Featured Home (TOP)

Recent Comments

Thursday, July 30, 2015

Unknown

மஹிந்தவின் காலத்தில்தான் முஸ்லிம்கள் பெருமளவில் ஐ.ம.சு.கூ.இல் ஒன்றிணைந்தனர் - களுத்துறை மாவட்ட வேட்பாளர் மில்பர் கபூர்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் வர­லாற்றில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் தான் முஸ்­லிம்கள் பெரு­ம­ளவில் ஒன்­றி­ணைந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு வாக்­க­ளித்­தார்கள் என களுத்­துறை மாவட்ட வேட்­பா­ளரும் பேரு­வளை முன்னாள் நக­ர­சபைத் தலை­வ­ரு­மான மில்பர் கபூர் தெரி­வித்தார்.

ஆனால் கடந்த வருடம் அளுத்­கம தர்கா நகரில் ஏற்­பட்ட  அனர்த்த சேத அழி­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து நூற்­றுக்கு எண்­பது வீத முஸ்­லிம்கள் ஜனா­தி­பதி பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தி­னார்களே தவிர மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிர்ப்பு தெரி­வித்து  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. 

அவ்­வாறு பெரு­ம­ளவில் முஸ்­லிம்கள் வாக்­க­ளித்­தும் தர்கா நகர் சேத அனர்த்த அழிவு தொடர்­பாக இன்று வரை இந்த நல்­லாட்­சியில் பொலிஸ் விசா­ரணை குழு, ஜனா­தி­பதி ஆணைக்­குழு  விசா­ரணை ஒன்றை நிய­மித்து  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன , பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்போர் ஏன் குற்­ற­வா­ளி­களை கைது செய்து சிறையில் அடைக்­க­வில்லை? எனவும் கேள்வி எழுப்­பினார்.  
பாணந்­துறை  தொட்­ட­வத்தை மாஹோ முற்­சந்­தியில் கடந்த சனிக்­கி­ழமை மாலை இடம் பெற்ற தேர்தல் பிர­சார மக்கள் சந்­திப்புக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்­பினார். பாணந்­துறை பிர­தேசத் தலைவர் இபாஸ் நபுஹான்  தலை­மையில் இடம் பெற்ற இக் கூட்­டத்தில் மில்பர் கபூர் தொடர்ந்தும்  உரை­யாற்­று­கையில்  தர்கா நகர் சம்­ப­வத்தில் நூறு வீடு­களை எரித்­தனர், பத்து வியா­பார தளங்­களை தீக்­க­ரை­யாக்­கி­னார்கள், இரண்டு உயிர்­களை  பலி­யெ­டுத்­தனர்  இவ்­வாறு நடை­பெற்றும் இப் புதிய  நல்­லாட்­சியில் சம்­பவம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்டு குற்­ற­வா­ளி­களை  கைது செய்­யாமல் இருக்கும் மர்மம் என்ன?

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றம் பிர­தமர்   ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் புதிய நல்­லாட்­சிக்கு  ஆறு­மாத காலம் ஆகியும் தர்கா நகர் சம்­பவம் தொடர்­பாக  குற்­ற­வா­ளி­களை  கைது செய்­ய­வில்லை. ஆனால் இந்த நல்­லாட்­சியில் குற்­ற­வா­ளி­களை கைது செய்­யவே மாட்­டார்கள்  இதற்கு பிறகும் இனியும் விசா­ரணை மேற்­கொள்ள மாட்­டார்கள்.

இவ்­வாறு  விசா­ரணை செய்து குற்­ற­வா­ளி­களை  கைது­செய்­யாமல் இருக்கும் காரணம் என்ன தெரி­யுமா? இதை செய்­த­வர்கள் அவர்­களே தான்.

ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிக்க சூழ்ச்சி செய்து இதற்கு மஹிந்த சம்பந்தம், கோத்­த­பாய ஆட்கள், இரா­ணு­வத்­தினர் என முஸ்­லிம்­களை திசை­தி­ருப்­பினர். அது தான் அவர்­களின் சூழ்ச்சி. 

ஜோன்ஸ்டன்  பெர்­ணாந்து, பஷில் ராஜபக் ஷ ஆகி­யோரின் குற்­றச்­சாட்­டுகள் நான்கு ஐந்து வரு­டங்கள் பழமையானவை  அவர்­களின் மீது விசா­ரணை மேற்­கொண்டு சிறையில் அடைக்க முடி­யு­மென்றால் ஒரு வரு­டத்­திற்கு முன் இடம்­பெற்ற தர்கா நகர் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களை விசா­ரணை மேற்­கொண்டு ஏன் கைது செய்து சிறையில் அடைக்­காமல் இருக்­கின்­றார்கள். 

மஹிந்த ராஜபக் ஷவுக்கு செய்த சூழ்ச்சி  இப்­போது  வெளிச்­சத்­துக்­கு வந்­துள்­ளது. ராஜித சேன­ரத்­ன­வுக்கு களுத்­துறை மாவட்­டத்தில் ஐ.தே.க.கட்­சியின் சிங்­கள இன மக்­களின் வாக்­குகள் இல்லை. குரங்கு போல் கட்­சி­க­ளுக்கு பாய்ந்து  தாவி செல்­வது சிங்­கள வாக்­கா­ளர்­க­ளுக்கு தெரியும் .

இதை ஏற்­க­னவே அறிந்து கொண்ட ராஜித சேன­ரத்ன களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பெறத் திட்டம் தீட்­டினார். அதுதான் அவரின் சூழ்ச்சி . 

பொது­பல சேனா தலைவர் ஞான­சார தேரர் களுத்­துறை மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்று வெற்றிப் பெற போட்­டி­யி­டு­கிறார். ராஜித சேனா­ரத்­த­னவை விமர்­சித்து பாடம் புகட்­டவே  இதனால் ராஜித சேனா­ரத்ன களுத்­துறை  மாவட்ட முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முயல்­கிறார்.

இவர் தான் பெரிய சூழ்ச்­சி­காரர். எனவே களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்கள் ராஜித சேன­ாரத்­ன­வுக்கு  ஏமாந்து போய்­விட வேண்டாம். அவர் முஸ்­லிம்­களின் தலைவர் அல்ல. 

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் சென்ற முஸ்லிம்  தலை­வர்கள் இப்­போது திரும்ப மஹிந்த ராஜபக் ஷவை சூழ்ந்துக்  கொண்டு  மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்­துள்­ளனர். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் 1994 ஆம் ஆண்டு எனது பாட்டன் காலஞ் சென்ற பளீல் ஹாஜி­யா­ரை இம் மாவட்ட முஸ்­லிம்கள் பெரும்­பான்மை பலத்­துடன்  வெற்றிப் பெறச் செய்­தார்கள்.  

அதே போன்று எனது மாமா மர்ஜான் பளீ­லுக்கும் பெரும் பலத்தை கொடுத்­தீர்கள். அதே போன்று  இம்­மா­வட்ட மக்கள் இரு­ம­டங்கு வாக்கு பலத்தை தந்து வெற்றி பெறச் செய்­யுங்கள்.

32 வய­தை­யு­டைய நான் பேரு­வளை நக­ர­சபை தலைவர் பதவிக் காலத்தில் 862 மில்­லியன் ரூபா நிதி மூலம் பேரு­வளை பிர­தே­சத்தில் குன்றும் குழி­யு­மாக இருந்த வீதி­க­ளுக்கு ‘காபர்ட்’ வீதி­யாக மாற்­றி­ய­துடன்  பாரிய அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்டேன். 

நான் யாருக்கும் பயப்­ப­ட­மாட்டேன். எனது சொந்த நிதியை பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­கிறேன்.

களுத்­துறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பாளர் நான் ஒருவன் மட்­டுமே.

களுத்­துறை மாவட்டம் மாத்­தி­ர­மல்ல இரத்தினபுரி, கம்பஹா, காலி, மாத்தறை ஆகிய இம்மாவட்டங்களில் ஏக முஸ்லிம்  வேட்பாளராகவே களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன்.  

எனவே  இத் தேர்தலில் மாவட்ட மக்கள் அனைவரும் அணி திரண்டு அமோக வாக்குகளால் வெற்றிப் பெறச் செய்யுமாறு வேண்டுகிறேன்.

நான் பாராளுமன்றத்துக்கு  தெரிவானால் பாணந்துறை தொட்டவத்தை பிரதேசத்தை சிங்கப்பூர் பிரதேசமாக மாற்றியமைப்பேன் என்றார்.     

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :