Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 23, 2015

avathani Media Network

பிள்ளை கல்வியில் பின்னடைந்துள்ளான் என்பதற்கு பெற்றோராகிய நாமும் ஒரு காரணம்தான் - அஷ்ஷெய்ஹ் எம் சீ எம் றிழ்வான் மதனி

(எம்.எச்.எம்.அன்வர்)

எவ்வளவுதான் செலவளித்தும் பாடசாலைக்கு அனுப்பியும் எனது பிள்ளை கல்வியில் குறைந்த புள்ளிகளையே பெற்றுக்கொள்கின்றான் என அங்கலாய்க்கும் பெற்றோர் இதற்கு தாமும் ஒரு காரணம் என்பதை உணர்வதில்லை இவ்வாறு காத்தான்குடி பிரதேச செயலக சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வில் விஷேட சொற்பொழிவாளராக உரையாற்றிய பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம் சீ எம் றிழ்வான் (மதனி) தெரிவித்தார்
அவர் மேலும் தெரி;விக்கையில்
இஸ்லாத்தில் பத்ர் யுத்தம் எமக்கு ஒரு படிப்பினையாகும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கல்விக்காக யுத்தக்கைதிகளை எவ்வாறு நடாத்தினார்கள் என்பதை பார்க்கும்போது 10 சிறார்களுக்கு தான் கற்ற கல்வியை கற்பித்த பின்னர் விடுதலை பெற்று செல்லலாம் என கைதிகளிடம் கூறினார்கள் எனவே கல்விக்கான முக்கியத்துவம் பற்றி இஸ்லாம் மிக வலியுறுத்தியுள்ளது 
எமது தாய்மார் பிள்ளைகள் கற்கின்ற நேரத்தினையும் பார்க்காது தொலைக்கட்சிகளில் சீரியல் நாடகங்கள் பார்ப்பதிலே மூழ்கிக் காணப்படுகின்றனர் இவ்வாறிருந்தால் எவ்வாறு எமது பிள்ளைகள் கற்கும் சூழல் உருவாகும.; அதற்காக தொலைக்காட்சி பார்க்க வேண்டாம் என கூறவில்லை தொலைக்காட்சிகளில் சமூகத்திற்கு மற்றும் கல்விக்கு தேவையான முக்கியமான விடயங்களும் காண்பிக்கப்படுகின்றன. அவ்வாறு தொலைக்காட்சி பார்க்காது தடுத்தால் அயல் வீடுகளுக்கு எமது பிள்ளகைள் சென்று பார்க்க முயற்சிப்பார்கள் எதற்கும் ஒருவரையறையுடன் பிள்ளைகளுக்கான நேர சூசி ஒன்றினை வீட்டில் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும்
எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி தாம் கற்ற கல்வியை மற்றவருக்கும் பயனடையக்கூடிய வகையில் அதைக் கற்க வேண்டும் என தனதுரையில் அவர் மேலும் தெரிவித்தார்



avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :