இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை
நடத்துவதாக பிரதமர் ரணில் ஜப்பானில் வைத்து சொல்லியுள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில்
ஈடுபடுவதை உலமா கட்சி வரவேற்கிறது. இது பற்றி பகிரங்கமாக ஜப்பானில்
வைத்து கூறியமைக்காக பிரதமர் ரணிலை உலமா கட்சி பாராட்டுகிறது.
ஆனாலும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்பது வெறுமனே அரசுக்கும்
தமிழர் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க
முடியாது. மாறாக நாட்டின் இன்னொரு தேசிய இனமான முஸ்லிம்களுடனும் பேச்சு
வார்த்தை இடம்பெற வேண்டும் என்பதே யதார்த்தமாகும். பேச்சு வார்த்தையில்
முஸ்லிம்கள் சார்பாக அரசோ தமிழ் கூட்டமைப்போ செயற்பட முடியாது.
பிரதமர் ஜப்பானில் வைத்து முஸ்லிம்களுடனும் பேச்சுவார்த்தையில்
ஈடுபடுவதாக சொல்லாததன் காரணமாக முஸ்லிம்களுடன் எத்தகைய
பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்ற செய்தி பெரிதும் கவலை
தருவதாகும். இத்தகையதொரு கீழ் நிலைக்கு முஸ்லிம் அரசியல் சென்றமைக்கு
முஸ்லிம் கட்சிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்
பொறுப்புக்கூற வேண்டும்.
ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பேச்சில் முஸ்லிம்களையும் உள்ளடக்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ முயற்சி எடுக்க வேண்டும் என முஸ்லிம்
உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)