நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சோமசிறி தெரிவித்தார்.
ஏப்ரல் 06ஆம் திகதி முதல் மே மாதம் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உணவு மாதம் கடைப்பிடிக்கப்படுவதையிட்டு இந்த திடீர் சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை 80 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 15 நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
