Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 3, 2015

avathani Media Network

பலமிக்க ஒரு அரசியல் அதிகார பலத்தை கட்சியில் அமைப்பாளர் பதவியை மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பெற வேண்டும் ஆதரவாளர்கள் ஆதங்கம்

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

தேர்தலுக்கு பின்னரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆதரவாளர்கள் சந்திப்பும் எதிர்கால நகர்வும்

காத்தான்குடியில் வாக்களித்த மக்களுடனான சந்திப்பும் உயர்பீட கூட்டமும்  கட்சியின் வளர்ச்சிக்கான அபிப்பிராய  ஆசிக் கருத்துக் கூட்டமும் அன்மையில் காத்தான்குடியில் நடைபெற்றது. 

இதன் போது அங்கு கலந்து கொண்ட மக்கள் தங்களது கருத்துக்களை மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் கூறியதோடு அவர்களையும் வாழ்த்தினார்கள். 

காத்தான்குடி  வரலாற்றில் இதுவரை காலமும் இருந்த தலைமைத்தவங்களை விடவும் சிறந்த ஒரு தலைமைத்துவம் என்பதினை நீங்கள் பெற்றுள்ள வாக்கின் மூலம் நிறுபித்து விட்டிர்கள். 11000-12000 வரையான வாக்குகளைப் பெறுவதற்கு உங்கள் உத்வேகம்தான் காரணம் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.  

ஆகவே உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினை நீங்கள் சிதடித்து விடாமல் இது சம்பந்தமாக தலைமைத்துவத்திடம் பேசி தீர்க்கமானதும் சிறந்ததுமான முடிவை எமக்காக நீங்கள் கொண்டுவர வேண்டும் . அது அரசியல் பலமிக்கதாக இருக்க வேண்டும். என்று அங்கு வந்த கட்சி போராளி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

கட்சியினுடைய பதவிகள் ஒரு இடத்தில் அல்லது ஒருவரிடம் குவிந்து காணப்படுகின்றது. ஆகவே நீங்கள் அந்த பதவிகளில் அமைப்பாளர் பதவியை நீங்கள் பெற வேண்டும். அப்போதுதான் கட்சியை வளர்க்க முடியும். வாழ்நாள்புராகவும் அக் கட்சியில் இருக்க வேண்டும். இருக்கவும் முடியும். என்று கூறினார்.

மற்றுமொறுவர்  கூறுகையில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்ற போழுது  அது  கட்சிக்காக  தங்களை தியாகம் செய்கின்றவர்களைப் பாா்த்து வழங்கப்பட வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை தக்க வைக்கின்ற விடயத்திலும் அதை அதிகரிக்கின்ற விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 
கட்சியினுடைய பழைய ஆட்களை எல்லாம் ஒன்று சேர்த்து  புதிய ஆட்களின் உத்வேகமான சிந்தனையுடனும் பழைய போராளிகளின் அனுபவத்துடனும் கட்சியை காத்தான்குடியில் வளர்த் தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய வேண்டுமாக இருந்தால் காத்தான்குடிக்கு பலமான அதிகாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் தான் எமது செயற்பாடுகள் அனைத்தையும் நாம் திறம்பட கொண்டு செல்ல முடியும். அவ்வாறில்லையேல் நாங்கள் கட்சியை விட்டு ஒதுங்குவோம். உங்களால் இவற்றை கேட்க முடியாவிட்டால் நீங்கள்  எங்களை தலைவரிடம் அழைத்துச் செல்லுங்கள் நாங்கள் கேட்கிறோம் என்றார் .
அதைத் தெடர்ந்து  மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் காத்திரமானதுமானதும் ஆதரவாளர்களையும்  போராளிகளையும் உட்சாகமூட்டு முகமானதுமான சிறந்த உரையொன்றை ஆற்றினார். 

