Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 16, 2015

avathani Media Network

தம்பியை கைது செய்து வைத்திருந்த இராணுவத்தினர் அவரை வீடுவிப்பதற்காக என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியிருந்தார்கள்

தம்பியை கைது செய்து வைத்திருந்த இராணுவத்தினர் அவரை வீடுவிப்பதற்கான என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியிருந்தார்கள் என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பெண்ணெருவர் சாட்சியமளித்திருந்தார்.
பாலியல் இலஞ்சம் கொடுப்பதற்கு மறுத்ததால் தம்பிணை ஒவ்வொரு படைமுகாமாக மாற்றிய இராணுவத்தினர் அவரை காணாமல் போகச் செய்துவிட்டார்கள் என்றும் அப்பெண் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காணமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழவினர் நேற்று சங்காணை பிரதேச செயலகத்தில் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இதன் போது தெல்புரத்தில் இருந்து வந்து பெண்னொருவரே மேற்கண்டவாறு சாட்சியம் வழங்கியுள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
கடந்த 1997 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 4 ஆம் திகதி எமது பிரதேசத்தில் நடைபெற்ற இராணுவ சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்த எனது 23 வயது தம்பிணை இராணுவம் விசாரணைக்கென கூட்டிச் சென்றது.
3 நாட்களாக எனது தம்பியை அவர்கள் விடுவிக்க வில்லை. இந்நிலையில் 7 ஆம் திகதி காலை எனது தம்பியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் தம்பிணை வாகத்திலேயே இருந்துவிட்டு வீட்டிற்குள் வந்தனர்.
வுpட்டிற்கு வந்த இராணுவத்தினர் எல்லோரையும் வீட்டு முற்றத்திற்கு அழைத்து அங்கே இருக்குமாறு கூறினர். ஏன்னை மட்டும் எழுந்து வருமாறு இராணுவத்தினர் அழைத்தனர். 7 இராணுவத்தினர் என்னை சூழ்ந்து நின்று விசாரணை நடத்தினர்.
அப்போது எனது பிள்ளையை தூக்கிக் கொண்டுதான் நான் இராணுவத்திற்கு அருகில் சென்றிருந்தேன். புpள்ளையை அங்கிருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் வருமாறு இராணுவத்தினர் வர்புறத்தினார்கள். நான் வீட்டிற்குள் போவதற்கு மறுத்துவிட்டேன்.பலமுறை வீட்டிற்குள் தனியாக வருமாறு இராணுவம் என்னை அச்சுறத்தியது. ஆனால் நான் வீட்டிற்குள் செல்வதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இரர்ணுவத்தினர் தம்பியை விடுதலை செய்ய வேண்டுமானால் நாளை தனியாக மாவடி இரர்ணுவ முகாமிற்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு தம்பியையும் கூட்டிக் கொண்டு இராணுவத்தினர் சென்றனர்.
அங்கிருந்து சென்ற இராணுவத்தினை பின்தொடர்ந்து சென்றோம். ஏனது தம்பியை கூட்டி வந்த வாகனம் மாவடி படைமுகாமிற்குள் சென்றது. அங்கேயே நாங்களும் இருந்தோம். இரவாகியும் தம்பியை அவர்கள் விடுவிக்கவில்லை. இதனால் வீட்டிற்கு வந்துவிட்டோம்.
முறநாள் அதிகாலையே அம்முகாமிற்கு சென்றோம். ஆப்போது அங்கிருந்து இராணுவத்தினர் அவரை உடுவில் முகாமிற்கு மாற்றிவிட்டோம் அங்கே போய் பாருங்கள் என்றனர். ஊடனடியாகவே உடுவில் படைமுகாமிற்கு சென்றோம்.
அங்கிருந்து இராணுவத்தினர் அவரை விசாரணைக்காக கொழும்பிற்கு அனுப்பிவிட்டோம். அவருடன் சேர்ந்து மேலும் சிலரையும் விசாரணைக்காக அனுப்பிவைத்தோம். வுpசாரணை முடிந்ததும் வந்துவிடுவார்கள் என்று சொன்னார்கள்.
20 வருடங்களாகியும் இராணுவத்தின் விசாரணை முடித்து தம்பி இன்னும் வீடு வந்து சேரவில்லை. இராணுவத்திடம் இருக்கும் எனது தம்பியை மீட்டுத் தாருங்கள் என்று அந்த பெண் ஆணைக்குழவிடம் கேட்டுக் கொண்டார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :