Featured Home (TOP)

Recent Comments

Monday, February 23, 2015

Unknown

தனியார் பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்

கொழும்பு - 

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ்ஸின் மீது ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இக்கல்வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த மதவாச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 
இன்று அதிகாலை குறித்த தனியார் பயணிகள் பஸ் ஆராச்சிக்கட்டு பிரதேசத்திற்கு அருகில் வந்த போது அங்கு நின்றுள்ள சிலர் பஸ்ஸின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பஸ்ஸின் சாரதி சிலாபம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடியும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் சிலாபத்தின் ஊடான தூரப் பிரதேச பயணிகள் பஸ் மீது மாதம்பை, மஹவௌ போன்ற பிரதேசங்களில் வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிலாபம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :