அங்கம் 04
இப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்படவிருந்த வேளையில் மெத்தைப்பள்ளிவாயலில் பேஷ் இமாமாக இருந்தபோது, அப்பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்கள் தனவந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கத்முல் குர்ஆன் ஓதித் தமாம் செய்த வகையில் அவர்களுக்கு
வழங்கப்பட்ட பணத்தொகைகளை
வீட்டுக்கு வெளியே வந்ததும் முழுவதுமாகப் பறித்துக்
கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, உள்ளுர் பத்திரிகையிலும் பல வாரங்களாக
நீடித்து வந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு பதவியிறக்கப்பட்டவரும், ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி ஏ.எம். காலித் ஹஸன் (பலாஹி), காத்தான்குடி
மத்திய கல்லூரி ஆசிரியரும், ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவருமான மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி), முன்னாள் நகர சபை உறுப்பினரும், ஜம்இய்யாவின்
நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி எம்.ஐ.எம். முபாறக் (பலாஹி) போன்றவர்களும் அந்தப் பிரேரணைக்கு எதிராகத் துள்ளிக்குதித்து, போர்க்கோலம் கொண்டு, சபைக்கு மத்தியில் நின்று தாண்டவமாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமளியின் காரணமாக ஜனநாயக வழியில் இப்பிரேரணை
மீதான வாக்கெடுப்புக்கூட அங்கு நடைபெறாது
கண்ணியமிக்க உலமாக்கள்
ஆளுக்கொரு பக்கமாகக்
கலைந்து சென்றதாகவும்
தகவல் கிடைத்தது.
இந்தக் களேபரத்தினால்
எமது கடிதம் அன்றையக் கூட்டத்தில் பரிசீலனைக்கு
எடுக்கப்படவில்லை. எமக்கொரு முடிவை அறிவிக்கவுமில்லை.
இவ்விடத்தில் இந்த காலித் ஹஸன் மௌலவியைப் பற்றியும்
நாம் சிறிது குறிப்பிட வேண்டும்.
2011ம் ஆண்டு நகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நாம் ‘போர்வாள்’ சின்னம் ஏந்தி எதிர்த்து நின்ற நவக்கிரக டே;பாளர்களுக்கு ஆதரவாக இவர் மெத்தைப்பள்ளிவாசல் மிம்பரில் நின்றுகொண்டு ஜும்ஆப்பிரசங்கம் செய்த இறையச்சமில்லாதவர்.
2011ம் ஆண்டு நகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நாம் ‘போர்வாள்’ சின்னம் ஏந்தி எதிர்த்து நின்ற நவக்கிரக டே;பாளர்களுக்கு ஆதரவாக இவர் மெத்தைப்பள்ளிவாசல் மிம்பரில் நின்றுகொண்டு ஜும்ஆப்பிரசங்கம் செய்த இறையச்சமில்லாதவர்.
பணத்திற்காகவும், பட்டம் பதவிகளுக்காகவும் அநியாயம் செய்யும் அரசியல் வியாபாரிகளை
மக்கள் மத்தியில்
அதிலும் ஜும்ஆப்பிரசங்கத்தின் மூலமாக ‘நல்லவர்கள்,
வல்லவர்கள்;’ என்று பொய்ச்சாட்சிப்பத்திரம் வழங்கியவர்.
இவ்வாறான பின்னணிகளைக் கொண்ட இந்த காலித் ஹஸன் மௌலவியின் தலைமையில்தான் நமது பிரதேசத்தின் மூத்த உலமாவை விமர்சித்த ஹிஸ்புல்லாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட கண்டனப் பிரேரணைக்கு எதிராக, சபையிலிருந்த
ஏனைய மூத்த உலமாக்களையும் மதிக்காது ஆவேசமாகப்
பொங்கியெழுந்து, ஆக்ரோஷமாகக்
கூக்குரலிட்டு, அனைத்து உலமாக்களையும் அங்கிருந்து ஆளுக்கொரு
பக்கமாக ஓடச் செய்திருக்கின்றனர்.
உலமாக்களின் சபை ஒழுங்கை அப்பட்டமாக இவர்கள் மீறியிருக்கின்றனர். உலமாக்களுக்கு மத்தியில்
நின்று சண்டித்தனம்
புரிந்திருக்கின்றனர். எம்மைப் பொறுத்தவரை இந்த காலித் ஹஸன் மௌலவியும், அவருக்கு முட்டுக் கொடுத்து நின்ற ஏனைய மௌலவிமார்களும் ஒரு சாதாரண மூக்குப்பொடித் தும்மலுடன்
இந்த ஊரில் அடக்கப்பட வேண்டியவர்களாகும்.
ஜம்இய்யாவின் இக்கூட்டம் குழப்பத்தில்
முடிந்த பின்னர், இதே காலித் ஹஸன் மௌலவி யாரோ ஒருவருடன்
தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக மகிழ்ச்சியாகவும், சிரித்துக் கொண்டும் சந்தோஷமாக உரையாடியதாகவும் எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் பின்னரே இவர் அன்று காலையிலிருந்து பலரது வழிகாட்டலுக்கமைய திட்டங்கள்
தீட்டி இந்த ஜம்இய்யாவின் கூட்டத்தில் இவ்வாறு குழப்பம் விளைவித்து குறித்த பிரேரணையை நிறைவேற்றாமல் செய்வதற்கு
அரும்பாடுபட்டுள்ளார் என்பதும் எமக்குத் தெரிய வந்தது.
ஹிஸ்புல்லாவின் விமர்சனப்
பேச்சுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இப்பிரேரணையைக்
குழப்பியடித்து உலமாக்களைத்
தலைதெறிக்க ஓட வைத்த குஷியில் இவர் யாருடன் அப்படி நீண்ட நேரம் உரையாடியிருப்பார்?
குறித்த திகதியில், குறித்த நேரத்தில் இவரது தொலைபேசி இலக்கம் 45 நிமிடங்களுக்கும் மேலாக யாருடைய இலக்கத்துடன் இணைந்திருந்தது?
என்பதெல்லாம் இன்னும் சில வாரங்களில் எமக்குக் கிடைக்கும்போது, மறுமுனையில்
இவரை குஷிப்படுத்தியது யார்? என்ற விபரங்களையும் நாம் அம்பலப்படுத்துவோம்.
இவ்வாறான பல நகர்வுகளுக்கு
மத்தியில் கடந்த 19ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சம்மேளனத்திற்கு முதலாம் குறிச்சி தரீக்காவாதிகளால் ஒரு கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
தன் விபரம் என்னவெனில்,
கடந்த 22.05.2015 அன்று காத்தான்குடி முதலாம் குறிச்சியில்
தேசிய தௌஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாட்டில் மார்க்க விளக்கக்கூட்டம் ஒன்று நடைபெறும் என சுவரொட்டிகள்
மூலம் முன்கூட்டியே
பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்ததைப் பார்த்த இத்தரீக்காவாத அமைப்பு, அவ்வாறு கூட்டம் நடைபெற்றால் பிரச்சினைகள்
இடம்பெறும் என்றும், அதனால் அக்கூட்டத்தை தடைசெய்யுமாறும் அக்கடிதத்தில் கேட்டிருந்தது.
அதனைக் கவனத்திற்கெடுத்த சம்மேளன நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமாவின் சார்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சம்மேளனத்தின்
செயலாளர் சபீல் நளீமிக்குக்கூட அறிவிக்காமல்
உடனடியாக அவசரக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம்
எடுத்து அக்கூட்டத்தை
தடை செய்யுமாறு
கேட்டு மறுநாளே காத்தான்குடி நகர சபையின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
இந்தக் கடிதத்தில் சம்மேளனத்தின்
பிரதித் தலைவரான சட்டத்தரணி ஏ.எல். அப்துல் ஜவாத் அவர்களும்,
உதவிச் செயலாளருமே
கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குப்
பின்னர் நாம் எமது கடிதத்தைக் கையளித்தபோது,
காலையில் நிர்வாக சபைக் கூட்டம் நடைபெற்று
முடிந்து விட்டதே.. இனி அடுத்த வாரம் 17ம் திகதி நடைபெறும்
நிர்வாக சபைக் கூட்டத்தில்தான் இதனைப் பரிசீலிக்க முடியும் என்று கருத்துக்கூறிய சம்மேளன முக்கியஸ்தர்கள், 19ம் இரவு கையளிக்கப்பட்ட இத்தரீக்காக்காரர்களின் கடிதத்தையும் 24ம் திகதி நடைபெறும் நிர்வாக சபைக்கூட்டத்தில்தான் நாம் பரிசீலனைக்கு எடுக்க முடியும் என்று சொல்லவில்லை.
மாறாக, உடனடியாகவே உப செயலாளரை வைத்து அவசரக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம்
எடுத்து மறுநாளே தேசிய தௌஹீத் ஜமாஅத்தின்
கூட்டத்தை தடை செய்யுமாறு கேட்டு நகர சபைக்கும் கடிதம் அனுப்பி விட்டார்கள்.
தரீக்காவாதிகளின் இந்த எதிர்ப்புக் கடிதம் முதலாம் குறிச்சி ஜும்ஆப்பள்ளிவாசலில் இருந்துதான்
தயாரிக்கப்பட்டதாகவும், தொலைபேசி மூலம் தரீக்கா அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு இக்கடிதத்தில் கையொப்பமிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், பின்னர் வீடு வீடாகச் சென்று அவர்களிடம்
கையொப்பம் பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மதிப்புக்குரிய சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களே..!
இந்த ஊர் மக்கள் உங்களின் சகோதரர் அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அஹமது லெப்பை அவர்கள் மீது வைத்திருந்த பற்றையும், பாசத்தையும்,
மரியாதையையும் அவரது மறைவின் பின்னர் உங்கள்மீதுதான்
வைத்துள்ளார்கள் என்பதனை நீங்கள் தெளிவாக விளங்கிக்
கொள்ள வேண்டும்.
உங்களின் சகோதரரால்; இந்த நாட்டுக்கே முன்னுதாரணமாக இவ்வூரில்
உருவாக்கப்பட்ட சம்மேளனத்தை
பலரும் பலவதமாக விமர்சித்து வருகின்ற போதிலும், இந்த ஊர் மக்கள் யாவரும் சம்மேளனம் என்றதும் உங்களைத்தான் முதலில் மனதில் நினைத்து அதனை மதிப்புடன்
நோக்கி வருகின்றனர்.
சம்மேளனம் எத்தகைய உதவிக் கோரிக்கைகளை மக்களிடம் முன்வைத்தாலும்
அங்கு நீங்கள் ஒருவர் படித்த மனிதராக, சட்டம் தெரிந்தவராக, நேர்மையாளராக,
சேர்மனின் பின் வாரிசாக அங்கே இருக்கிறீர்கள்
என்று கருதித்தான்
மக்கள் தமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகிறார்கள்.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பாரபட்சமாக,
மௌனமாக எல்லாம் நடந்து உங்கள்மீதுள்ள மதிப்பையும்,
மரியாதையையும் கேள்விக்கும்,
விமர்சனங்களுக்கும் உள்ளாக்கிக்
கொள்ள வேண்டும்?
நூதனசாலையைத் திறப்பதற்கு சகோதரர் ஹிஸ்புல்லாவுக்கு சம்மேளனத்தின்
தலைவரான சுபைர் ஊஊ கண்முன்னே இருக்கத்தக்க,
பிரதித் தலைவரான உங்களை ஏன் அங்கு அழைத்துச் சென்றார் என்பது பற்றி நீங்கள் இன்று வரைக்கும் சற்றேனும் சிந்தித்துப்
பார்த்தீர்களா?
சுபைர் CC பட்டத்திற்கும், பதவிக்குமாக
ஏற்கனவே ஹிஸ்புல்லாவுக்கு வழிப்பட்டு வழிகெட்டவராகவும், அவரது வழிகேட்டில்
வீழ்ந்தவராகவும் இந்த மண்ணில் ஓர் நடைப்பிணமாக
நடமாடுவது யாவருக்கும்
தெரியும்.
நீங்களோ மக்களின் மனங்களில்
நேர்மையாளராகவும், மதிப்புக்குரியவராகவும் இன்னமும் இருப்பதன்
காரணமாகவே இப்போது உங்களையும் அவரது வழியில் தந்திரோபாயமாக அழைத்துச் சென்று, நூதனசாலையைத் திறக்கச் செய்து, வழிகேட்டில் பகிரங்கமாக விழச் செய்து மக்களின் மனதில் உங்களை வெறுப்புக்குரியவராக ஆக்கியிருக்கின்றார் என்பதை ஏன் இன்னமும் நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்?
17ம் திகதி நடைபெற்ற சம்மேளனக்
கூட்டத்தில் நீங்கள் எமது கடிதம் குறித்து ஒரு வார்த்தையேனும் நியாயத்தைப்
பேசாமல் தலைகுனிந்து
மௌனமாக இருந்தது ஏன்?
சம்மேளனத்தின் சட்டச் சிங்கமாக கடந்த காலங்களில் கர்ஜித்து
அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வழிநடாத்தி
வந்த உங்களால் இனிமேல் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு உங்களை மௌனிக்கச் செய்தது யார்?
இஸ்லாத்தின் கண்ணியத்தையும், ஈமானின் உறுதிப்பாட்டையும், உலமாக்களின்
கௌரவத்தையும், சம்மேளனத்தின்
யாப்பையும் நிலைநிறுத்துமாறு கடிதம் அனுப்பிய நாங்களா?
மலை எழுந்தாற்போன்று கண்ணெதிரே
சம்மேளனத்தின் தலைவர் சுபைர் CC இருக்கையில், நரித்தந்திரமாக
உங்களை உடன் அழைத்துச் சென்று உருவச் சிலையகத்தைத் திறந்த பாவத்தில்
உங்களையும் கூட்டாக்கி
உங்களின் சமூகப் பணி முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளச் செய்த ஹிஸ்புல்லாவா?
உங்களை இவ்வாறெல்லாம் பகிரங்கமாக
வழிகெடுத்து மௌனிக்கச்
செய்தால்தான் அல் மனார் அறிவியல் நிலையத்தைப்
போல எமது ஊரின் பொதுச் சொத்தான சம்மேளனத்தையும் வருங்காலத்தில்
தனக்கு வாசியாகச்
செயற்படக்கூடிய அலுவலகங்களாகச்
செயற்பட வைக்கலாம்
என்கிற அவரது நரித்தந்திரம் இந்த மண்ணில் ஒருக்காலும் எடுபடாது.
சம்மேளனம் அமைக்கப்பட்டபோது ஏறபடுத்திக்கொள்ளப்பட்ட ஜம்இய்யதுல் உலமாவுடனான
ஒப்பந்தம் முழுமையாகவும்,
அர்த்தமுள்ளதாகவும் இதன் பிறகேனும் இந்த மண்ணில் சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இன்றேல் ஜம்இய்யதுல் உலமா உட்பட இவ்வூரிலுள்ள இஸ்லாமிய நாமத்தைச்
சுமந்துள்ள அமைப்புக்கள்
அனைத்தும் சம்மேளனக்
கூட்டிலிருந்து விலகிக் கொள்ள நேரிடலாம்.
தொடரும்..
