Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 7, 2015

Unknown

"தோட்டம் முதல் உணவு தட்டு வரை உணவை பாதுகாப்போம்" எனும் கருப்பொருளில் இன்று உலக சுகாதார தினம் அனுஸ்திக்கப்படுகிறது


1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் திகதி உலக சுகாதார மையம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை உலக சுகாதார தினமாக உலக சுகாதார நிறுவனம்
கடைப்பிடித்து வருகிறது.



மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு சத்துள்ள, பாதுகாப்பான உணவு அவசியம். ஆனால், இன்று பசுமைப் புரட்சி என்ற பெயரால் விளைச்சலை அதிகரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மலடாகி வருகின்றன. அந்த நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும், உணவுப் பொருட்களும் விஷமாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்கி வருகின்றன.



உணவு உற்பத்தி இயந்திரமயமாக் கப்பட்டதாலும், அவற்றின் விற்பனை உலகமயமாக்கப்பட்டதாலும் உணவுப் பொருட்களின் தரமும் குறைந்துவிட்டது.



பாதுகாப்பற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் நுண் கிருமிகள், வேதிப்பொருட்கள் மனிதனுக்கு 200 வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன.



அதில் மிக முக்கியமானது, இன்று மனித உலகை அச்சுறுத்திவரும் புற்றுநோய். அதனாலேயே, இந்த ஆண்டு உலக மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க "தோட்டம் முதல் உணவு தட்டு வரை உணவை பாதுகாப்போம்" என்ற கருப்பொருளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



(ஜுனைட் .எம்.பஹ்த்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :