Featured Home (TOP)

Recent Comments

Sunday, September 6, 2015

avathani Media Network

நிதி அமைச்சர் ரவி கருணானாயக்க விஷேட துஆ பிரார்த்தனையில் பங்கேற்றார்.


(S.M.M. முஸ்தபா)

கொழும்பு 7 இல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தெவட்டகஹா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற அஷ;nஷய்ஹ் உஸ்மான் இப்னு அப்துர் ரஹ்மான் அஸ்ஸித்தீகி அவர்களின் 198 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்பள்ளிவாயலில் தொடர்ந்து 10 தினங்கள் மனாகிப் மௌலூத் குர்ஆன் பாராயணம் மற்றும் சமய நிகழ்வுகளின் நிறைவு வைபவம் 04.09.2015 ஆந் திகதி இடம்பெற்ற போது விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இவ்விஷேட துஆ பிரார்த்தனையில் தேசிய அரசாங்கத்தின் மீண்டும் நிதி அமைச்சராக நியமனம் பெற்ற பின் முதன் முறையாக நிதி அமைச்சர் ரவி கருணானாயக்க கலந்து கொண்டார்.

இப்பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரவி கருணானாயக்க அவர்களை பள்ளிவாயல் நிர்வாக சபை தலைவர் ரியாஸ் சாலி சமய விவகாரங்களுக்கு பொறுப்பான கலாநிதி அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா மற்றும் பலாஹ் மௌலானா ஆகியோர் வரவேற்றனர்.

அமைச்சர் ரவி கருணானாயக்க அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி கொழும்பு மாகாண சபை உறுப்பினர் உட்பட பல முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

நல்லாட்சி நிலவவும் நாட்டில் அமைதி சமாதானம் சகவாழ்வு சுபீட்சம் உருவாகவும் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையை காரி அல்ஆலிம் பைஸல் சிங்கள மொழியில் நிகழ்த்தினார். வுரவேற்புரையை கலாநிதி அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா நிகழ்த்தினார்.

பள்ளிவாயல் பிரதம இமாம் மௌலவி எம். முகர்ரம் அஸ்ஹரி உதவி இமாம்களான மௌலவி வஜ்ஹூத்தீன் ரிஸ்வி மின்ஹாஜி மௌலானா மக்பூல் யமனி மற்றும் இறைபணியாளர்கள் ஆகியோர் இப்பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். 

அமைச்சர் துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டிருப்பதையும் மஸ்ஜித் நிர்வாகத்தினால் பொண்ணாடை போர்த்தி வாழ்த்து தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.








avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :