மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும் பீல் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீர்த்தா பிரபாகரன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் இவர் இணைந்து கொண்டுள்ளார்..
இவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஐந்து முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றிக்காக பாடுபடுவதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக தானும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேரும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.
