( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
திகாமடுல்ல மாவட்ட பொத்துவில் தொகுதியின் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இன்று(07) காரைதீவு பிரதேச செயலகத்தில் மிகச் சுறு சுறுப்பாக இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரியாக செயற்பட்டார்.
மேலும், காரைதீவு பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.பரீட் வாக்கெடுப்பு நிலையப் பொறுப்பாளராகவும், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி யூ.எல்.ஏ.மஜீட் பிரதம கண்காணிப்பாளராகவும் செயற்பட்டனர். பொலிசாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இளைஞர், யுவதிகள் மிக உற்சாகத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இதனைப் பார்க்கும் போது 'பாராளுமன்றப் பொதுத் தேர்தல்' போன்று காட்சியளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
'இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இவ்வாக்களிப்பு மாலை 3.00மணிக்கு முடிவடையுமெனவும், வாக்களிப்பு முடிவுற்றவுடன் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும்' எனவும் வாக்களிப்பு நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.பரீட் தெரிவித்தார்.




