இரு பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ள இருவரைத் தேடி கண்டி, கலகெதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் கலகெதர வேத்தேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தாய் 42 வயதைத் தாண்டிய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசி மூலம் அறிமுகமான இருவருக்கு வீட்டுக்கு வருமாறு குறித்த பெண் அழைப்பு விடுத்துள்ளார். இதன்போதே இந்த பாலியல் வன்முறை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பற்றிய எந்தவொரு தகவலும் குறித்த பெண்ணுக்குத் தெரியாதுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.