Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 7, 2015

Unknown

காத்தான்குடி நகர அபிவிருத்தி திட்டத்திற்கான விசேட கூட்டமும் களப்பயணமும்.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடலும் களப்பயனமும் எதிர்வரும் (09.04.2015 வியாழன்) அன்று காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும், நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ றவூப் ஹக்கீம் இன் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன் ஏற்பாட்டிலும்,அழைப்பின் பேரிலும் மேற்படி நிகழ்வு இடம்பெற இருப்பதுடன் அமைச்சு மட்டத்திலான உயர் அதிகாரிகள் குழுவும் காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளது.

இவ்விஜயத்தின் போது காத்தான்குடி தோணா அபிவிருத்தி,    காத்தானன்குடி கடற்கரை பூங்கா, காத்தான்குடி ஆற்றங்கரையில் பெண்களுக்கான உடற்பயிற்சி நடைபாதையுடன் கூடிய பசுமை பூங்கா, காத்தான்குடி பஸ்தரிப்பிட நிலையம்,    விக்டறி விளையாட்டு மைதான அபிவிருத்தி, பூநொச்சிமுனை கடற்கரை பூங்கா அமைத்தல், மேற்படி குறிப்பிட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டு திட்டமதிப்பீட்டு அறிக்கையினையும், திட்ட வரைபினையும் மேற்படி உயர்மட்ட குழு தயாரிக்க இருப்பதாகவும் யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

மேற்படி அதிகாரிகள் குழு ஏறாவூர், கல்முனை, அட்டாளைச்சேனை, பொத்துவில், சம்மாந்துறை, ஆகிய பிரதேசங்களுக்கும் (10.04.2015 வெள்ளி) அன்று விஜயம் செய்ய உள்ளதாகவும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

காத்தான்குடி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும்  முன்னால் நகர முதல்வர் யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

மேற்படி திட்டமிடல் கூட்டங்களிலும், களப்பயணத்திலும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், அலிசாஹிர் மௌலானா உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

மேற்படி விசேட கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள்,காணிமீட்பு திணைக்கள கூட்டுத்தாபணத்தின்  உயர் அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உப்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் றவூப் ஹக்கீம் இன் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :