Featured Home (TOP)

Recent Comments

Saturday, June 13, 2015

Unknown

காத்தான்குடியில் கூட்டு ஸக்காத் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

 (-எம் எச் எம் அன்வர்-)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் பிரிவினால் கூட்டு ஸக்காத் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று காத்தான்குடி அல் மனார் அர் ராசிக் மண்டபத்தில் இடம்பெற்றது 
ஸக்காத் பிரிவு தலைவர் மௌலவி ஏ எம் அலியார் றியாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  விஷேட சொற்பொழிவாளராக அஷ்ஷெய்ஹ் ஏ எம் அக்ரம் நளீமி கலந்து கொண்டார்

அவர் தனதுரையில்

ஸக்காத் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகும் தொழுகையையும் ஸக்காத்தையும்  சேர்த்து 27 இடங்களில் அல்லாஹ் ஸக்காத்தின் மகத்துவத்தை பற்றி அல்குர்ஆனில்  கூறுகின்றான் ஏழைகளுக்குச் சொந்தமான  அந்த 2.5 வீதத்தினை கொடுத்து விடுவது வசதிபடைத்த முஸ்லிம்களின் கட்டாய கடமையாகு.
ம் 
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரழி) அவர்களின் காலத்தில் ஸக்காத் கொடுப்பதற்கு ஏழைகள் இல்லாத நிலை ஏற்பட்டது அதே போல் இந்த காத்தான்குடி பிரதேசம் மாற வேணடும் என எதிர்பார்க்கிறேன் பள்ளிவாயல்கள் தொழும் இடமாக மாத்திரம் இருக்கக்கூடாது ஸக்காத் வழங்குவதற்கான பிரிவு ஒன்று பள்ளிவாயல்களில் உருவாக்கப்பபட வேண்டும் அப்போதுதான் ஸக்காத்தை வழங்குவது இலகுவாக அமையும்
ஸக்காத் கொடுக்காதவருக்கு கடும் வேதனை உண்டென இஸ்லாம் வழியுறுத்துகிறது தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்தவர்களுக்கு மறுமை நாளில் அவர்களுக்கே அதை காய்ச்சி அணிவிக்கப்படும் என அல்குர்ஆன் சொல்கிறது ஸஹாபாக்கள் 2.5 வீதம் வழங்கவில்லை மொத்த சொத்துக்களையுமே காலடியில் கொண்டு வந்து போட்டார்கள்

இந்த ஸக்காத் மூலம் வறுமை ஒழிக்கப்படுகின்றது பொருளாதாரம் அதிகரிக்க்ப்படுகின்றது அல்லாஹ்வின் அருள் கிடைக்கின்றது மார்க்கம் பாதுகாக்கப்படுகிறது ஏழைகளின் மானம் மரியாதை பாதுகாக்கப்படுகின்றது
ரமழான் மாதத்தில் ஏழை எழியோரை வீதிகளில் அலையவிடாதீர்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை தேடிச் சென்று கேட்டு செய்துவிடுங்கள் அது நிரந்தர தொழில் முயற்சியாக இருக்கலாம் அல்லது அவரது தேவையை பூரத்தி செய்ததாக இருக்கட்டும் நாம் கூட்டு ஸக்காத்தை தாராளமாக கொடுத்து உதவிசெய்வோம்  

அந்த எட்டு கூட்டத்தார்களான பக்கீர் மிஸ்கீன் அடிமைகள் கடன் சுமையில் பாதிக்கப்பட்டோர் வழிப்போக்கர் இஸ்லாத்தை ஏற்றோர் ஸக்காத் கடமைகளில் ஈடுபடுவோர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோர்; ஆவர். இவர்களுக்கு ஸக்காத்தை கொடுத்து அல்லாஹ்வின் அருளைப்பபெற்ற சமூகமாக மாறுவோம்  இந்த வகையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் பிரிவினை பாராட்டுகிறேன்

இவ்வாறு தனதுரையில் தெரிவித்தாதர்

மேற்படி நிகழ்விற்கு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஜீத் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் ஜாமியத்துல் பலாஹ் அரபிக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம் எச் எம் புஹாரி பலாஹி உட்பட உலமாக்கள் பள்ளிவாயல்கள் நிருவாகிகள் முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்






Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :