கருணாவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் இடமளிக்கப்படும் என் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் பொது செயலாளர்கள், இந்த விடயத்தை தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தேர்தலுக்கு பின்னர் தமக்கு தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
