Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 3, 2015

avathani Media Network

மஹிந்தவை தூக்கு கயிறிலிருந்து காப்பாற்றினோம் என்கிறார் பிரதமர்

மனித உரி­மை மீறல்கள் தொடர்பில் உள்­ளக விசா­ர­ணையை உல­கி­லேயே மிகவும் புதி­ய­தொரு பொறி­மு­றையில் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். தென்­னா­பி­ரிக்­காவில் அமைக்­கப்­பட்ட நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினை பார்க்­கிலும் சிறப்­பா­ன­தொரு
பொறி­மு­றை­யைக் கொண்டு இலங்­கையின் தரத்தை உல­கத்­திற்கு எடுத்­துக்­காட்­டுவோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
நாம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்­தி­னருக்கு துரோகம் இழைக்கமாட்டோம். முன்னாள் ஜனா­திபதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை தூக்கு கயிறி­லி­ருந்து நாமே காப்­பாற்­றினோம் மேலும் மனித உரி­மைகள் பேரவை நிகழ்ச்சி நிர­லிலி­ருந்து இலங்கையை முழு­மை­யாக அகற்­றி­விட்டோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். சமா­தா­னத்­திற்­கான மக்கள் அமைப்பின் ஏற்­பாட்டில் கொழும்பில் புதிய நகர மண்டபத்தில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றின் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
மனித உரிமை மீறல் விவ­கா­ரத்­தி­லி­ருந்து இலங்கையை பாது­காக்கும் வகை­யி­லான அமெ­ரிக்­காவின் பிரேர­ணையை இன­வா­திகள் எதிர்க்­கின்றனர்.சர்­வ­தேச குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து நாட்டை மீட்க வேண் டும் என்ற தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ அல்­லது நானோ ,அமைச்­ச­ர­வையோ எடுக்­க­வில்லை. ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு மக்­களே இவ்­வாறு ஆணை வழங்­கினர்.
நாம் முன்­னெ­டுத்த நல்­லி­ணக்க மற்றும் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை சர்­வ­தேசம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. எங்கள் மீது சர்­வ­தேசம் நம்­பிக்கை கொண்­டுள்­ளது. இதற்­க­மைய ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை நிக­ழச்சி நிரலில் இருந்து இலங்கை விவ­கா­ரத்தை அகற்­றி­யுள்ளோம். இனிமேல் இலங்கை விவ­காரம் மனித உரிமை நிக­ழச்சி நிரலில் சேர்க்­கப்­ப­டாது.
எனினும் இரண்டு தரப்­பிலும் உள்ள இன­வா­திகள் மனித உரிமை விவ­காரம் நிக­ழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே விரும்­பு­கின்­றனர். சர்­வ­தே­சத்தின் குற்­றச்­சாட்டை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை நாம் சிறப்­பான முறையில் முன்­னெ­டுக்க வேண்டும். இல்­லையேல் சர்­வ­தே­சத்தின் விரோ­தத்­திற்கு நாம் உள்­ளாக நேரிடும். அது­மாத்­தி­ர­மின்றி மக்­களும் எம்மை ஆட்­சி­யி­லி­ருந்து தூக்கி எறிந்து விடுவர்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வ­தே­சத்­திற்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­மை­யி­னா­லேயே இந்த நிலை­மைக்கு இலங்­கை­யினால் முகங்­கொ­டுக்க நேரிட்­டது. இதனால் சர்­வ­தே­சத்தின் எதிர்ப்­புக்கு உள்­ளாக வேண்­டி­யேற்­பட்­டது. மஹிந்த ராஜ­பக்ஷ தனக்­காக மாட்­டிக்­க­கொண்ட தூக்கு கயி­றி­லி­ருந்து நாமே மஹிந்­தவை காப்­பாற்­றி­யுள்ளோம். பிச்­சைக்­கா­ரனின் காயங்­களை எம்மால் ஆற்­ற­மு­டிந்­துள்­ளது.
உல­கி­லேயே மிகவும் புதிய பொறி­மு­றையில் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம். தென்­னா­பி­ரிக்­காவில் அமைக்­கப்­பட்ட நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினை பார்க்­கிலும் சிறப்­பா­ன­தாக பொறி­மு­றை­யினை கொண்டு இலங்­கையின் தரத்தை உல­கத்­திற்கு எடுத்­துக்­காட்­டுவோம்.
இரண்டு தரப்­பி­ன­ராலும் குற்றம் இழைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் உண்மை கண்­ட­றிய வேண்டும். காணமல் போனோர் தொடர்பில் விசேட காரி­ய­லாயம் நிறு­வப்­படும். மேலும் இது தொடர்பில் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு ,அதன் தீர்­மா­னங்கள் மத தலை­வர்கள் உள்­ள­டங்­கிய கருணை சபைக்கு செல்லும். அவர்­களே அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை தீர்­மா­னிப்­பார்கள். உல­கி­லேயே புதி­ய­தொரு பொறி­மு­றையை நாம் ஏற்­ப­டுத்­த­வுள்ளோம்.
இதனை மஹிந்த ராஜபக்ஷ அன்றே செய்திருந்தால் இவ்வளவு தூரம் நாம் பயணிக்க வேண்டியதில்லை. நாம் வித்தியாசமான முறையில் சர்வதேசத்தை அனுகினோம். இனவாதத்தை கைவிட்டு நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. இவ்வாறு சென்றால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது போய்விடுவோ என்ற அச்சத்தினாலேயே எதிர்க்கட்சியினர் எமது செயற்பாடுகளை எதிர்க்கின்றனர் என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :