(பைஸர் அமான்)
உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை தென்பட்டதன் காரமாக புனித நோன்புப் பெருநாள் அறிவிக்கப்பட்டது
இதனடிப்படையில் இலங்கையிலும் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது.
காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஏத்துக்;கால் பகுதியில் தாருள் அதர் அத்அவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகையினை மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி அஸ்பர் அவர்கள் நடாத்த குத்பா பிரசங்கத்தினை தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் சகோ, கோவை ஐயூப் அவர்கள் நிகழ்த்தினார்கள்
அதனைப் போன்று தேசிய தௌவ்ஹீத் ஜமாஅத் நாடாத்திய பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் காத்தான்குடி கடற்கரை கடாபி ரெஸ்டுடன் முன்பாக இடம் பெற்றது. பெருநாள் தொழுகையினையும், குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஸைனி அவர்கள் நடாத்தி வைத்தார்கள்.
இவ்விரு நிகழ்வுகளிலும் ஆண்களும் பெண்களுமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்