அவரது உரையில் 

கடந்த கால துக்கமான நினைவுகளையும் சம்பவங்களையும் மறந்து இக்கட்சியின் வரலாற்று நினைவுகளுடன் கட்சியின் வரலாறுகளைப் புதுப்பிப்பதற்காகவும் இக்கட்சி நடந்து வந்த பாதையை சற்று மாற்றி மறைந்த தலைவர் நடந்து வந்த பாதையில்  நாம் நடக்க வேண்டும் என்ற ஆவாவில் வந்தவர்களுக்கும் எமது கட்சியை எவ்வாறு வளர்க்க முடியும் ? இவ்வாறு எமது வாக்குப் பலத்தை அதிகரிக்க முடியும்  என்று எமக்கு ஆக்க பூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறிய அனைவருக்கும் நன்றிகள். 
 எமது வாக்குகளை வைத்துப்பார்க்கின்ற போழுதும் எமக்கு இங்கு நடக்கின்ற அட்டூளியங்களை பார்கின்ற போதும் எமது தலைமைத்துவத்துவத்திற்க்கே ஒரு ஆசை வந்திருக்கிறது காத்தான்குடிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் வாக்களித்த மக்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற தேவையும் வந்திருக்கின்றது. ஆகவேதான்  கட்சியினுடைய தலைமைத்துவம் எமக்கு சாதகமானதும் யாரையும் பாதிக்காத முடிவுகளைத் தரும் என்று நம்புகின்றோம்.
 கடந்த வாரம் நான் தலைவரை சந்தித்த போது என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு  எதாவது செய்யவேண்டும் அவர்கள் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் எமக்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆகவேதான் நாம் அவர்களை உதாசீனம் செய்து விட முடியாது. அவர்களுக்கு நடக்கின்ற ஆட்டுளியங்களுக்கு எதிராக செயற்படக்குடிய பலமிக்க  ஒரு அரசியல் அதிகார பலத்தை எதிர்பார்க்கின்றார்கள் என்று கூறினேன் என்றார். மேலும்  தொடர்ந்த பேசுகையில்  
 
 இக்கட்சிக்கு எதிராக செயற்பட்டதும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செயற்பட்டதுமான சிலரை தற்பொழுது தேற்கடித்ததையிட்டு இக்கட்சி எம்மைப் பார்த்து  பெருமைப்படுகிறது. அல்ஹாம்துலில்லாஹ்.
 25 வருடகாலமாக அரசியல் செல்வாக்கில் இருந்த ஒருவரை வீழ்த்தியதோடு 50மூத்தையும் கடந்த எமது  வாக்குத்தான்  இந்த மாவட்டத்திலும் இந்த ஊரிலும்  SLMCயின்   வாக்கு வாங்கியையும் அதிகரிக்கச் செய்ததோடு இந்த மாவட்டத்துக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும்  பொற்றுக் கொடுத்திருக்கின்றது என்பது தலைவர் அவர்களுக்கு சிறந்த முறையில் புலப்படுகிறது. இதன் மூலம் எமக்கு சாதகாமான நிலைமை தேன்றியுள்ளது என நினைக்கிறேன்.
 நான் இக் காத்தான்குடியில் அனேகமான வீடுகளை சென்று பார்த்துள்ளேன் அப்போதுதான் மக்களின் கருத்து எனக்கு தெளிவாகத் தெரிந்தது. இன்று எமது ஊரின் பெண்கள் மத்தியில்  மிகப் பெறும் மன மாற்றம் வந்திருக்கின்றது இந்த ஊரின் அரசியல் அதிகாரத்தை மாற்ற வேண்டும் சிறந்தவர்களின் கையில் அரசியல் அதிகாரம் வர வேண்டும் என்ற மன மாற்றம் வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் எமக்கு கிடைத்த வாக்குகள் மூலம் எமது கட்சியின் உதவியோடு எமது பாதத்தை எமது பிரதேசங்களில் திடமாக பதிக்க வேண்டும் என்ற கட்டாய கடமைப்பாடு எமக்கு ஏற்பட்டுள்ளது. 


ஆகவேதான் உங்களின் ஆசைப்படி நீங்கள் அனைவரும் விரும்பினால் உங்களை தலைவரிடம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து தருவேன் என்றும் எமது மக்களின் விருப்பப்படி எமக்கு சாதகமான முடிவுகிடைக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்தித்தவனாகவும் எமது மறைந்த தலைவர் மாமனிதர் அஸ்ரப் அவர்கள் நடந்து வந்த பாதையை தொடர்ந்து நாமும் பயணிப்பதோடு இலங்கையின் ஏகபோக முஸ்லிம்களின்  தனித்துவமானதும் உரிமைக்கானதுமான கட்சியாக எமது கட்சியை மாற்ற நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக... என்று கூறி அவரது உரையை முடித்தார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :