பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவைத்து கல்முனைத்தொகுதி
மக்களை அனாதைகளாக விட்டு விடக்கூடாது என்ற ஒரே நோக்கிலேயே உலமா கட்சி இம்முறை
பிராந்திய ரீதியாக அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் வேட்பாளர் ஹரீசை ஆதரிக்கிறது என உலமா கட்சி
விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக அக்கட்சியின் தலைவர்
முபாறக் அப்துல் மஜீட் மேலும்
குறிப்பிடும்போது, உலமா கட்சியை
பொறுத்தவரை தேசிய ரீதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கும் கட்சியாகும்.
அதேவேளை பிராந்திய ரீதியாக முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரான சகோதரர் ஹரீசை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது.
கல்முனை என்பது கிழக்கின் முக
வெற்றிலையாகும். சரியோ பிழையோ
இதற்கொரு பாரளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர் மீது பல
குற்றச்சாட்டுக்களும் உள்ளன. ஆனாலும் அந்த பாராளுமன்ற
உறுப்பினரால் ஊருக்குள் பரவலான நன்மை கிடைக்காவிட்டாலும்
நாலு ஏழைகள் நன்மை பெற்றுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
நிர்வாணமாக இருப்பதை விட ஒரு துண்டு கோவணம் சிறந்தது
என்பார்கள். இந்த அடிப்படையை உணர்ந்தே அரசியல்
கொள்கைகளுக்கப்பால் கல்முனை தொகுதியின் நன்மை கருதி,
அத்தொகுதியில் காலாகாலமாக இருந்து வரும் கல்முனைத் தொகுதியில்
போட்டியிடும் ஏனைய கட்சி வேட்பாளர்கள் எவருமே வெல்லக்கூடியநிலையில் ஒரு
வீதம்
கூட இல்லை என்பதே யதார்த்தமான
நிலையாகும்.
ஆகவே சமூக நலன் பற்றி மட்டுமே சிந்திக்கும் கட்சி என்ற வகையில்
உலமா கட்சி அர்ப்பணிப்புடன் இந்த
ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.
அத்துடன் வேட்பாளர் ஹரீசுடன் சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை உலமா கட்சி
முன் வைத்திருப்பதுடன்
அவரும் அவற்றை ஏற்றுக்கொண்டுள்ளமையா
எதிர் காலத்தில் அவர்
சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன்
செயற்படக்கூடிய நல்லதொரு வழியை நாம் திறந்து விட்டுள்ளோம்.
ஆகவே சமூக அக்கறை
கொண்டவர்களும் கல்முனைத்தொகுதி மீது அக்கறை கொண்ட மக்களும் தமது விருப்பு
வெறுப்புக்களை ஓரத்தில் வைத்துவிட்டு தமது
தொகுதிக்கான பிரதிநிதித்துவத்தை
காப்பாற்ற ஒன்றிணையுமாறு
உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என
அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தெரிவித்துள்ளார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)