Featured Home (TOP)

Recent Comments

Monday, September 21, 2015

avathani Media Network

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டில் ஹஜ்பெருநாள் விஷேட சிறப்பு நிகழ்வும், கவியரங்கும்

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின்  தலைவரான கலாபூஷனம்  மாறன்-யூ.செய்ன் அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யபட்டுள்ள ஹஜ்பெருநாள் விஷேட நிகழ்ச்சியின் சிறப்புநிகழ்வு எதிர்வரும் 2015-09-25ம் திகதி பி.ப.4.00 மணிக்கு பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர்  ஜனாப் அஷ்ஷெய்ஹ் – ஏ.எல்.எம். காஸீம் அவர்களும் கௌரவ அதிதியாக ஜனாப் அஷ்ஷெய்ஹ் – ஐ.எல்.எம். ஹாஸீம் சூரி (மதனி) – தலைவர் இஸ்லாமிய பத்வா குழு  அவர்களும் கலந்துகொள்ளும் நிகழ்விற்கு விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட  கலாச்சார ஒருங்கிணைப்பாளர் ஜனாப்  ஐ.எல்.எம்.தௌபீக் அவர்களும் பாலமுனை மின்ஹா மகாவித்தியாலய அதிபர் ஜனாப் எஸ்.எம்.எம்.அனிபா அவர்களும் அல்-ஹிதாயா வித்தியாலய அதிபர் ஜனாப் கே.எல்.உபைதுல்லாஹ் அவர்களும் இப்னு சேனா கனிஷ்ட வித்தியாலய அதிபர் ஜனாப் எம்.சாஹிர் ஹுசைன் அவர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நிகழ்வின் இறுதியில் கலாபூஷனம்  கவிஞர் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புக் கவியரங்கும் இடம்பெறவுள்ளது. 

கவியரங்கில்  பிரதேசத்தின்  தலைசிறந்த மூத்த , இளம் கவிஞர்கள் கவிதாயினிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். திறந்தவெளி நிகழ்வாக ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வுக்கு இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் ஆர்வலர்களனைவரையும் அழைக்கின்றனர்.

-மரியமின் புத்திரன்-

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :