Featured Home (TOP)

Recent Comments

Friday, January 22, 2016

avathani Media Network

பிரதேச செயலகத்தினால் சம்மாந்துறை வறிய மக்களுக்கு வீடுகள் கையளிப்பு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு சமூர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவுடன், பிரதேச செயலகம் இணைந்து உருவாக்கிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறையில் இடம் பெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளித்தார்.

மேலும் இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.எம்.எம்.சஃபீர், சமூர்த்தி வங்கி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம்.ஹுசைன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து, சிறப்பித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இப்பிரதேசத்திலுள்ள எல்லா ஏழை மக்களுக்கும் ஒரே நேரத்தில் அரசாங்க நிதியில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதென்பது முடியாத காரியமாகும். எனவே கிராம சேவை உத்தியோகத்தர், அல்லது சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிபார்சின் பேரில், அரசிடமிருந்து கிடைக்கும் நிதிநிலைமைக்கேற்ப கட்டங்கட்டமாக உதவிகள் செய்யப்படும். கிடைத்தவர்கள் போக ஏனையவர்கள் பொறுமை காக்கவேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.










Read More
avathani Media Network

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக விழிப்படைவோம்! நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள்,  கருத்துப் பரிமாறல்கள்  நாட்டின் பல்வேறு மட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே.
பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் மக்களின் கருத்துக்களைத் திரட்டி எமது தேசத்திற்கான புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான சந்தர்ப்பத்தை நாம் முதற் தடவையாகப் பெற்றுள்ளோம். இவ்வரிய சந்தர்ப்பத்தில்  மக்களாகிய நாம் மிகவும் அவதானத்தோடும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டியுள்ளோம்.
1972ஆம், 1978ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இரண்டு குடியரசு யாப்புகளும் இவ்வாறான மக்கள் பங்குபற்றுதல் இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்டன. அன்றிருந்த அரசாங்கங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்  பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்திலேயே புதிய யாப்பினை உருவாக்கிக் கொண்டன. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் மக்கள் பங்குபற்றல் மிகவும் அரிதாகவே காணப்பட்டன.
ஆனால் இம்முறை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் விருப்பத்துடனேயே நிறைவேற்றப்பட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே இம்முறை வாக்காளர்களாகிய மக்கள் புதிய அரசியலமைப்பு குறித்த தமது ஆதரவை அல்லது எதிர்ப்பை முன்வைக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றுள்ளனர். அதனால் அரசியட் கட்சிகளும் அரசியல் வாதிகளும் தாம் விரும்பியவாறு இம்முறை  அரசியலமைப்பு மாற்றத்தை செய்து விட முடியாது. எனவே வாக்களர்களாகிய மக்கள் விழிப்புணர்வுடனும் அவதானத்துடனும் செயற்பட்டால் மக்கள் நலன் சார்ந்த அரசியலமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அந்த வகையில் சமூகத்தின் புத்தி ஜீவிகள், மதப் பெரியார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இவ்விடயத்தில் மக்களை வழிநடாத்தும் தார்மீகப் பொறுப்பினையும் கடமையையும் நிறைவேற்ற முன்வரவேண்டும்.
அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பொன்றே இம்முறை எத்ர்பார்க்கப்படுகிறது. இதுவரை மத்திய அரசிடம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் மாகாண அரசுக்கு பகிரப்படப் போகின்றன. தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன, அதனையொட்டிய புதிய தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.
இவ்வாறான மாற்றங்கள் எமது மாவட்டத்தில் அல்லது  மாகாணத்தில் எத்தகைய சமூகப், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றன என்பது குறித்து அந்தந்த மாவட்டத்தில் மாகாணத்தில் உள்ள சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் செயட்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும்.
புதிய அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் என்பது குறித்த கால வரையறைக்குள் செய்யப்படவுள்ளதால் அதற்கேற்றவாறு முனைப்புடன் செயற்படவேண்டிய தேவையுள்ளது.
அந்த வகையில் மாவட்ட, மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப் படவேண்டிய நடவடிக்கைகள்
அ. அரசியமைப்பு மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்
ஆ. அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் தமது மாவட்டத்தில், மாகாணத்தில் எவ்வாறான சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனை அடையாளம் காணுதல்.
இ. அதற்கேற்றவாறு தமது மாவட்டம் மாகாணம் சார்ந்த முன்மொழிவுகளை அரசியலப்பு சபைக்கு முன்வைத்தல்.
ஈ. புதிய அரசியலமைப்பிற்கான  வரைபு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் போது நாம் சமர்ப்பித்த முன்மொழிவுகள் எவ்வளவு தூரம் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அவதானித்தல்.
உ. புதிய அரசியலமைப்பில் தமது முன்மொழிவுகளை உள்வங்குவதற்கான அழுத்தங்களை தமது மக்கள் பிரதிநிதிகளுடாக ( பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள்) அரசாங்கத்திட்கு ஏற்படுத்தல்.
ஊ. அவ்வாறு தமது மாவட்ட மாகாண மக்களின் அபிலாஷைகள் எதிர்பார்ப்புகள் புதிய அரசியலமைப்பில் கவனத்திகொள்ளபாடாத விடத்து சர்வஜன வாக்கெடுப்புக்கான பிரச்சாரம் நடைபெறும் போது மேற்படி விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தி சர்வஜென வாக்கெடுப்பில் தமது மாவட்ட மாகாண மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற வழிகாட்டலை மக்களுக்கு வழங்குதல்.
மேற்படி செயற்திட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாகாணத்திலும் உள்ள தன்னார்வ செயற்பாட்டளர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் முன்னெடுக்க முடியும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இது விடயத்தில் தனது  தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் ஓர் ஆரம்ப கலந்துரையாடலை கடந்த 2015 ஜனவரி 20 ஆம் திகதி கொழும்பில் நடத்தியது.
அடுத்த நிகழ்வாக எதிர்வரும் 2015 ஜனவரி 25 ஆம் திகதி திங்கட்கிழமை அரசியலமைப்பு கட்கைக்கான நிறுவனத்துடன் இணைந்து நல்லட்சிக்காண தேசிய முன்னணி கொழும்பில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது. இக்கலந்துரையாடலின் வளவாலர்களாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அரசியலமைப்பு நிபுணர்கள் மூவர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்து பரந்துபட்ட பல்லின மக்கள் வாழும் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பைக் கொண்ட நாடு, அந்த வகையில் அவர்களது அனுபவம் எமக்கான அரசியலமைப்பு முன் மொழிவுகளை தயாரிப்பதற்கு உதவியாக அமையும். 
எனவே இக்கலந்துரையாடலில் பங்கேற்க விரும்புகின்றவர்களும் தொடர்ந்தும் மாவட்ட மாகாண மட்டத்தில் இவ்விடயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களும் பின்வரும் மின்னஞ்சல் அல்லது கையடக்கத் தொலை பேசியுடன் தொடர்பு கொள்ளவும்.
e mail: nfgglk@gmail.com, mobile: 0773868126



Read More
avathani Media Network

"வஹ்ததுல் வுஜூத்"- எல்லாம் அவனே எனும் கொள்கை தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் விழிப்புணர்வு பிரசுரம்..

Read More
avathani Media Network

கஸ்ட நிலையில் இயங்கும் பாலர் பாடசாலையினை அப்துர் ரஹ்மான் நேரில் பார்வையிட்டார்.



மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் காத்தான்குடி உமர் பாலர் பாடசாலையின் நிலைமையினை NFGG தவிசாளர் பொறுயியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதோடு இம் மாணவர்களுக்கு புத்தகப்பைகளையும் அவர் வழங்கி வைத்தார்.

காத்தான்குடியில் பின்தங்கிய கரையோர பிரதேசங்களில் ஒன்றான அப்ரார் கிராமத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் இந்த பாலர் பாடசாலையின் நிர்வாகத்தினரோடும் ஆசிரியைகளோடும் அப்துர் ரஹ்மான் நேரில் கலந்துரையாடியதோடு அப் பாடசாலையில் கல்வி கற்கும் 24 மாணவர்களின் நிலை விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார். அத்தோடு அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலரையும் நேரில் சந்தித்தார்.

அப்ரார் பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அப்பிரதேசத்தில் கல்வி மையம் ஒன்றினை சில வருடங்களுக்கு முன்னர் NFGG அமைத்துக் கொடுத்திருந்தது. பாலர் பாடசாலையினை நடாத்துவதற்கான இடவசதியின்றி அதனை மூடிவிடுவதற்கான முடிவினை எடுக்க வேண்டிய நிலையில் உமர் பாலர் பாடசாலை நிர்வாகிகள் இருந்த வேளையில்  NFGG அவர்களுக்கு கைகொடுத்திருந்தது.அந்த வகையில் குறித்த பாலர் பாடசாலை கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக NFGG கல்வி மையத்திலேயே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய விஜயத்தின் போது இம் மாணவர்களுக்கு புத்தகப்பைகளையும் அப்துர் ரஹ்மான் வழங்கி வைத்ததோடு இம் மாணவர்களுக்கான சீருடைகளை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு அதற்கான முதற்கட்ட நிதியுதவிகளையும் உமர் பாலர் பாடசாலை நிர்வாகத்திடம் நேற்றுக் கையளித்தார்.

இப்பாலர் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தம்மாலான முழு உதவிகளையும் NFGG வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.










Read More
avathani Media Network

தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் நாட்குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) 
அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை தமது அங்கத்தவர்களுக்கு 2016ம் ஆண்டுக்கான நாட்குறிப்பேட்டுப் புத்தகங்கள் (டயறிகள்) வழங்கும் நிகழ்வு நேற்று காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் ஜலீல் ஜீ தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரபல சமூகசேவையாளரும், காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரியுமான பரதன் கந்தசாமி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நாட்குறிப்பேடுகளை வழங்கி வைத்தார்.






Read More
avathani Media Network

மாணவர் சமூகம் உடற்பயிற்சி அற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டு வருகின்றனர்- மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் மற்றும் விஷேட தினம்
2016 ஜனவரி 25 தொடக்கம் 30 வரையிலான காலம் வரை நாடுமுழுவதும்
அனுஷ்டிக்கப்படவுள்ளது, இந்நிகழ்வை காத்தான்குடி பிரதேசத்தில் சிறப்புற
நடாத்துவதற்கான ஒரு கலந்துரையாடல் நிகழ்வொன்று பிரதேச செயலாளர் SH.முசம்மில் (SLAS) அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (19.01.2016) அன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் அவர்கள், காத்தான்குடி நகரசபை செயலாளர், ஜம்மியத்துல் உலமா தலைவர், சம்மேளன பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள்
மற்றும் பல சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் கலந்து சிறப்பித்து கருத்து தெரிவிக்கும் போது. அதி மேதகு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கமைவாக இவ்வாறான நல்லதோர் செயல்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டிருப்பது வெறுமனே ஒரு வாரத்தில் மாத்திரம் செயல்படுத்திவிட்டு
அதனை விட்டுவிடுவதற்காக அல்ல, தொடர்ச்சியாக ஒரு ஆரோக்கியமிக்க சமூகத்தினை
உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலாகும்.
இலங்கையில் அதிகளவிலான மக்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அன்மையில் கிடைத்த
ஆய்வுகளின்படி 10 நபர்களில் 4 நபர்கள் இந்த நீரழிவு நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஓர் கவலையான நிலைமை எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது, அது மட்டுமன்றி இலங்கையில் இலவசமாக கிடைக்கின்ற வைத்திய சிகிச்சை மூலம் இந்நோய்க்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்கின்றார்கள், இதனால் சுகாதாரதுறைக்காக ஒரு பாரியளவிலான நிதி இலங்கை அரசினால் செலவிடப்படுன்றது.
எனவே ஒரு நோய் எமக்கு வருவதற்கு முன் அந்நோய் ஏற்படாமல் இருப்பதற்காக
தற்பாதுகாப்பினை மேற்கொள்வது மிகவும் சிறந்ததாக அமையும். இன்றைய நிலையில் காத்தான்குடி பிரதேசத்தில் வாழும் அனேகமாவர்கள் நீரழிவு நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளதனை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது, அதற்கு மிக முக்கியமான காரணம் போதியளவு உடற்பயிற்சி இன்மையும், சரியானதோர் கட்டுக்கோப்பான
உணவு பழக்கவழக்கம் இன்மையுமாகும். அந்த வகையில் பிரதேச செயலாளர் தனக்கு கிடைத்த முன்மொழிவின் பிரகாரம் இன்று அதற்கான ஆரம்ப படியாக அதனை 1 வாரத்திற்குள் செயற்படுத்துவதற்காக வடிவமைத்து கொடுத்திருக்கின்றார்.
ஆனால் இதனை தொடர்ச்சியாக இங்கிருக்கும் இளைஞர் கழகங்கள், சமூக அமைப்புக்கள்,
ஜம்மியத்துல் உலமா மற்றும் சம்மேளனம், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், மற்றும்
அனைவரும் தொடர்ச்சியாக ஆரோக்கியத்தினை பேணுவதற்குரிய எந்த விடயங்களை முன்கொண்டு செல்ல முடியும் என்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் இது எனது தாழ்வான வேண்டுகோள் என்று தனது கருத்தினை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் குறிப்பாக பாடசாலைகளில் கல்விகற்கும்
பிள்ளைகளுடைய பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் வரவேண்டும், இன்றைய காலகட்டத்தில்
பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கு நேரம் கிடைப்பது என்பது மிகவும் குறைவு ஏனென்றால் பாடசாலைவிட்டு வந்தவுடன், மார்க்க கல்வி கற்பதற்கா சென்று
வருகின்றனர், அதன் பின் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வீடு வரும்போது இரவு
நேரமாகி விடுகின்றது அதன் பின் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு விட்டு சிறிது
நேரம் வீட்டில் இருந்து படித்து விட்டு தூங்க செல்கின்றனர், பின்னர் அதிகாலையில் எழுந்து மீண்டும் பாடசாலைக்கு செல்கின்றனர், அவர்கள் எடுத்துச்
செல்லும் பாடசாலை பையினை பார்க்கும் பொழுது அதனை மிகவும் கஷ்டப்பட்டு சுமந்து
செல்கின்றனர் அதற்காக வேறு ஒரு வாகனம் தேவை என தோன்றுகின்றது. பெற்றோர்கள்
தமது பிள்ளைகள் வகுப்பில் 1ம் நிலையை அடைய வேண்டும், புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற போட்டித்தன்மை காரணமாக பிள்ளைகளை அவர்களுடைய சக்திக்கு அதிகமாக செயற்பட வைக்கின்றனர், அதனால் பிள்ளைகள் உடற்பயிற்சி அற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டு வருகின்றனர்.
சாதாரணமாக தற்போது 30 வயதினை கடந்த ஒருவரிடம் கேட்டால் இரத்த அழுத்தம்,
நீரழிவு நோய், மூட்டுவழி உபாதை போன்ற பல நோய்கள் இருக்கின்றது என்கின்றார்,
இக் காலகட்டத்திற்கு முன் வாழ்ந்த எமது மூதாதையர்களை கேட்டால் 50, 60 வயது
வரும் வரை அவர்களுக்கு இவ்வாறான நோய்கள் ஏற்பட்டதில்லை என்கின்றார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், வாழ்கையினுடைய பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செயற்பாடுகள் சிறந்தமுறையில் இருந்ததனால் அவர்களுடைய
ஆரோக்கியம் நல்லமுறையில் பேணப்பட்டது. ஆகவே அவ்வாறானன ஓர் சமூகத்தினை நாம் உருவாக்க வேண்டும்.
இதற்காக வேண்டி இங்குள்ள இளைஞர் கழகங்கள், சமூக
அமைப்புக்கள், பாடசாலை குழுக்கள், சமுர்த்தி குழுக்கள் இவ்வாறான பல குழுக்களை
ஒன்றினைத்து ஒரு கண்காணிப்பு குழுவொன்றினை நியமித்து, இதனை மேன்படுத்த
எவ்விதமான நடவடிக்கையினை மேற்கோள்ள வேண்டும் என்ற விடயத்தினை கருத்திற்கொண்டு
இந்த செயற்பாட்டினை ஒரு வாரம் மாத்திரம் செயல்படுத்திவிட்டு விட்டுவிடாமல்
குறைந்த பட்சம் 10 வீதமாவது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுமாக இருந்தால் ஒரு
பாரியளவிலான மாற்றத்தினை காணலாம். அதற்கான உரிய நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
அத்துடன் பிரதேச செயலாளர் அவர்கள் காத்தான்குடி பொது மைதானத்தினை
விளையாட்டுத்துறை திணைக்களத்திலிருந்து சட்டபூர்வமாக விடுவித்து அதனை காத்தான்குடி நகரசபைக்கு கையளிக்க வேண்டும், மேலும் இப் பொது மைதானத்தின் இரு
பக்கங்களும் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்ற ஒரு அவல நிலைமை
காணப்படுகின்றது, எனவே அதனை தடுத்து மைதானத்தினை சீர்செய்து பிள்ளைகள்
விளையாடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காத்தான்குடி நகரசபை செயலாளர் திரு. சர்வேஸ்வரன் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன் என்று தனதுரையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் அல்ஹாஜ் ஷிப்லி பாறூக்
தெரிவித்தார்.






6 Attachments
Read More