Featured Home (TOP)

Recent Comments

Thursday, May 14, 2015

Unknown

கோல்டன் கீ வைப்பாளர்களது பணத்தை மீள வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம்

கோல்டன் கீ நிறு­வ­னத்தின் அனைத்து வைப்­பா­ளர்­க­ளி­னதும் பணம் அவர்­க­ளுக்கு மத்திய வங்கியின் ஊடாக மீள வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. ஒரு வரு­டத்தில் அனைத்து வைப்­பா­ளர்­க­ளுக்கும் வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள் ­ளது.
எனவே, இது தொடர்­பாக வைப்­பா­ளர்கள் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்­கு­களை வாபஸ் பெறு­வ­தற்கும் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். கொழும்­பி­லுள்ள நிதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்­கி­ழமை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக மற்றும் மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் ஆகி­யோ­ருடன் கோல்டன் கீ நிறு­வ­னத்தில் பணம் வைப்பு செய்­த­வர்கள் சந்­தித்து பேச்சு வார்த்­தை­களை நடத்­தினர். இதன்போதே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்இ கோல்டன் கீ நிறு­வ­னத்தில் நமது பணத்தை வைப்­பி­லிட்­ட­வர்கள் அதனை மீளப் பெற முடி­யாத நிலை ஏற்­பட்­டது. அந்­நி­று­வ­னமும் மூடப்­பட்­டது.
இவ்­வாறு பல வரு­டங்­க­ளாக பணத்தை வைப்­பி­லிட்டோர் சிர­மங்­களை அனு­ப­வித்­தனர். இந்­நி­லை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய மத்­திய வங்கி ஆளு­ந­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இன்று வைப்­பா­ளர்­களை சந்­தித்தோம்.
இவர்கள் அனை­வ­ருக்கும் அவர்­க­ளது பணத்தை மத்­திய வங்­கியின் ஊடக வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் மேற்­கொள்வார். இதற்­க­மைய 2 மாதத்­திற்குள் 2 மில்­லியன் வைப்­புக்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­க­ளையும் அதன் பின்னர் 2 மாதங்­க­ளுக்குள் மேலும் 2 மில்­லி­ய­னுக்­கான கொடுப்­ப­ன­வு­களை வழங்­கவும் அனைத்து வைப்­பீட்­டா­ளர்­க­ளுக்கும் ஒரு வரு­டத்­திற்குள் அவர்­க­ளது பணத்தை வழங்கி முடிக்­கவும் தீர்­மானிக்கப்­பட்­டது.
அதேவேளை வைப்­பா­ளர்கள் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்­குகள் வாபஸ் பெறப்­பட வேண்­டு­மென்ற நிபந்­த­னை­யையும் நாம் முன் வைத்தோம். இதனை வைப்­பா­ளர்கள் ஏற்றுக் கொண்­டனர். அத்­தோடு அது தொடர்பில் எழுத்து மூலம் உறு­தி­மொ­ழியை கோரினர்.
எதிர்­வரும் 18 ஆம் திகதி இது தொடர்­பான வழக்கு நீதி­மன்­றத்தில் விசா­ரணைக்கு எடுத்துக் கொள்­ளப்படும் போது எழுத்து மூலமான உறுதி மொழியை நீதிமன்றத்துக்கு நாம் வழங்குவோம் என்றும் தெரிவித்தோம். அதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக மத்திய வங்கி ஆளு நர் மேற்கொள்வார் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
- Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :