மாவனல்லை, மஹாவத்த, தக்கியா வீதியைச்
சேர்ந்த இமாத் அஹமத், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நோபல் ஆங்கில உயர் பாடசாலையில்
இடம்பெற்ற வருடாந்த விளையாட்டுப் போட்டியில் சாக்குத் தூக்கி ஓடும் பிரிவில் முதலாவது
இடத்தை வென்றுள்ளார்.
தனது தாயின் உயர் கல்விக்காக
பெங்களூரில் தங்கி இருக்கும் இவர், கொடிகேபாலயா நோபல் ஆங்கில உயர் பாடசாலையில் ஆறாம்
தரத்தில் கல்வி கற்று வருகிறார்.
விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் திறமையாக செயல் பட்டுவரும் மாணவன்
இமாத் அஹமத், இந்த
போட்டியில் வெற்றி பெற்றது தாய் நாடான இலங்கைக்கு பெருமையை சேர்த்துள்ளது.
இவர் மாவனல்லை சாஹிரா தேசிய
பாடசாலையின் பழைய மாணவியான டொக்டர் (யூனானி) நஜீயா அப்துல் கனியின் மூத்த மகன் ஆவார்.