Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 6, 2015

avathani Media Network

வித்தியா, சோயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்வேண்டும் என்று நடை பயணம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா, கொட்டதெனிய சோயா ஆகியோர் பாலியல் படுகொலை தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
விதிப்பது மூலம் குற்றங்கள் நடைபெறுவதை
தவிர்க்க முடியும் என  இலங்கை போக்குவரத்து சபை நடை பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

சேயா, வித்தியா கொலையை கண்டித்து நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிய பயணம் ஆரம்பமானது. கிளிநொச்சியில் ஆரம்பமான இந்நடை பயணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் உட்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய நடைபவனி இன்று கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பமாகியது. புங்குடுதீவு மாணவி வித்தியா, கொட்டதெனிய சோயா ஆகியோர் பாலியல் வன்கொடுமையின் மூலம் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் இனிவருங்காலங்களில் இவ்வாறான குற்றங்கள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகிய இந்த நடைபவனி கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், மாகோ, குருநாகல், வறக்காப்பொல, கம்பஹா ஊடாக எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பைச் சென்றடைந்து அதிமேதாகு ஜனாதிபதி அவர்களிடம் மகஜர் ஒன்றையும் ஒப்படைக்கப்படவுள்ளது


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :