Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 23, 2015

avathani Media Network

தாஜு­தீனின் உடல் மாதிரிகள் காணாமல் போயுள்ளன: சி.ஐ.டி. அதிர்ச்சி தகவல்

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட உடல் மாதிரிகள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்பில் கொழும்பு மேல­திக நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போதே குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய கல்­கிஸை மேல­திக நீதிவான் முன்­னி­லையில் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் உள்­ளிட்ட குழு­வி­னரால் தோண்டி எடுக்கப்பட்ட தாஜு­தீனின் சடலத்தின் பிரேத பரிசோதனையை முன்னாள் சட்ட வைத்திய தலைமை அதிகாரி ஆனந்த சமரசேகர மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக வைத்திருந்த தாஜு­தீனின் உடல் மாதிரிகள் திடீரென காணாமல் போயுள்ளதாக ஆனந்த சமரசேகர தெரிவித்ததாக குற்ற புலனாய்வு பிவிரினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 
இதேவேளை தாஜு­தீனின்  சடலத்தில் இருந்து பெறப்பட்ட  உடல் மாதிரிகள் ஒன்று கூட கிடைக்கவில்லை என  கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோனும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் உள்­ளிட்ட குழு­வி­னரின்  கட்டுப்­பாட்டில் இருந்த வஸீம் தாஜு­தீனின் எலும்பு மாதி­ரி­கள், மூலக்கூறுகள் தொடர்­பான சோத­னை­க­ளுக்­காக புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் பிரிவின் சார்ஜன்ட ரத்னபிரிய ஊடாக ஜீன்டெக் நிறுவனத்துக்கு ஒப்படைக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :