Featured Home (TOP)

Recent Comments

Monday, May 4, 2015

Unknown

தானம் வழங்குவதாக விகாரைகளில் பல இலட்சம் நிதி மோசடி செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்



தானம் வழங்குபவர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு கிராமங்களில் உள்ள விகாரைகளில் பல இலட்சம் ரூபா நிதி மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் வைத்து நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More
Unknown

மைத்திரி-மஹிந்த நாளை சந்திக்கலாம்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான  சந்திப்பு நாளை  ஐந்தாம் திகதி  செவ்வாய்க்கிழமை  நடைபெறலாம்    அரசியல் வட்டாரங்களில்  இருந்து தெரியவருகின்றது. 
இதற்கு முன்னர் இந்த பேச்சுவார்த்தை   நடைபெறவிருந்த போதிலும்  பல்வேறு காரணங்களினால்  நடைபெறவில்லை. இந்நிலையிலேயே    நாளை  செவ்வாய்க்கிழமை   சந்திப்பு  இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படுகின்ற  சிக்கல்கள்  உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள் குறித்து இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  திகதி ஒதுக்கியுள்ளதாக    இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே கடந்த  மேதினத்தன்று தெரிவித்திருந்தார். 

முரண்பாடுகளை களைந்துகொள்ளும்  நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  

Read More
Unknown

"இனவாதமும் பிரதேச வாதமுமே நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சாபக்கேடுகாளகும்": NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

"நமது முன்னேற்றத்திற்கு தடையாக நம்மை பீடித்திருக்கும் இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. நம் மத்தியில் நிலவும் பிரதேசவாதம் மற்றும் இனவாதம் என்பனவே அந்த சாபக்கேடுகளாகும். இவற்றிலிருந்து மீண்டு வந்தால் மாத்திரமே நமது சமூகங்கள் முன்னேற முடியும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 1 ஆம் திகதி காத்தான்குடியில் நடை பெற்ற NFGGயின் மே தின நிகழ்வின் போது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
Read More
Unknown

நேபாள நிவாரணத்துக்கு பேஸ்புக் மூலம் ரூ.72 கோடி திரண்டது.


நேபாள நாட்டில் கடந்த 25-ந் தேதி 7.9 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 6,624 ஆனது. இந்தஎண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுதவிர 14,025 பேர் காயம் அடைந்துள்ளனர். நேபாளத்தின் மலைப்பகுதிகள் ஏறக்குறைய முற்றிலும் அழிந்துவிட்டது. நிவாரண பணிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள மனிதநேய அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
Read More