Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 23, 2015

avathani Media Network

காடையர்களின் சரணாலயமாக காத்தான்குடிப்பிரதேசம்.


(முஹம்மது நியாஸ்)

காத்தான்குடியின் அரசியல் இதிகாசத்தில் சுமார் இருபத்தியைந்து வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு அரசியல்வாதி முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா. இவர் கடந்த காலங்களில் இந்நாட்டில் பல பிரதியமைச்சர் பதவிகளில் வீற்றிருந்த சந்தர்ப்பங்கள் மற்றும் ஆளும் அரசுடன் ஒட்டியுறவாடிய போதெல்லாம் இந்த சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட அந்நியர்களின் அடவாடித்தனங்கள், முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் தனக்கு வாக்களித்த மக்களின் அபிலாசைகள் விடயத்தில் எத்தகையதொரு வெகுளித்தனமானதும் பேடித்தனமாதுமான போக்கை கையாண்டுவந்தார் என்பதை இந்த நாடுமட்டுமல்ல, முழு சர்வதேசமே நன்கறியும்.

இவ்வாறு தேசிய மட்டத்தில் மாத்திரமல்லாது உள்ளூர் அரசியல் மட்டத்திலும் இந்த ஹிஸ்புல்லாவின் அரசியல் வங்குரோத்து நிலை நாளுக்குநாள் பரிதாபகரமாகிக்கொண்டே வந்தது.

காத்தான்குடி அரசியல் அரங்கத்தில் கால்நூற்றாண்டுகாலம் பழமை வாய்ந்த ஒரு பழுத்த அரசியல்வாதியின் அஸ்தமனத்திற்கு கடந்த 17.08.2015 அன்று இப்பிரதேச மக்களால் தீர்க்கமான முடிவுரை எழுதப்பட்டது.
ஒரு காலத்தில் இப்பிரதேசத்தின் அரசியல் அரங்கத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த ஹிஸ்புல்லா கடந்த பாராளுமன்றபொதுத்தேர்தலில் வெறும் பதினாறாயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்று மிகவும் பரிதாபகரமாக தோற்கடிக்கப்பட்டார்.

ஆனாலும் தன்னுடைய தோல்வியை ஜீரணிக்கமுடியாத முடியாத ஹிஸ்புல்லா பல தரப்பட்ட வழிகளிலும் முயற்சிசெய்து தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (21.08.2015) அதாவது தேசியப்பட்டியல் மூலமாக நியமனம் பெற்ற ஹிஸ்புல்லா தனக்குக்கிடைத்த இந்த [பதவியை தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாகக் கொண்டாடிய முறைமைதான் இப்போது சர்வதேச மட்டத்தில் கூட பேசுபொருளாக மாறிப்போயுள்ளது.

இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் சுமார் நாற்பத்தியைந்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற ஓர் சுமூகமான, வன்முறைகளற்ற ஓர் தேர்தலாக கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றப்போதுத்தேர்தலை நாம் குறிப்பிட முடியும். நல்லாட்சியின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற நமது நாட்டின் தலைசிறந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் கூட இத்தேர்தல் நடைபெற்ற விதத்தை மிகவும் சிலாகித்துப் பாராட்டிப் பேசியிருந்ததை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டோம்.

அதற்கு ஆதாரமாக சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் வாழ்கின்ற நாட்டின் சகல பிரதேசங்களிலும் தேர்தல்கால பிரச்சாரங்கள் தொடக்கம் தேர்தலில் வெற்றிபெற்ற பிரமுகர்களின் வெற்றிக்கொண்டாட்டங்கள் கூட மிகவும் அழகானமுறையில், அடுத்தவர்களுக்கு தொந்தரவுகளற்ற வகையில் நடைபெற்றிருந்ததையும் நாம் அறிந்தோம்.

ஆனால் இஸ்லாமிய நகரமென்றும், இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களினதும் நெறிமுறைகளினதும் உறைவிடம் என்றும் மார்தட்டிப் பேசப்படுகின்ற கிழக்கிலங்கையின் காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்கால நடவடிக்கைகளோ மிகவும் வெறுக்கத்தக்க, அசூசையான, வன்முறைகள் சார்ந்த செயற்பாடுகளால் இப்பிரதேசத்தின் கௌரவத்தை மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் முஸ்லிம்களின் நற்பெயருக்கும் மாசு கற்பிக்கும் விதமாகவே அமைந்திருந்தது.
முழுக்க முழுக்க ஜனநாயக வழியில்அமைந்த இலங்கை நாட்டின் வரலாற்றுப்பதிவாக சிலாகித்துப்பேசப்பட்ட இந்த பாராளுமன்றப்பொதுத்தேர்தல் நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களாக செயற்பட்டுவருகின்ற சில காடையர்களும் கழிசடைகளும் இணைந்து நடாத்திய வன்முறைசார்ந்த வெறியாட்டத்தினால் அதன் தூயமைத்தன்மையினை இழந்து இலங்கையில் இதுவரைகாலமும் நடைபெறாத மிகவும் மோசமான ஒரு தேர்தலாக இத்தேர்தலை அறிவிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு அது இட்டுச்சென்றது.
பொதுமக்களால் தோற்கடிக்கப்பட்டு அரசியல் இருந்து வெறுத்து, ஒதுக்கி, ஓரங்கட்டப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கபப்ட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தததும் ஹிபுல்லாவின் ஆதரவாளர்கள் பலநூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் சகிதம் டெலிகொம் நாற்சந்தியில் இருந்து காத்தான்குடியின் பிரதான மற்று உள்ளக வீதிகளில் கோஷங்களை எழுப்பியவாறே ஊர்வலமாக சென்றதுடன் நடுவீதிகளில் பட்டாசுகளை கொழுத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.

மேலும் தேர்தலில் தமக்கு எதிராக களமிறங்கிய வேட்பாளர்கள் மற்றும் அவ்வேட்பாளர்களின் அதரவாளர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை முற்றுகையிட்டு கற்களாலும் கம்பு, பொல்லுகளாலும் தாக்குதல் நடாத்தினர்.

இந்த வேளையில் அவ்விடத்தில் காவற்கடமையில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கண்ணாடிப்போத்தல் ஒன்றின் மூலமாகத்தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளானதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கிறார்.

மேலும் இச்சம்பவத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமான கடாபி ரெஸ்ட் இன் நிறுவனத்தின் கண்ணாடிகளும் அங்கிருந்த பலவகையான உணவுகளும் சேதப்படுத்தப்பட்டன. மேலும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் மிகவும் அசிங்கமான, அம்மண வார்த்தைகளால் வசைபாடினர்.

இந்த நிறுவனத்தின் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு தலைமை தாங்கி நடாத்தியவர் ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும்ஹிஸ்புல்லாவே என்னுடைய அரசியல் தந்தைஎன்று மூச்சுக்கு முன்னூறு தடவைகள் கூறிக் கொக்கரித்துக்கொள்கின்ற காலாவதியாகிப்போன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் என கடாபி ரெஸ்ட் இன் நிறுவனத்தில் சம்பவ நேரத்தில் கடமையில் இருந்த காசாளர் வாக்குமூலமளித்துள்ளார். இந்த பரீட் என்பவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

அதனைத்தொடர்ந்து புதிய காத்தான்குடி கடற்கரை வீதியால் ஊர்வலமாகச் சென்ற குழுவொன்று அங்கே பெண்கள் சந்தைப்பகுதியில் உள்ள BM. ஆஷிக் என்பவருக்குச்சொந்தமான வியாபார நிறுவனம் ஒன்றையும் கற்களைக்கொண்டு தாக்கியதில் காத்தான்குடி தேசிய பாடசாலைக்கு முன்னால் உள்ள கடற்கரை வீதியின் நடுவே கண்ணாடி போத்தல் ஓடுகள் நிரம்பிக்காணப்பட்டன.

இன்னும் ஹிஸ்புல்லாவின் பெண் ஆதரவாளர்கள் சிலர் எதிர்த்தரப்பு ஆதரவாளர்களான சில பெண்களுடைய வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதில் நான்கு மாத கர்ப்பிணியான ஒரு பெண் உட்பட மேலும் இரு பெண்கள் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இவ்வாறு ஊர்வலமாகச் சென்ற ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களான காடையர்கூட்டம் மஃரிபுடைய நேரத்தில் புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய மார்க்கப்பிரச்சார அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைமைக்காரியாலயத்தின் அருகே சென்று அங்கே தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு அசிரத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை கொளுத்தி பள்ளிவாயிலின் கதவருகே போட்டு கூச்சலிட்டனர். குறித்த தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயிலுக்கு அருகே வந்து பட்டாசு கொளுத்தி கலவரத்தை தூண்டியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்துர் ரஊப் மௌலவியுடைய அத்வைத கொள்கை சார்ந்தவர்கள் என அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பள்ளிவாயில் அருகே பட்டாசு கொளுத்தி தொழுகைக்கு இடையூறு விளைவித்த காடையர்களை பள்ளிவாயிலுக்குள் இருந்த சிலர் அகன்று செல்லுமாறு வேண்டிக்கொண்டதும் அக்காடையர்கள் உடனே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களை மிகவு மூர்க்கத்தனமான முறையில் தாக்கியதில் அவர்கள் மூவரும் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்காக வந்திருந்த காடையர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த பொல்லுகளில் கூர்மையான ஆணிகள் பதிக்கப்பட்ட, இவ்வாறான கலவரங்களில் பயன்படுத்துவதற்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தயாராக எடுத்துவந்திருந்தமை இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
இத்தாக்குதல் சம்பவத்தில் அதிகளவான பாதிப்புக்குள்ளானவர் மௌலவி MCM. ஸஹ்றான் (மஸ்ஊதி)யுடைய சகோதரர் MCM. ரிழ்வான் ஆவார். தாக்குதலுக்குள்ளாகி சில மணிநேரங்கள் இவருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தில் இருந்த ஆணிகள் தலையை துளைத்து, ஊடுருவிச்சென்று மூளையை தாக்கி மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகின்ற அளவுக்கு வெறித்தனமாக தாக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்திருந்தன.

பின்னர் பள்ளிவாயிலுக்குள் இருந்த இளைஞர்கள் சிலர் வெளியில் வந்து காடையர்களை துரத்த ஆரம்பித்ததும் அவ்விடத்திலிருந்து அக்காடையர் கூட்டம் பின்வாங்கிச் சென்றது. இதில் அருவருக்கத்தக்க ஓர் விடயம் என்னவெனில் பள்ளிவாயிலின் முன்னால் பெண்கள், சிறுவர்கள் என பலதரப்பட்ட மக்க்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றபோது அப்துர் றஊப் மௌலவியின் ஆத்மீக சீடரான ஜுநூப் என்னும் பெயருடைய தலையில் வெண்ணிறத்தொப்பியணிந்து காணப்பட்ட காடையன் ஒருவன் நடுவீதியில் வைத்து தனது கீழங்கியை உயர்த்தி தன்னுடைய உள்ளாடையை காண்பித்துக்கொண்டு சென்றான். இந்தளவுக்கு அப்துர் றஊப் மௌலவியுடைய சீடர்களும் ஆதரவாளர்களும் ஆன்மீக(?)ப் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இன்னும் குறித்த இந்த காடையர்களை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது அதில் இருவர் அகப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மிதமிஞ்சிய போதையுடன் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் இருவரும் பொலீசாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதில் மிகவும் வேதனையானதும் இந்நாட்டின் காவல்த்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமும் என்னவென்றால் குறித்த பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரமாக பல வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதிலும் காவல்த்துறையினர் அங்கு சமூகமளிக்கவும் இல்லை. வன்முறையில் ஈடுபட்ட காடையர்களும் தம்மை கேள்வி கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் மூர்க்கத்தனமாக செயற்பட்டதுமேயாகும்.

இவ்வாறு ஊர்மக்களால் இனி சமூகத்திற்கு தேவையில்லை என்று ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட ஹிஸ்புல்லா தனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர்கள், தனக்கு வாக்களிக்காதவர்கள் என்று சந்தேகத்துக்குரியவர்கள் மற்றும் தன்னுடைய கீழ்த்தரமான அரசியல் வங்குரோத்து நிலைமையினை கடந்த காலங்களில் சுட்டிக்காட்டி விமர்சித்த உலமாக்கள், அமைப்புக்களை பழிவாங்குவதற்காக தன்னுடைய ஆதரவாளர்கள் என்னும் பெயரிலுள்ள காடையர்களையும், கஞ்சா வெறியர்கள மற்றும் கழிசடைகளையும் ஏவிவிட்டு நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் நடைபெறாத அளவிற்கு மிகவும் வரம்பு மீறிய வகையிலான வன்முறைகளை காத்தான்குடியில் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.
காத்தான்குடியில் ஹிஸ்புல்லா எவ்வளவுதான் அபிவிருத்திகளை மேற்கொண்டு ஊரை அழகுபடுத்தினேன் என்று மார்தட்டிக்கொண்டாலும் அவர் தன்னுடைய அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலந்தொட்டே அரங்கேற்றிவருகின்ற இவ்வாறான காடைத்தனமான நடவடிக்கைகளாலேயே கணிசமான மக்களால் புறக்கணிக்கப்பட்டுவருகிறார்.

ஆயினும் கடந்த காலங்களில் நாட்டில் அரசோச்சிய சர்வாதிகார ஆட்சிமுரைகளின் காரணமாக ஒவ்வொரு தேர்தலிலும் தன்னுடைய அடியாட்களை பயன்படுத்தி கணிசமான கள்ள வாக்குகளாலும் தேர்தல் மோசடிகளாலுமே ஹிஸ்புல்லாஹ் வெற்றியீட்டினார். ஆயினும் நட்பு அரசாங்கம் அதுபோன்ற மோசடிகளுக்கு இடம்கொடுக்காமல் மிகவும் நீதியான முறையில் இந்த தேர்தலை நடாத்தியதன் காரணமாக காத்தான்குடி பிரதேசத்தில் ஹிஸ்புல்லாவின் செல்வாக்கு பரிதாபகரமாகப் பல்லிளித்துப்போனது.

ஹிஸ்புல்லாவினுடைய சுமார் கால்நூற்றாண்டு கால அரசியல்வாழ்க்கை பிரதேச மக்களின் மனசாட்சிக்கு முன்னால் மண்டியிட்டு மடிந்தது.

யதார்த்தமாக சொல்லப்போனால் இதுபோன்ற வெற்றிக்கொண்டாட்டங்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாட வேண்டிய உரிமையும் தகுதியும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு முன்மொழியப்பட்ட அரசியல்வாதிகளுக்கே அதிகளவு இருக்கிறது. ஆனால் அவர்களோ வெற்றியடைந்ததும் தானுண்டு தன்பாடுண்டு என்று இருந்துவிட்டார்கள். எந்தவொரு தமிழ், சிங்கள, முஸ்லிம் பிரதேசத்திலும் தேர்தலில் வெற்றியடைந்ததற்காக எந்தவொரு அரசியல்வாதியும் யாருடைய சொத்துக்களுக்கு உயிர்களுக்கோ சேதமேற்படுத்தவுமில்லை, அந்த வழியில் தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டவும் இல்லை.

ஆனால் தனது சொந்த ஊர்மக்களாலேயே படு கேவலமாக முறையில் தோற்கடிக்கப்பட்டு ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட இந்த ஹிஸ்புல்லா ஏனைய மந்திரிகளின் கால்களில் விழுந்து பின்கதவால் பிச்சையாக வீசியெறியப்பட்ட இந்த தேசியப்பட்டியல் உறுப்புரிமையை வைத்துக்கொண்டு இந்தளவுக்கு தன்னுடைய சொந்த மண்ணிலேயே அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறார் என்றால் இவரை விடவும் ஒரு கேவலமான, கீழ்த்தரமான, மனிதத்தன்மை என்பது மருந்தளவுக்கும் இல்லாத ஒரு அற்பத்தனமான இழிந்த பிறவியை இந்த இலங்கை நாடு இப்போதுதான் முதன் முதலாக அடையாளங்கண்டுள்ளது என்பதே உண்மையாகும்.
இலங்கை நாட்டில் காலாவதியாகிப்போன ராஜபக்ஷ இனவாத ஆட்சியில் பள்ளிவாயில்கள் தகர்க்கப்பட்டபோது இந்த முஸ்லிம் சமூகத்தின் உணர்வலைகள் எந்தளவுக்கு உக்கிரமடைந்து காணப்பட்டது என்பது நாமெல்லோரும் அனுபவித்த ஒன்று. ஆனால் சமூகத்திற்கு காவலானாக இருந்து, மாற்றுமத தீய சக்திகளிடமிருந்து இந்த சமூகத்தையும் சமூகத்தின் மதவுரிமைகளையும் பாதுகாக்கவேண்டிய இந்த பொறுப்புதாரியே இன்று இஸ்லாமிய இறையில்லத்தை தன்னுடைய காடையர்களை ஏவிவிட்டு தாக்கியழிக்க எத்தனித்தால் நாளை இதுவே இனவாதிகளுக்கு முன்மாதிரியாக அமையாதா?

நாளையொருநாள் பேரினவாதக் காடையர்கள் இஸ்லாமிய இறையில்லங்களை தாக்குகின்றபோது அதற்கு எதிராக கோஷம் எழுப்புவதற்கு இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு என்ன அருகதையிருக்கிறது?

தன்னுடைய மனித நாகரீகமற்ற அடிமட்ட அரசியல் சித்தாந்தத்திற்கு மாற்றுக்கருத்துள்ள ஒரு மார்க்கப்பிரச்சார அமைப்பை இவ்வாறு தெருப்புறக்கிகளைக்கொண்டு தாக்கியழிக்க முற்படுகின்ற இந்த ஹிஸ்புல்லாதான் நாளை பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் மதவுரிமைக்காக குரல் எழுப்பப்போகிறாரா?

தனக்கு வாக்களித்த மக்கள் வாழ்கின்ற தன்னுடைய பிரதேசத்தில் இந்தளவுக்கு வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட ஹிஸ்புல்லா தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லைஎன்று கூறி ஒரு ஊடக அறிக்கையின் மூலம் தப்பித்துவிடமுடியாது. காரணம் ஹிஸ்புல்லாவின் தேர்தலுக்கு முன்னரான மேடைப்பேச்சுக்கள் அனைத்துமே இவ்வாறான வன்முறையை தூண்டும் வகையில்தான் அமைந்திருந்தன.

தான் தேர்தலில் வெற்றிபெறுகின்ற போது எதிர்த்தரப்பினரை விரட்டவேண்டும், ஊரை விட்டே துரத்தியடிக்க வேண்டும், பாடம் புகட்டவேண்டும்என்பன போன்ற சக இயக்கங்கள், கட்சிகள், தனிநபர்கள் மீது குரோதத்தையும் கொலைவெறியையும் தூண்டுகின்ற விதத்தில்தான் ஹிஸ்புல்லாவின் சொற்பொழிவுகள் கணிசமானவைகள் அமைந்திருந்தன.

மேலும் நேற்றுமுன்தினம் தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற தேசிய தௌஹீத் ஜமாஅத்தோடு தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நயவஞ்சகத்தனமான முறையில் மீறியது ஹிஸ்புல்லாதான்.

அடுத்தவர்கள் மீது சுமத்துகின்ற அவதூறுகளை சமூகத்திற்கு முன்னால் வந்து நிரூபியுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தபோது இரண்டு கவேட்பாளர்கள் மாத்திரம் முன்வந்தார்கள். ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ள திராணியற்ற நிலையில் பெட்டைத்தனமாகப் பின்வாங்கினார் ஹிஸ்புல்லா. அது ஒப்பந்தத்தை மீறுகின்ற செயல் என்பதை தேசிய தௌஹீத் ஜமாஅத் சுட்டிக்காட்டியதும் உடனே அந்தரத்தில் பல்ட்டியடித்து அந்த ஜமாஅத்தைசமூகத்தை விட்டும் துடைத்துவிடுவதற்கு அந்நிய சக்திகளைக் கொண்டும் திட்டம் தீட்டினார்.

இன்று நமது நாட்டிலுள்ள பள்ளிவாயில்கள் தொடர்பில் பொதுபல சேனா போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனவோ அதேபோன்ற, அதைவிடவும் மோசமான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அந்நிய சமூகத்தார் மத்தியில் நயவஞ்சகத்தனமாகக் காட்டிக்கொடுத்தார். அந்த முயற்சி பலிக்காமல் போனபோதுதான் தன்னுடைய அடுத்தகட்ட ஆயுதமான வன்முறையை பிரயோகித்து காத்தான்குடியில் இயங்கிவருகின்ற ஒரு முன்னணி ஏகத்துவப் பிரச்சார அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத்தை பழிவாங்க நாடினார்.

எனவே இந்த ஹிஸ்புல்லா என்பவர் காத்தான்குடி சமூகத்தால் எப்போதோ ஒதுக்கி ஓரங்கட்டப்படவேண்டியவர். மாத்திரமன்றி இந்த சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் தேசிய மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷக்கிருமியும் இந்த ஹிஸ்புல்லாதான் என்பதை பொதுமக்கள் மறந்துவிடக்கூடாது.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :