கணினி உலகின் புதிய வரவான மைக்ரோ சொப்டின் விண்டோஸ்-10 பதிப்பு இன்று வெளியாகின்றது. பல்வேறு அதிவேக, நவீனஅம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7,8வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வஅனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1வகை கணனிகள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களைவைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்துநவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக்கொள்ளலாம் என மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரியஅளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து,விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள்இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகும் விண்டோஸ்-10பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள்இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம்தெரிவித்துள்ளது.

