Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 10, 2015

Unknown

முகத்தை மூடும் தலைகவசம் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக இடைநிறுத்தம்

முகத்தை முழு­மை­யான மறைக்கக் கூடிய தலை­க­வ­சங்­களை தடை­செய்­வது குறித்த சட்டம் தற்­போ­தைக்கு இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் மேலும் ஆரா­யப்­பட்டு இறுதி தீர்­மானம் ஒன்று எடுக்­கப்­படும் எனவும் பொது ஒழுங்­குகள் அனர்த்த முகா­மைத்­துவம் மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க கேச­ரிக்கு தெரி­வித்தார்.




பொது மக்கள் பல­ரிடம் இருந்து கிடைத்த தொடர்ச்­சி­யான கோரிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே இவ்­வாறு தற்­கா­லி­க­மாக அதனை இடை நிறுத்தி விட்டு அந்த தடை தொடர்பில் மேலும் ஆராய தீர்­மா­னித்­த­தா­கவும் அது குறித்து பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க மேலும் குறிப்­பிட்டார்.

இந்த சட்ட அமு­லாக்­கத்­திற்கு பல்­வேறு தரப்­பி­னரும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றனர். சுய பாது­காப்பு கார­ணி­க­ளுக்­கா­கவே முகத்தை முழு­மை­யாக மறைக்­கக்­கூ­டிய தலை­க­வசம் அணி­வ­தாக அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

அதனால் குறித்த சட்­டத்தை தற்­போ­தைக்கு அமுல்­ப­டுத்த வேண்டாம் என உரிய அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் தொடர்ந்தும் அச்­சட்­டத்தை அமுல் செய்­வதா? இல்லையா என கலந்துரையாடல்களை நடத்தி இறுதி தீர்வு எட்டப்படும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :