Featured Home (TOP)

Recent Comments

Saturday, February 28, 2015

Unknown

மக்களின் நன்மைகருதி அலரிமாளிகை பூங்கன்றுகள் அகற்றல்

நாட்டு மக்களின் நன்மைகருதி அலரி மாளிகையைச் சுற்றி அழகுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பூங்கன்றுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால்  குறித்த பூங்கன்றுகள் வைத்து அலரி மாளிகை சுற்றுப்புறம் அழகுபடுத்தப்பட்டிருந்தது.
அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்படுவதாகவும் இவற்றை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுவதாகவும் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதியே இந்த நடவடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவைளை அலரி மாளிகையிலிருந்து அகற்றப்படும் அனைத்து பூங்கன்றுகளும் கம்பஹாவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :