
மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளின் நிலை...? தெளிவுபடுத்துகிறாா் சிப்லி பாறூக்
(ஏ.எல்.டீன் பைரூஸ். ஜுனைட் .எம்.பஹ்த் )
அண்மைக்காலமாக மண்முனைப்பற்று பிரதேசத்தில்
முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளென்பது எடுப்பார் கைப்பிள்ளை போன்று கையாளப்படுவதை எங்களால் அவதானிக்க முடிகின்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிகரம் பிரதேசத்தில் அமைந்துள்ள நூறு ஆண்டுகளுக்கு மேலான
முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீக காணியில் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை
அமைப்பதற்கு முயலுகின்ற போது ஆரம்பத்திலேயே எந்த அடிப்படையும் இல்லாமல் இதனை அரச காணியென்று வாதிட்டனர், இதன் பின்னர் அக்காணியானது தனியார் காணியென உறுதிப்படுத்தப்பட்டு அக்
காணியில் கட்டிட நிர்மாணத்திற்குரிய அனுமதிகள் மண்முனைப்பற்று பிரதேச சபை
செயலாளரினால் வழங்கப்பட்டன.
.jpg)



