Featured Home (TOP)

Recent Comments

Saturday, March 7, 2015

Unknown

“லக்சந்த செவன” திட்டத்தை ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார்

கொலன்னாவ சாலமுல்ல ‘லக்சந்த செவன’ மற்றும் அங்கொடை பிரதேசங்களில் குறைந்தவருமானமுள்ள குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டடங்களை நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை சென்று நேரில்பார்வையிட்டார்.


அமைச்சர் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் நிசாம்தீன், இலங்கை காணி மீட்டல்அபிவிருத்திக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா (மதனி),
பொது முகாமையாளர் திருமதி சேனாதீர, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் சபீக் ரஜாப்டீன், நகரஅபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் ஆகியோர் அவ்விடங்களுக்குச் சென்றிருந்தனர்.

அங்கிருந்த குடியிருப்பாளர்கள் அமைச்சரிடம் தமது குறைபாடுகளை தெரிவித்த போது, அவைபற்றி கண்டறிய ஒரு குழுவை தாம் நியமிக்கவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

சாலமுல்லை வீட்டுத் திட்டத்தில் 216 குடியிருப்பாளர்கள் வசித்து வருகிறார்கள். தற்பொழுது நிர்மாணிக்கப்படும் வீடமைப்புத் தொகுதியுடன் வீடுகளின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கும்.

பிரஸ்தாப வீடமைப்பு திட்டத்திற்கு அருகில் பிரிவு 01, பிரிவு 02ஆகியவற்றின் நிர்மாண வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றையும் அமைச்சரும் குழுவினரும் பார்வையிட்டனர். அங்கொடையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்காக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் வீட்டுத் தொகுதியை நிர்மாணித்து வருகிறது.

அரசாங்கத்தின் 100 நாள் செயல்திட்டத்திற்கு அமைவாக அவற்றின் எஞ்சிய வேலைகளை துரிதமாக நிறைவுசெய்யுமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் எனஅமைச்சரின் ஊடகச்செயளார் தெரிவித்தார்.







(ஜுனைட்.எம்.பஹத்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :