Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 16, 2015

avathani Media Network

அபிவிருத்திக் குழு தலைவர்களாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் நியமனம்?

மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 மாவட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய,
யாழ்ப்பாணம்      -  மாவை சேனாதிராஜா,
வவுனியா             –  செல்வம் அடைக்கலநாதன்
கிளிநொச்சி          -  எஸ்.சிறீதரன்
மன்னார்                -  சார்ள்ஸ் நிர்மலநாதன்
முல்லைத்தீவு     –  எஸ். சிவமோகன்
மட்டக்களப்பு        -  ஜி.சிறீநேசன்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இணைத் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பாரப்பு தம்மிடம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டன.
புதிய அரசாங்கத்தினாலும் ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளிலும் சில நாட்களிற்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த இணைத் தலைவர் பதவிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை காரணமாகவே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :