Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 23, 2015

avathani Media Network

அரசியல் அறிவு இல்லாமல் ஹிஸ்புல்லாவை கொச்சைப் படுத்துவதை நிறுத்தவும்- உலமாகட்சி


தேர்தலில் தோல்வியுற்ற ஹிஸ்புள்ளா தேசிய பட்டியல் மூலம்
பாராளுமன்றத்துக்கு உள் வாங்கப்பட்டதற்காக அவர் மீது
காழ்ப்புணர்வு கொண்டவர்கள் ஜனாதிபதி மீது குற்றம் சாட்டுவது அவர்களின்அரசியல் அறியாமையை காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.



இது பற்றி உலமா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா காத்தான்குடி மக்களின் சேவகனாக சகலராலும்இனங்காணப்பட்டவர். அவரது காலத்தில் காத்தான்குடி பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. எனினும் அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவைஆதரித்தார் என்பதை சிலர் பாரியகுற்றமாக பிரச்சாரம் செய்தனர். தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்தலைவர் ஜனாதிபதி மைத்ரி சார்பு வேற்பாளரே தவிர மஹிந்தவின் ஆதரவாளன் அல்லஎன அவர்விளக்கமாக கூறியதை சிலர்ஏற்றுக்கொள்ளாமல் அது பற்றி மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரமே செய்தனர்.



ஒரு பொய்யை பலமுறை சொன்னால்உண்மையாக தெரியும் என்பதனால் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியுற்றார்.



எனினும் பெரு மனது கொண்ட ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் ஊரான காத்தான்குடி மக்களை அரசியல் அனாதையாக்கி விடக் விடாது என்பதற்காக ஹிஸ்புள்ளாவை பாராளுமன்றஉறுப்பினராக்கினார்.



தோல்வியுற்ற ஒருவர் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதை யாரும் குற்றமாக பார்க்கத்தேவையில்லை.  அது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. அத்துடன் தேர்தல்ஆணையாளராலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



கடந்த அரசின் இறுதியில் தேர்தலில் தேல்வியுற்றிருந்த அமீரலியும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றுள்ளார்.



அத்துடன் இந்த நாட்டின் அரசியலில் சிறந்த ஒழுக்கவியலை போதிக்கும் ஜே வி பி கூட தோல்வியுற்ற ஒருவரையே தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமித்துள்ளது என்பது அவசியம் நோக்கப்படத்தக்கதாகும்.



ஆகவே அரசியல் அறிவு இல்லாமல் ஹிஸ்புள்ளாவை கொச்சைப்படுத்துவதையும், ஜனாதிபதியை குற்றம் சொல்வதையும் இத்தகையவர்கள் நிறுத்தி காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஹிஸ்புள்ளா மூலம் சிறந்த பலனை பெறஅவரோடு ஒத்துழைக்குமாறு உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.



(ஜுனைட்.எம்.பஹ்த் )

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :