்காளர் இடாப்பில் பதியப்பட முடியும் எனக் கூறுகின்றனர்.
இவ்வாறான அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் எவ்வாறு அங்கு தொடர்ச்சியாக வசிப்பது. இதனால் காலையில் சென்று மாலையில் இன்னுமோர் இடத்தில் தமது இரவை கழிகின்ற இந்த சமூகத்தை தொடர்ச்சியாக இருக்கவில்லை என காரணம் காட்டி வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்குகின்றனர்.
இந்த விடயம் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாக்காளர் இடப்பிலிருந்து நீக்கப்பட்டு அங்கிருந்து மக்களை முற்றாக வெளியேறச் செய்கின்ற நடவடிக்கையை கனகச்சிதமாக செயற்படுத்தி வருகின்றனர். இந்த விடயம் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் தொடர்ச்சியாக பல இழுத்தடிப்புக்கள் இருக்குமாக இருந்தால் முஸ்லிம்கள் வாழுகின்ற மண்முனைப்பற்று பிரதேச காணிகளை நிலத்தொடர்பற்ற ஓர் புதிய பிரதேச செயலாளர் பிரிவு அமைப்பதனூடாக மாத்திரமே அம்மக்களை குடியேற்ற முடியுமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (21.05.2015) அன்று வாக்காளர் இடாப்பில் எங்களை பதிவதற்கு கிராம உத்தியோகத்தர் மறுக்கின்றார் என மண்முனைப்பற்று பிரதேச மக்கள் அங்கலாய்ந்து என்னிடம் குறைபட்ட போது அந்த இடத்திற்கு நான் நேரடியாக சென்று இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்தேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
