அன்புப் பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு.
இடம் பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலும் தற்போதைய அரசியல் சூழலும் எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை மாலை இன்று 7.00 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதி குர்ஆன் சதுக்கத்தில் காத்தான்குடி முன்னால் நகரசபைத் தவிசாளர் அல்ஹாஜ் SHM அஸ்பர் JP அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் இந்நாள் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான தாஜுல் மில்லத் கௌரவ அல்ஹாஜ் MLAM ஹிஸ்புல்லாஹ் MP அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
அத்தோடு இன்னும் சில முக்கியஸ்தர்களும் இந்திகழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றார்கள். எனவே இம்மாபெரும் கூட்டத்தில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழு சார்பாக அன்போடு அழைக்கின்றோம்.
