Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 7, 2015

Unknown

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் புதிய தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு கூடக் கட்டிடத் திறப்பு விழா. -அமைச்சர்களான இராதாகிறிஸ்னன், மன்சூர் அதிதிகள்-


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் புதிதாய் அமைக்கப்பட்ட தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு கூடக் கட்டிடத் திறப்பு விழா இன்று (06) இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எச்.எம்.பாறூக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிறிஸ்னன், மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் முதன் நிலை அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நீர்ப்பாசனப் பிரதியமைச்சர் திருமதி.அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஐ.தே.கட்சி சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி, கல்வி அமைச்சின் தேசியப் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் ஏ.எல்.சிறாஜ், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு உரை நிகழ்த்துகையில்: ' இன்று நாம் மற்றவர் பாராட்டுமளவிற்குக் கல்வியில் முன்னேறியிருந்தாலும், இந்த முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்துச் செல்ல வேண்டுமென்பதே எனது பேரவாவாகும். இன்று திறக்கப்பட்டுள்ள பல்தொழிநுட்ப ஆய்வு கூடத்தினை எமது மாணவர்கள் நமது கலாச்சாரப் பண்பாடுகளை சரியாகப் பேணியவர்களாகப் பயன்படுத்துவார்களாயின் நிச்சயம் நமது சமூகம் பல் துறைகளில் முன்னேற்றம் காணும் என்பதில் சந்தேகமில்லை.' 

இராஜாங்க அமைச்சர் இராதாகிறிஸ்னன் உரை நிகழ்த்துகையில்: 'ஒரு நல்ல மனிதருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை அள்ளிப்போட்டதன் மூலம் அதிமேதகு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வந்தார். மைத்திரி வந்ததால் இன்று நாட்டில் நல்லாட்சியொன்று நடைபெறுகிறது. இந்த நல்லாட்சியில் தமிழ்- முஸ்லிம், சிங்கள மக்கள் என்றும் ஒற்றுமையாக வாழவேண்டும். 'நான் பழைய கதைகளில் கலவரத்தின் போது கைவிடப்பட்ட சிங்களக் குழந்தைக்குப் பாலூட்டிப் பாதுகாத்த முஸ்லிம் பெண், யுத்தத்தின் போது தோல்வியடைந்த சிங்கள மன்னனைக் காப்பதற்காகத் தனது உயிரைப் பறிகொடுத்த முஸ்லிம் பெண்' போன்ற வரலாறுகளைப் படித்துள்ளேன். இன்று முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டுள்ளனர். முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இதற்குக்காரணம் பொது பலசேனவும், ஞானசார தேரருமே. இதற்காக இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் பொதுபலசேனவுக்கும்,ஞானசாரருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்தஒற்றுமை என்றும் நிலைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்' எனத் தெரிவித்தார்.









Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :