Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 10, 2015

Unknown

பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்த வேண்டும்

தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்­தவின் கொள்­கை­களே உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளது.எனவே, பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும். இப்­பா­ரா­ளு­மன்­றத்தின் காலம் காலா­வ­தி­யாகி விட்­டது என அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல தெரிவித்தார்.



மேலும், ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியை சேர்ந்த பலர் ஐ.தே.கட்­சியில் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட முண்­டி­ய­டிக்­கின்­றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள பெருந்­தோட்­டத்­துறை அபி­வி­ருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தற்­போ­தைய பார­ளு­மன்றம் காலா­வ­தி­யாகி விட்­டது. இன்றும் இப்­பா­ரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கொள்­கை­க­ளாகும்.

ஆனால் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சியே உள்­ளது. எனவே இப்­பா­ரா­ளு­மன்றம் மாற வேண்டும்.ஐ.தே.கட்­சி­யினர் அனை­வரும் புதி­தாக பொதுத் தேர்தல் ஒன்று நடத்­தப்­பட வேண்­டு­மென்றே எதிர்­பார்த்­துள்­ளனர். எனவே தேர்தல் முறைமை மாற்­றத்­திற்கு முன்­ப­தாக பொதுத்­தேர்­தலை நடத்தி புதிய பாரா­ளு­மன்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும்.

அவ்­வாறு பொதுத் தேர்தல் நடத்­தப்­படும் போது நிச்­சயம் ஐதே­கட்சி வெற்றி பெறும். சுதந்­திரக் கட்­சி­யினர் பொதுத்­தேர்தல் நடத்­தப்­படும் போது அதில் ஐ.தே.கட்­சியில் போட்­டி­யி­டு­வ­தற்­காக சுதந்­திரக் கட்­சியில் பலர் முண்­டி­ய­டித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

ஐ.தே. கட்­சியில் வேட்பு மனு கேட்டு காத்­தி­ருக்­கின்­றனர்.அவர்­களின் விப­ரங்­களை தற்­போது வெளி­யிட முடி­யாது.

தேசிய அரசு

பாராளுமன்றத் தேர்­த­லுக்கு பின்னர் தேசிய அர­சாங்கம் அமை­வது தொடர்­பாக எவ்­வி­த­மான எதிர்ப்பு நிலைப்­பாடும் எம்­மிடம் கிடை­யாது. ஏனென்றால் இன்று ஜனா­தி­பதி பிர­தமர் எம்மை சார்ந்­த­வர்கள்.
அது மட்­டு­மல்ல எதிர்க்­கட்­சி­யி­னரும் எம்மை சார்ந்­த­வர்­க­ளா­கவே உள்­ளனர்.

எனவே தேசிய அரசு தொடர்­பாக எம்­மிடம் எது­வி­த­மான எதிர்ப்பும் கிடை­யாது.ஆனால் அதே­வேளை ஐ.தே.கட்­சி­யினர் பெரும்­பா­லா­ன­வர்கள் பொதுத் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தையே எதிர்­பார்க்­கின்­றனர்.
நாட்டு மக்­களும் தேர்­த­லையே எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அனைத்து யோச­னை­களும் உள்­ள­டக்­கப்­பட்டு அதற்­கான நகல் தயா­ரிக்­கப்­பட்டு விட்­டது. அடுத்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் இது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

தேர்தல் மாற்றம்

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்­கி­டையே பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டுள்­ள­தோடு இது தொடர்பில் இணக்­கப்­பாடும் காணப்­பட்­டுள்­ளது.

100 நாள்

கடந்த கால ஆட்­சி­யா­ளர்­களை போன்று காட்டு தர்பார் நடத்த முடி­யாது. குற்­ற­வா­ளிகள் தொடர்பில் சாட்­சி­யங்கள் திரட்­டப்­பட்டு தக­வல்­களை சேக­ரித்து சட்டப் பிர­கா­ரமே ஒரு­வரை கைது செய்ய வேண்டும்.

அதை விடுத்து வெள்ளை வான்­களில் ஆட்­களை கடத்தி அச்­சு­றுத்த முடி­யாது.கடந்த 20 வருட கால ஆட்­சியில் நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்­க­வில்லை.பெரும்பாலானோர் இவ்வாறான நிலைமைக்கு பழக்கமாகி விட்டனர். அதனாலேயே அவசரப்படுகின்றனர்.

100 நாட்களுக்குள் சட்ட ரீதியாக அனைத்தையும் மேற்கொள்ள கால அவகாசம் போதாது என்றார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் கே. வேலாயுதம் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :