Featured Home (TOP)

Recent Comments

Sunday, January 3, 2016

avathani Media Network

அங்கையன் கைலாசநாதன் அரங்கில் வலம்புரி கவிதா வட்டத்தின் 23வது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 23வது பௌர்ணமி கவியரங்கு கொழும்பு 12 அல் ஹிக்மா கல்லூரியில் 24-12-2015 வியாழக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.  வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.  அங்கையன் கைலாசநாதன் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலாபூஷணம் கவிஞர் வதிரி சி. ரவீந்திரன் சிறப்பதிதியாக கலந்து மறைந்த அங்கையன் கைலாசநாதன் பற்றி சிறப்புரையாற்றினார்.

வதிரி. சி. ரவீந்திரன் சிறப்புரையாற்ற வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது அவரது மைத்துனர் டாக்டர் கார்த்திகேசு சிவானந்தன் அவர்கள் காலமான செய்தி அவருக்கு கிடைத்தது. எனினும் வகவத்திற்கு வந்து சிறப்புரையாற்றுவேன் என்று தந்த வாக்கை காப்பாற்றவேண்டும் என்பதற்காக வகவ நிகழ்வினில் பங்கேற்றார். அன்னாரின் மைத்துனருக்காக வகவம் மௌனப் பிரார்த்தனை புரிந்தது. 

கவிஞர் ஈழகணேஷ் வரவேற்புரையையும், கவிஞர் மேமன் கவி நன்றியுரையும் வழங்கினர்.  

சிறப்பதிதி ரவீந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில், “மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி கவிதை பாடியவர் அங்கையன் கைலாசநாதன். பேராதனை பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியான கைலாசநான் கவிதையோடு நாவல்துறையிலும் பத்திரிகை துறையிலும் ஈடுபட்ட ஒருவர். பேராதனைப் பல்கலைக் கழக குறு நாவல் போட்டியில் பரிசு பெற்றார். பிறகு இது இவரால் நூலாக வெளியிடப்பட்டது.  மீனவர் வாழ்வைப் பற்றி இவரே முதலாவது நாவலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 38 கவிதைகள் அடங்கிய “அங்கையன் கவிதைகள்” நூலை 2002ல் வெளியிட்டார். அத்துடன் மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதிலே அதிக நாட்டம் உள்ளவராகவும் விளங்கினார்.  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் மெல்லிசைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியபோது அத்துறையிலே பிரபலம் பெற்ற முக்கிய சிலருள் கைலாசநாதனும் இருக்கிறார். வானொலி மெல்லிசைப் பாடல்களுக்கு களம் அமைத்த பெருந்தகை காலஞ்சென்ற எச்.எம்.பி.மொஹிதீன் என்பதையும் கட்டாயம் ஞாபகப்படுத்தவேண்டும்.

ஈழநாடு துணை ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் கடமை புரிந்த கைலாசநாதன் சமூகதீபம் காலாண்டு சஞ்சிகையையும், சாம்ராஜ்யம் என்ற சஞ்சிகையையும் நடாத்தியுள்ளார். இலங்கை வானொலியில் நாடக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். மொழிபெயர்ப்புத்துறையிலும் அங்கையன் ஈடுபாடு காட்டியிருக்கிறார். 38 வருடங்களே வாழ்ந்த அங்கையன் கைலாசநாதன் ஈழத்து இலக்கியத்துறையிலே தனது பெயரை தடம் பதித்து சென்றுள்ளார்” என்று குறிப்பிட்டார்.
கலாபூஷணம், சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனியின் தலைமையில் மிகவும் சுவையாக நடந்த கவியரங்கில் கவிஞர்கள் பிரேம்ராஜ், மட்டக்களப்பு லோகநாதன், வெளிமடை ஜஹாங்கீர், இப்னு அஸூமத், எஸ்.ஜனூஸ், பாணந்துறை நிஸ்வான், சமூகஜோதி எம்.ஏ.ரபீக், சங்கர் கைலாஷ், கலைக்கமல், சுஹைப் எம். காசிம் ஆகியோர் விதவிதமான கவிதா ஆற்றலால் சபையை கவர்ந்தனர்.  

தற்போது மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அங்கு நடைபெற்ற உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் வலம்புரி கவிதா வட்டத்தின் பணிகள் குறித்து உரையாற்றியதும் சபைக்கு அறிவிக்கப்பட்டது.  கவிஞர் தாசிம் அகமதுவும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வகவம் குறித்து எடுத்துரைத்ததை குறிப்பிட்டதோடு சில இலக்கிய தகவல்களையும் தெரிவித்தார்.
சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி அவர்களால் எழுதப்பட்டு மிக விரைவில் வெளியீட்டு விழா காணவுள்ள “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்” என்ற நூலினை முதன் முதலாக வகவ உறுப்பினர்களின் முன் நூலாசிரியர் அறிமுகப்படுத்தி வைத்தார். 

கலா விஸ்வநாதன், த. மணி, பஸ்லி ஹமீத், சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், ஏ.எம்.எஸ்.உதுமான், ரஷீத் எம் றியாழ், ஏ.எச்.எம்.அத்தாஸ், எஸ்.நிஹார், ரமீஸா இம்தியாஸ், சனா எம். யெஹ்யா, சாதிக் ஷிஹான், கவிநேசன் நவாஸ் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.



Read More
avathani Media Network

உயர் தரத்தில் உயர்ந்த இடம் பெற்றவர்கள்...

இன்று (03) வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சையில் அதிகூடிய இஸட் புள்ளிகைளப் பெற்று நாடாளவிய ரீதியில் முதலிடம் பெற்றோரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வர்த்தக பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற அகீல் மொஹமட் நாடாளவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் குருணாகலை மலியதேவ வித்தியாலயத்தின் மாணவராவார்.
அத்துடன் கணித பிரிவில் மட். வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை மாணவி எஸ்.நிசாங்கனி 4ஆம் இடம் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பாலசுப்ர மணியம் ஞானகீதன் 3ஆம் இடத்தையும், கலை பிரிவில் கொழும்பு பெண்கள் கல்லூரியின் பாதிமா அமீரா இஸ்மாயில் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞான பிரிவு
1ஆம் இடம் - தெபுலி உமேஷா - கம்பஹா ரத்னாவலி பெண்கள் பாடசாலை.
2ஆம் இடம் - ஜே.எம்.எம். முன்சிப் – புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான வித்தியாலயம்.
3ஆம் இடம் - யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா பெண்கள் பாடசாலை.

கணித பிரிவு
1ஆம் இடம் - தசுன் ஜயசிங்க - கொழும்பு ரோயல் கல்லூரி.
2ஆம் இடம் - நதீஷான் திசாநாயக்க – குருணாகலை மலியதேவ ஆண்கள் பாடசாலை.
3ஆம் இடம் - சச்சின் நில்மந்த – இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்.
4ஆம் இடம் - எஸ்.நிசாங்கனி - மட். வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை.

பொறியியல் தொழில்நுட்பம்
1ஆம் இடம் - சானக அநுருத்த - மாத்தளை புனித தோமஸ் கல்லூரி.
2ஆம் இடம் - இராஷ புத்திக – கொழும்பு ஆனந்தா கல்லூரி
3ஆம் இடம் - பாலசுப்ர மணியம் ஞானகீதன் – யாழ்ப்பாணம் இந்து கல்லூரி

உயிரியல் தொழில்நுட்பம்
1ஆம் இடம் - நவோதினி மாரசிங்க – பண்டாரவளை தர்மபால மகா விதியாலயம்.
2ஆம் இடம் - கருணை நாயகம் ரவீகரன் – யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரி.
3ஆம் இடம் - உபுலி அனுக்தரா – கேகாலை ஸ்வர்ணஜயந்தி மகா வித்தியாலயம்.

கலை பிரிவு
1ஆம் இடம் - ஜீவான நயனமாலி – குருணாகலை மலியதேவ பெண்கள் பாடசாலை.

2ஆம் இடம் - நிராஷா குலரத்ன – கண்டி புஷ்பதான பெண்கள் பாடசாலை
3ஆம் இடம் - பாத்திமா அமீரா இஸ்மாயில் – கொழும்பு பெண்கள் கல்லூரி
thinakaran.lk
Read More
avathani Media Network

நாளை பிரதமர் விஷேட உரை


பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 09.30 அளவில் அலரி மாளிகையில் வைத்து விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றிருந்த பிரதமர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். 

இவர் கடந்த டிசம்பர் 22ம் திகதி லண்டன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Read More
avathani Media Network

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

மட்டக்களப்பில் தொழிலாளி ஒருவர் மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் – காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஐயங்கேணியைச் சேர்ந்த எஸ்.சேகர் (வயது 52) என்பவர் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது.
அதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் தற்போது, பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

மாவனல்லை எம்.எம். மன்சூர் மொழிபெயர்த்த கே. ஜயதிகவின் ‘பட்டி’ நூல் வெளியீட்டு விழா

சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொடகே வெளியீடான மாவனல்லை எம்.எம். மன்சூர்  தமிழில் மொழிபெயர்த்த சிங்கள எழுத்தாளர் கே. ஜயதிகவின் சிறுகதைகள் அடங்கிய ‘பட்டி’ நூல் வெளியீட்டு விழா> எதிர்வரும் 10.10.2016 அன்று காலை 10 மணிக்கு மேமன்கவி தலைமையில் கொழும்புத் தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெறும்.
இவ்விழாவில் நூலின் முதற் பிரதியினை புரவலர் ஹாசிம் ஒமர் அவர்கள் பெற்றுக் கொள்வதுடன், இவ்விழாவில சிறப்பு விருந்தினராக கொடகே புத்தக நிறுவனத்தின் நிறுவனர் திரு. சிரிசுமன கொடகே அவர்களும், கே.ஜயதிலக அவர்களின்; பாரியார் திருமதி கே.ஜயதிலக அவர்களும் கலந்துக் கொள்வார்கள்.
வரவேற்புரையை மூத்த ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை நிகழ்த்த> நூலசிரியரை அறிமுகவுரையை திக்குவல்லை கமால் நிகழ்ததுவார். கருத்துரைகளை சிங்கள மொழியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹேசந்திர பதிரண அவர்களும், தமிழில் திருமதி வசந்தி தயாபரன் அவர்களும்  நிகழ்த்;துவார்கள்.
ஏற்புரையை நூலாசிரியர் கலாபூசணம் மாவனல்லை மன்சூர் நிகழ்த்துவார்.



Read More
avathani Media Network

3வது மாடியில் இருந்து குதித்து 18 வயது இளைஞன் தற்கொலை


மொனராகலை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞர், இன்று அதிகாலை போதையில் வீட்டுக்கு சென்ற போது, பெற்றோருடன் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து விரக்தியடைந்த அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிந்துள்ளார். 

இது குறித்த மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Read More
avathani Media Network

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின!

2015ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. 

இதனை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Read More
avathani Media Network

கார் மோதியதில் மூன்றரை வயது குழந்தை பலி

தெஹிவளை பேருந்து தரிப்பிடத்தில் தாயுடன் நின்று கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தை கார் மோதியதில் பலியாகினர்.
நேற்று பிற்பகல் ஏற்பட்ட குறித்த விபத்தில் குழந்தை ஸ்தலத்தில் பலியாகியதுடன் அவனது தாய் பலத்த காயங்களுடன் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொஸிலார் தெரிவித்தனர்.
தாய் மற்றும் குழந்தை பேருந்து தரிப்பிடத்தில் அருகே பேருந்துக்காக காத்திருக்க வேளையில், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாதையை விட்டு விலகி அவர்கள் மீது மோதியதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Read More
avathani Media Network

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் அவசரமான கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் அவசரமான கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
தமது அணியில் இருந்து பலர் அரசாங்கத்துடன் இணையப் போவதாக வெளியான தகவலை அடுத்தே அதனை தடுக்கும் வகையில் இந்த அவசர கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த கலந்துரையாடல்கள் சிலவற்றில் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, கூட்டு முன்னணியில் இருந்து எவரும் விலகிச் செல்ல தடையில்லை என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றப்படுவதற்கு தமது அணி எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் யோசனை தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமையன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் அறிவித்தல் விடுக்கவுள்ளார்.
Read More
avathani Media Network

நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் சிரமதான நிகழ்வு

(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்)
நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் சமூக சேவை  பிரிவினால் சிறார்களின் நன்மை கருதியும் சமூக சேவை ஊக்குவிப்பு அடிப்படையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு லகான் விளையாட்டுக் கழக சமூக சேவை பிரிவின் இணைப்பாளர் எம்.ஆர்.எம். றிசான் அவர்களின் தலைமையிலும் மற்றும் லகான் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.எம்.ஷாகிர் அஹமட் அவர்களின் தலைமையில் இன்று 02-01-2016 சனிக்கிழமை இமாம் றூமி வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இச்சிரமதான நிகழ்வில் லகான் விளையாட்டு நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர் மற்றும் பாடசாலை அதிபரும் கலந்துகொண்டனர்.
நிந்தவூரில் சிறந்த விளையாட்டு கழகமாக திகழும் லகான் விளையாட்டுக் கழகமானது சிறந்த முறையில் பல சமூக சேவைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





Read More